Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

உடன்குடி பகுதியில் ரூ.9 கோடியில் புதிய குடிநீர் திட்டம்

Print PDF

தினகரன்                30.08.2012

உடன்குடி பகுதியில் ரூ.9 கோடியில் புதிய குடிநீர் திட்டம்

உடன்குடி, : உடன்குடியில் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூ9கோடியில் புதியதிட்டம் செயல்படுத்தப்போவதாக டவுன் பஞ். தலைவி ஆயிஷாகல்லாசி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த சில வருடங்களாக பருவமழை பொய்த்ததன் காரணமாக ஆற்றில் தண்ணீர் இல்லை. உடன்குடி - சாத்தான்குளம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இருந்து வரும் குடிநீர் குறைவாகவே உள்ளது.

பொதுமக்கள் குடிநீரை மின்மோட்டார் வைத்து உறிஞ்சுவது சட்டப்படி குற்றமாகும். அதனால் மின்மோட்டார் வைத்து பயன்படுத்துவது தெரியவந்தால் மின்மோட்டார் பறிமுதல் செய்து குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும். உடன்குடி நகர பகுதியில் தடையில்லாமல் தினசரி குடிநீர் சப்ளை செய்ய குரங்கணி பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து குழாய் மூலம் குடிநீர் கொண்டு வந்து சப்ளை செய்ய ரூ.9 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு முதல்வர் அனுமதி வழங்கியுள்ளார். இந்த திட்டத்திற்கான பணிகள் விரைவில் தொடங்கும். இந்தப்பணிகள் முடிந்து குடிநீர் சப்ளை செய்யும் போது உடன்குடி நகர பகுதியில் நிரந்தமாக குடிநீர் தட்டுப்பாடு நீங்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Last Updated on Thursday, 30 August 2012 10:19
 

குடிநீர் பிரச்னைக்கு தீர்வு: புதிய ஆணையர் உறுதி

Print PDF

தினமணி         28.08.2012

குடிநீர் பிரச்னைக்கு தீர்வு: புதிய ஆணையர் உறுதி

வேலூர், ஆக.27: வேலூர் மாநகராட்சி பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு உரிய தீர்வு காணப்படும் என்று புதிதாக பொறுப்பேற்றுள்ள மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் கூறினார்.

 வேலூர் மாநகராட்சி ஆணையராக பணிபுரிந்து வந்த சீனி.அஜ்மல்கான் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து வேலூர் மாநகராட்சி ஆணையராக ஜானகி ரவீந்திரன் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் ஏற்கெனவே தஞ்சாவூர் நகராட்சி ஆணையராகப் பணிபுரிந்து வந்தார்.

 வேலூர் மாநகராட்சியின் மேம்பாட்டுக்கான அனைத்து வகையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். நகரில் நிலவும் குடிநீர் பிரச்னை, சுகாதார சீர்கேட்டை விளைவுக்கும் குப்பைகள் ஆகியவற்றுக்கு உரிய தீர்வு காண முயற்சி எடுக்கப்படும்.

 மாநகராட்சி இடங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளோர் மீதான நடவடிக்கை தொடரும். பொதுமக்கள் அலுவலக நாள்களில் காலை 11 முதல் மதியம் 1 மணி வரை நேரில் சந்தித்துக் குறைகளை தெரிவிக்கலாம் என்றார் ஆணையர்.

Last Updated on Tuesday, 28 August 2012 10:58
 

விழுப்புரம் நகராட்சியில் குடிநீர் குழாய் சீரமைப்பு

Print PDF

தினமலர்     28.07.2012

விழுப்புரம் நகராட்சியில் குடிநீர் குழாய் சீரமைப்பு

விழுப்புரம் : விழுப்புரம் நகராட்சி குடிநீர் குழாய் சீரமைக்கும் பணியை சேர்மன் பாஸ்கரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.விழுப்புரம் நகராட்சிக்கு எல்லீஸ்சத்திரம் தென்பெண்ணையாற்றிலிருந்து குடிநீர் கொண்டு வரப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது. விழுப்புரம் வீரவாழியம்மன் கோவில் அருகே பாதாள சாக்கடை பணியின் காரணமாக முதன்மை குடிநீர் குழாயில் நேற்றிரவு 10 மணிக்கு திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் குடிநீர் முழுவதும் வெளியேறி வீணாகியதால், நகராட்சி பகுதியில் நேற்று குடிநீர் சப்ளை பாதிக்கப்பட்டது.இந்நிலையில் சேதமடைந்த குடிநீர் குழாயை சீரமைக்கும் பணி நேற்று காலை சேர்மன் பாஸ்கரன் மேற்பார்வையில் நடந்தது. இரண்டு மினி ஜெனரேட்டர் மூலம் குழாய்கள் அமைத்து குழாய் சேதமடைந்த பள்ளத்தில் இருந்த தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது. பின்னர் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் பழைய குழாய் அப்புறப்படுத்தப்பட்டு புதிய குழாய் இணைக்கப்பட்டது.நகராட்சி பொறியாளர் பார்த்தீபன், ஓவர்சீயர் ஜெய்பிரகாஷ் நாராயணன், கவுன்சிலர் நாராயணசாமி மற்றும் உதவியாளர் இளங்கோ உடனிருந்தனர்.
Last Updated on Tuesday, 28 August 2012 06:55
 


Page 96 of 390