Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

குடிநீர் பிரச்னையா? இன்று புகார் கூறலாம்

Print PDF

தினகரன்     11.08.2012

குடிநீர் பிரச்னையா? இன்று புகார் கூறலாம்

சென்னை, : குடிநீர் மற்றும் கரூவுநீர் பிரச்னை குறித்து புகார் தெரிவிக்க திறந்த வெளி கூட்டம் இன்று காலை பகுதி அலுவலகங்களில் நடக்கிறது.

சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் அபூர்வ வர்மா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
 
சென்னை குடிநீர் வாரியம் சார்பில் மாதந்தோறும் 2வது சனிக்கிழமை நடைபெறும் திறந்தவெளி கூட்டம், இன்று காலை 10 மணி முதல் முதல் பிற்பகல் 1 மணி வரை, குடிநீர் வாரியத்தின் அனைத்து பகுதி அலுவலகங்கள் மற்றும் புதிதாக இணைக்கப்பட்டுள்ள பகுதி அலுவலகங்களிலும் நடக்கிறது. இதில் பொதுமக்கள் பங்கேற்று குடிநீர், கரூவுநீர் தொடர்பாணைகள் மற்றும் குடிநீர், கரூவுநீர் வரி மற்றும் கட்டணங்கள் குறித்த சந்தேகங்களை மனுக்கள் வாயிலாக விண்ணப்பித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
 
ஒவ்வொரு பகுதி அலுவலக கூட்டமும் ஒரு மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும். கடந்த மாதம் நடந்த கூட்டத்தில் 57 மனுக்கள் பெறப்பட்டு, 52 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பணி முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 5 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அபூர்வ வர்மா கூறியுள்ளார்.
 

சிறுவாணி நீர்மட்டம் 1.20மீ. உயர்ந்தது

Print PDF

தினகரன்     10.08.2012

சிறுவாணி நீர்மட்டம் 1.20மீ. உயர்ந்தது

கோவை, : கனமழையால் சிறுவாணி நீர்மட்டம் 1.20 மீட்டர் உயர்ந்தது.மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சிறுவாணி நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. கடந்த 6ம் தேதி அணையின் நீர் பிடிப்பு பகுதியில் 40 மி.மீ மழை பெய்தது. கடந்த 8ம் தேதி 50 மி.மீ மழையும், நேற்று 35 மி.மீ மழையும் பெய்தது. கடந்த 6ம் தேதி அணையின் நீர்மட்டம் 866.10 மீட்டராக (கடல் மட்ட உயர கணக்கின் படி) இருந்தது. நேற்று அணையின் நீர்மட்டம்  867.30 மீட்டராக உயர்ந்தது.இரண்டு நாளில் அணையின் நீர்மட்டம் 1.20 மீட்டர் உயர்ந்துள்ளது. அணையின் மொத்த நீர் மட்ட உயரம் 15 மீட்டர். இதில் நில மட்டத்தில் இருந்து 3.80 மீட்டர் உயரத்திற்கு மட்டுமே நீர் தேங்கியிருக்கிறது. அணை நிரம்ப, நீர் மட்டம் 11.20 மீட்டர் அளவிற்கு உயரவேண்டும். இன்னும் 1120 மி.மீ அளவிற்கு மழை பெய்தால் மட்டுமே அணை நிரம்ப வாய்ப்புள்ளது. கேரள மாநிலத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரமாக இருக்கிறது. சில நாட்களுக்கு மழை நீடிக்கும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது. எனவே சிறுவாணி அணை நீர் பிடிப்பு பகுதியில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதுள்ள குடிநீரை இன்னும் ஒரு மாத காலத்திற்கு பயன்படுத்த முடியும். அணை நீர் மட்டம் 7 மீட்டர் உயர்ந்தால் மட்டுமே நடப்பாண்டு இறுதி வரை குடிநீர் தேவையை சமாளிக்க முடியும். அடுத்த ஆண்டு கோடை காலம் மற்றும் தென் மேற்கு பருவ மழை துவக்கம் வரை குடிநீர் தேவையை சமாளிக்க அணை உச்ச மட்டத்தை எட்டவேண்டும். வழக்கமாக, வடகிழக்கு பருவ மழை காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்யாது. தென்மேற்கு பருவ மழையும் அடுத்த மாதத்துடன் ஓய்ந்து விடும்.எனவே அணை நிரம்பும் வாய்ப்பு குறைவாக இருக்கிறது.

 

டைமன்ட்நகர் பகுதி குடிநீர் பிரச்னைக்கு தீர்வு

Print PDF

தினமலர்     10.08.2012

டைமன்ட்நகர் பகுதி குடிநீர் பிரச்னைக்கு தீர்வு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி டைமன்ட் நகர் பகுதி மக்கள் கோரிக்கையை ஏற்று மேயர் உடனடியாக குடிநீர் வசதி செய்து கொடுக்க உத்தரவிட்டார். இதற்காக நடந்த குடிநீர் பணிகளை மேயர் ஆய்வு செய்தார்.

முன்பு மீளவிட்டான் பஞ்சாயத்து பகுதியாக இருந்தது டைமன்ட்நகர். இந்த பகுதியில் சுமார் 60 வீடுகள் வரை உள்ளன. இந்த பகுதி மக்களுக்கு கோரம்பள்ளம் குடிநீர் திட்டத்தில் இருந்து குடிநீர் வடிகால் வாரியம் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாக குடிநீர் பைப்பில் உடைப்பு ஏற்பட்டு மக்களுக்கு குடிநீர் கிடைக்காமல் இருந்து வந்தது. இதனால் மக்கள் குடிநீருக்கு கஷ்டப்பட்டு வந்தனர்.இந் நிலையில் இந்த பகுதி மக்கள் குடிநீர் பிரச்னை குறித்து மாநகராட்சி மேயர் சசிகலாபுஷ்பாவிடம் முறையிட்டனர். உடனடியாக டைமன்ட் நகர் பகுதிக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்கவும், உடைந்த பைப்புகளை மாற்றி சீரான குடிநீர் சப்ளைக்கு ஏற்பாடு செய்யுமாறு மாநகராட்சி இளநிலை பொறியாளர் பிரின்ஸ் ராஜேந்திரனுக்கு மேயர் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து உடனடியாக 75 ஆயிரம் ரூபாய் செலவில் குடிநீர் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஏற்கனவே கொடுக்கப்பட்டு வந்த குடிநீர் திட்டத்தில் இருந்து புதிய குழாய்கள் போடப்பட்ட டைமன்ட் நகரில் 5 பொது நல்லிகள் வைக்கப்படுகிறது.

இதற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்த பணியினை மேயர் சசிகலாபுஷ்பா ஆய்வு செய்தார்.

 


Page 106 of 390