Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

குடிநீரை சிக்கனம்: உடன்குடி பேரூராட்சித் தலைவி வேண்டுகோள்

Print PDF

தினமணி            24.08.2012

குடிநீரை சிக்கனம்: உடன்குடி பேரூராட்சித் தலைவி வேண்டுகோள்

உடன்குடி, ஆக. 23: தாமிரவருணி ஆற்றில் தண்ணீர் இல்லாததால் உடன்குடி மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது என்றும், அதனால் மக்கள் தண்ணீரை சிக்கனமாக உபயோகப்படுத்துமாறு உடன்குடி பேரூராட்சித் தலைவி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து உடன்குடி பேரூராட்சித் தலைவி ஆயிஷா உம்மாள் வெளியிட்ட அறிக்கை:

பருவமழை பெய்யாத காரணத்தால் ஏற்பட்ட வறட்சியின் காரணமாக, தாமிரவருணி ஆற்றில் தண்ணீர் இல்லாததால் உடன்குடி-சாத்தான்குளம் கூட்டுக் குடிநீர் திட்டத்திலிருந்து வரும் குடிநீரின் அளவு மிகக் குறைவாக உள்ளது. எனவே, பொதுமக்கள் குடிநீரை வீணாக்காமல், சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மேலும் மின் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுவதையும் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

 

கே.கே. நகர், எ.புதூர் பகுதிகளுக்கு லாரி மூலம் குடிநீர் விநியோகம்

Print PDF

தினமணி            24.08.2012

கே.கே. நகர், எ.புதூர் பகுதிகளுக்கு லாரி மூலம் குடிநீர் விநியோகம்

திருச்சி, ஆக. 23 : திருச்சி மாநகராட்சி கே.கே. நகர், எடமலைப்பட்டி புதூர் பகுதிகளில் லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது என மாநகராட்சி ஆணையர் வே.ப. தண்டபாணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருச்சி மாநகராட்சி பொன்மலை மற்றும் கோ.அபிஷேகபுரம் கோட்டத்தில் உள்ள 38,39 மற்றும் 40-வது வார்டு பகுதிகளுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பராமரிப்பில் உள்ள பிராட்டியூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் செல்லும் பிரதான குடிநீர் உந்து குழாயில் அரியாற்றுப் பாலம் கட்டும் பணியின்போது ஏற்பட்ட உடைப்பு காரணமாக கடந்த 16-ம் தேதி முதல் கே.கே. நகர், ராம்ஜி நகர், பிராட்டியூர், எடமலைப்பட்டி புதூர், ஐயப்ப நகர், கே. சாத்தனூர், அசோக்நகர், தங்கையா நகர், உடையான்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதைப் போக்குவதற்காக மாநகராட்சி மூலம் லாரிகளில் தாற்காலிகமாக ஆகஸ்ட் 16- தேதி முதல் 20-ம் தேதி வரை நாள்தோறும் 7 லாரிகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.

தற்போது அப்பகுதிக்கு கூடுதலாக குடிநீர் வழங்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததால், ஆக.21, 22 தேதிகளில் மட்டும் மாநகராட்சியின் லாரிகள் மூலம் நாள்தோறும் 60 நடைகள் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், வியாழக்கிழமை (ஆக.23) மாநகராட்சியின் 11 லாரிகளுடன் கூடுதலாக இரு தனியார் லாரிகள் மூலமும் குடிநீர் பற்றாக்குறை உள்ள இடங்களுக்கு குடிநீர் வழங்க மாநகர மேயர் அ. ஜெயா ஆலோசனையின் பேரில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

பிராட்டியூர் குடிநீர் திட்ட பிரதான குடிநீர் உந்துக்குழாய் சீரமைக்கும் பணி வியாழக்கிழமை மாலைக்குள் சரிசெய்யப்படுமென தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பகுதியில் குடிநீர் பற்றாக்குறை இருந்தால் 38,39 வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்கள் சாத்தனூர் பிரிவு இளநிலைப் பொறியாளர் அலுவலக தொலைபேசி எண்.2458558 மற்றும் 40-வது வார்டு பொதுமக்கள் கிராப்பட்டி பிரிவு இளநிலை பொறியாளர் அலுவலக தொலைபேசி எண். 2472862 மற்றும் இளநிலை பொறியாளர்கள் 9244637065 (38-வது வார்டு), 9443295493 (39-வது வார்டு),9443081883 (40-வது வார்டு- எ.புதூர்), 9443954707 (40-வது வார்டு - ராம்ஜி நகர், பிராட்டியூர்) ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் அந்தப் பகுதிக்கு மாநகராட்சி லாரி மூலம் குடிநீர் வழங்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.

