Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

திண்டுக்கல்லில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்ஆத்தூர் நீர்தேக்க உயரத்தை அதிகரிக்க முவு

Print PDF

தினமலர்                                   03.09.2012

திண்டுக்கல்லில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்ஆத்தூர் நீர்தேக்க உயரத்தை அதிகரிக்க முவு

திண்டுக்கல்:குடிநீர் பஞ்சம் ஏற்படாமல் இருப்பதற்காக ஆத்தூர் நீர்தேக்கத்தின் உயரத்தை அதிகரிப்பது குறித்து ஆலோசனை நடக்கிறது.திண்டுக்கல் நகராட்சி கூட்டம் தலைவர் மருதராஜ் தலைமையில் நடந்தது. குடிநீர் பிரச்னையை தீர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அவர் கூறியதாவது: ""மழை இல்லாததால் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. வறண்டுபோன காவிரியிலிருந்து போதுமான தண்ணீர் கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது. பேரணை செயல்படாமல் உள்ளது.

ஆத்தூர் நீர்தேக்கம் மட்டுமே தற்போதைக்கு ஆறுதல் அளிக்கிறது.இதனால்தான் மழை காலம் துவங்குவதற்கு முன்னதாகவே அதை தூர்வார வேண்டுமென்று போர்க்கால நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம். தண்ணீரை பெருமளவில் உறிஞ்சிக்கொண்டிருந்த கருவேல மரங்களை வேரோடு அகற்றியுள்ளோம். வண்டல் மண் அள்ளப்பட்டு, போதுமான அளவிற்கு ஆழம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கரையை மேலும் இரண்டு அடி உயர்த்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

 

ஆம்பூர் நகர காவிரி கூட்டு குடிநீர் திட்டப் பணிக்கு ரூ.15.87 கோடி ஒதுக்கீடு நகராட்சி தலைவர் தகவல்

Print PDF
தினகரன்           31.08.2012

ஆம்பூர் நகர காவிரி கூட்டு குடிநீர் திட்டப் பணிக்கு ரூ.15.87 கோடி ஒதுக்கீடு நகராட்சி தலைவர் தகவல்

ஆம்பூர், : ஆம்பூர் நகர குடிநீர் திட்டப்பணிகளுக்காக அரசு ரூ.15.87 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என நகராட்சி தலைவர் தெரிவித்தார்.ஆம்பூரில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் துவக்க விழா நேற்று நடந்தது.சாமியார்மடம் பகுதியில் நடந்த விழாவில், நகராட்சி தலைவர் சங்கீதா பாலசுப்பிரமணி தலைமை தாங்கி, பூமி பூஜையை துவக்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், ஆம்பூர் நகராட்சி பகுதியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு ரூ.15.87 கோடி தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் 32.75 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் மற்றும் 40 கி.மீ. நீளத்திற்கு குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட உள்ளது என்றார்.
 
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. அஸ்லம்பாஷா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். ஆணையாளர்(பொறுப்பு) குமார், அதிமுக நகர செயலாளர் மதியழகன், ஆம்பூர் அரசு மருத்துவமனை ஆலோசனை குழு உறுப்பினர் பாலசுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

குடிநீர் வழங்க புதிய மோட்டார் இயக்கம்

Print PDF

தினமணி                   31.08.2012

குடிநீர் வழங்க புதிய மோட்டார் இயக்கம்

உளுந்தூர்பேட்டை, ஆக. 30: உளுந்தூர்பேட்டை பேரூராட்சியில் கூடுதலாகப் புதிய குடிநீர் மோட்டார் வியாழக்கிழமை இயக்கி வைக்கப்பட்டது.

உளுந்தூர்பேட்டை பேரூராட்சிக்கு உள்பட்ட 14, 15, 16-ம் வார்டு பொதுமக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில், உளுந்தூர்பேட்டை-சென்னை சாலையில் உள்ள ஏரியில் ரூ.3 லட்சம் மதிப்பில் புதிய ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டது.

 ÷ அதிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் பைப் லைன் அமைத்து குடிநீர் விநியோகம் செய்ய பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து புதிய குடிநீர் மோட்டாரின் இயக்க விழா நடந்தது. பேரூராட்சித் தலைவர் க.ஜெயசங்கர் தலைமை வகித்து புதிய மோட்டாரை இயக்கி குடிநீர் விநியோகத்தைத் தொடங்கி வைத்தார்.

 செயல் அலுவலர் இந்திரா, கவுன்சிலர்கள் சீனுவாசன், முருகன், முன்னாள் கவுன்சிலர் பிரின்ஸ் செந்தில்குமார், பேரூராட்சி உதவியாளர் தங்கவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 


Page 95 of 390