Last Updated on Friday, 24 August 2012 10:39
 

தூத்துக்குடி மாநகராட்சி குடிநீருக்கு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

Print PDF
தினமலர்              24.08.2012

தூத்துக்குடி மாநகராட்சி குடிநீருக்கு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்ட குடிநீருக்காக பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் வரும் 26ம் தேதியில் இருந்து குடிநீர் சப்ளை சீராகும் என்று தலைமை நீரேற்றும் நிலையத்தை ஆய்வு செய்த மாநகராட்சி மேயர் சசிகலாபுஷ்பா தெரிவித்தார். மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

தூத்துக்குடி மாநகராட்சியில் எந்த ஆண்டும் இல்லாத வகையில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மக்கள் குடிநீருக்காக கடும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இந் நிலையில் நேற்று மாநகராட்சி மேயர் சசிகலாபுஷ்பா, கமிஷனர் மதுமதி, இன்ஜினியர் ராஜகோபாலன் மற்றும் கவுன்சிலர்கள் குழுவினர் நேற்று மாலை வல்லநாடு தலைமை நீரேற்றும் நிலையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

பாபநாசம் அணையில் இருந்து நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட குடிநீருக்காகவும், தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்கும் 405 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பாபநாசம் அணையை பொறுத்தமட்டில் நேற்றைய நீர்மட்டம் 41.05 அடியாகும். அணைக்கு வினாடிக்கு 324.42 அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இதில் தூத்துக்குடி மாவட்டத்திற்குரிய குடிநீருக்கு மருதூர் அணைக்கட்டிற்கு 180 கனஅடி தண்ணீர் வந்துவிட்டது. இதனை பொதுப்பணித்துறை தாமிரபரணி வடிநில கோட்ட உதவி செயற்பொறியாளர் கெங்காதரன், உதவி பொறியாளர் ரகுநாதன் ஆகியோர் பார்வையிட்டனர்.

வல்லநாடு ஆற்றுக்கு தாமிரபரணி அணை நீர் வந்து விட்டதால் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்கு பம்பிங் செய்யப்படும் தண்ணீர் அளவு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடி மாநகராட்சி குடிநீர் சப்ளையில் இம்ரூம்மென்ட் ஏற்படும் என்று மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையில் நாளை (25ம் தேதி) கங்கைகொண்டான் மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மின்வாரியம் மேற்கொள்வதால் மின்தடை செய்யப்படுகிறது. இதனால் குடிநீர் வரத்து இருந்தாலும் ஆற்றில் இருந்து குடிநீர் பம்பிங் செய்ய முடியாத நிலை ஏற்படும். மாலையில் பணிகள் முடிந்த பிறகு குடிநீர் பம்பிங் செய்யப்படும். இதனால் வரும் 26ம் தேதி ஞாயிற்றுகிழமையில் இருந்து தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் குடிநீர் சப்ளை சீராக இருக்கும் என்று மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையில் வல்லநாடு தலைமை நீரேற்று நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட மேயர் சசிகலாபுஷ்பா கூறுகையில், பாபநாசம் அணையில் இருந்து குறைவான அளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைவாக உள்ளது. இதனால் போதிய அளவிற்கு மாநகராட்சிக்கு குடிநீர் பம்பிங் செய்ய முடியாத நிலை உள்ளது.

மழை பெய்து ஆற்றில் தண்ணீர் வரத்து நல்ல நிலைக்கு வரும் வரை தூத்துக்குடி மாநகராட்சி மக்கள் குடிநீரை சிக்கனமான முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். தற்போது அணையில் தண்ணீர் திறப்பால் வரும் 26ம் தேதியில் இருந்து குடிநீர் சப்ளை ஒரளவுக்கு சீரடையும் என்றார்.
Last Updated on Friday, 24 August 2012 10:21
 


Page 98 of 390