Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

மாநகராட்சிக்கு உஷார் ரிப்போர்ட்: விஷமாகிறது நிலத்தடி நீர்

Print PDF

தினகரன்    06.08.2012

மாநகராட்சிக்கு உஷார் ரிப்போர்ட்: விஷமாகிறது நிலத்தடி நீர்

மதுரை, : நிலத்தடி நீரில் மாசு, நுண்ணுயிர் கிருமிகளின் அளவு அதிகரித்திருப்பதாக ஆய்வில் பகீர்  தகவல்  வெளியாகியுள்ளது.  நகரில் சேகரிக்கப்பட்ட  59  நிலத்தடி  நீர்  மாதிரிகளில்,  48 மாதிரிகள், குடிக்க உகந்ததாக இல்லை என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

மதுரை நகரிலும்,  சுற்றுப்பகுதியிலும் நிலத்தடி நீரின் தன்மை குறித்து நிபுணர்கள் ஆய்வு நடத்தி மாநகராட்சிக்கு தெரிவித்துள்ளனர். அதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

அதன் விவரம் வருமாறு:

மதுரை நகரில் நிலத்தடி நீர்மட்டம்  250  முதல்  650  அடி  வரை  இறங்கி  விட்டது.  பல்வேறு பகுதிகளில்   சேகரிக்கப்பட்ட  59  நிலத்தடி  நீர்   மாதிரிகள்   பரிசோதிக்கப்பட்டது.  இதில்   48 மாதிரிகள் குடிக்க உகந்ததாக  இல்லை.  நிலத்தடி  நீரின்  தன்மை  மாறி  மாசுபாடு அதிகரித்து கொண்டே போகிறது. சுமாரான நிலையில் இருந்து  உப்புத்  தன்மைக்கு மாறி உள்ளது. நகரின் மத்திய    பகுதியில்   வைகை   ஆறு   சென்றாலும்,   ஆற்றுக்குள்   ஊறும்     ஊற்று     நீரும் மாசுபட்டுள்ளது.  இதற்கு  முக்கிய  காரணம்  ஆற்றில்  67 இடங்களில்  பாதாள  சாக்கடை நீர் கலக்கிறது.

பாதாள சாக்கடை திட்டம்  முழுமையாக   நிறைவேறிய  பகுதிகளில்   நிலத்தடி  நீரில்  நோய் தாக்கும் நுண்ணுயிர் கிருமிகள் குறைவாக உள்ளன. பாதாள சாக்கடை இல்லாத  பகுதிகளில் நுண்ணுயிர் கிருமிகள் அதிகம்  உள்ளன. அனைத்து பகுதிகளிலும் பாதாள சாக்கடை  திட்டம் முழுமையாக    அமல்படுத்தப்பட  வேண்டும்.  பாதாள  சாக்கடை  நீர்   ஆற்றில்   கலக்காமல் தடுக்கப்படுவது   முக்கியமாகும். வைகை ஆறு, கண்மாய் உள்ளிட்ட நீர் நிலைகளில்  குப்பை கழிவுகள்    கொட்டப்படுவது  தடுக்கப்பட  வேண்டும்.

 மதுரை  நகரிலும்,    சுற்றிலும்  130 கண்மாய்கள்    இருந்துள்ளன.     காலப்போக்கில்  அழிக்கப்பட்டும்,  சிதைக்கப்பட்டும், உருமாற்றம் செய்யப்பட்டும் 24 கண்மாய்களே மிஞ்சின. இதிலும் சமீப காலங்களில் 18 கண்மாய்கள் அழிக்கப்பட்டு அரசு அலுவலகம், மாநகராட்சி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, நீதிமன்ற கட்டிடங்களாக மாறி விட்டன. வண்டியூர், மாடக்குளம், செல்லூர், கொடிக்குளம், வீரமுடைத்தான், தென்பரங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு கண்மாய்கள் தப்பி உள்ளன. அதுவும் மண்மேடாகி நீர் கொள்ளளவு குறைந்துள்ளது.

இதை சீரமைத்து மழை காலங்களில் கூடுதல் தண்ணீர் தேக்க நடவடிக்கை  எடுக்க வேண்டும். கண்மாய்களை    காக்க   தவறினால்   நிலத்தடி  நீர்   அதல  பாதாளத்தில்  இறங்கி,   மக்கள் திண்டாடும் நிலைக்குச் செல்ல நேரிடும். இதன் மூலம் குடிநீர் தேவை அதிகரித்து, தட்டுப்பாடு ஏற்படும்.  அதை  சமாளிக்க  முடியாமல்  மாநகராட்சிக்கு பெரும் சிக்கல்   ஏற்படும்.   இந்த ஆபத்தை  தடுக்க  முன்கூட்டியே  நடவடிக்கை  எடுக்க  வேண்டியது கட்டாயமாகும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated on Monday, 06 August 2012 08:01
 

குடிநீர்ப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: திருவண்ணாமலை நகர்மன்றத் தலைவர் உறுதி

Print PDF

தினமணி                    04.08.2012

குடிநீர்ப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: திருவண்ணாமலை நகர்மன்றத் தலைவர் உறுதி

திருவண்ணாமலை, ஆக. 3: திருவண்ணாமலை நகராட்சிப் பகுதியில் நிலவும் குடிநீர்ப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று நகர்மன்றத் தலைவர் என்.பாலச்சந்தர் உறுதி அளித்தார்.

திருவண்ணாமலை நகர்மன்றத்தின் அவசரக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, நகர்மன்றத் தலைவர் என்.பாலச்சந்தர் தலைமை வகித்தார். பொறியாளர் பாஸ்கரன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய திமுக கவுன்சிலர் குட்டி புகழேந்தி, திருவண்ணாமலை நகரில் நிலவும் குடிநீர் பிரச்னைக்குத் தீர்வு காண்பதாக கடந்த முறை நடைபெற்ற கூட்டங்களில் கூறினீர்கள். ஆனால், இதுவரை தீர்வு காணப்படவில்லை என்றார்.

இதற்குப் பதிலளித்த நகர்மன்றத் தலைவர், நகராட்சியின் 26 வார்டுகளில் குடிநீர்ப் பிரச்னைக்குத் தீர்வு காணப்பட்டு விட்டது. மீதமுள்ள 13 வார்டுகளில் நிலவும் குடிநீர்ப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றார்.

திருவண்ணாமலையில் காலரா பரவாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நகரின் கழிவுநீர் கால்வாய்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் தூர் வாரப்படும். கொசு மருந்து அடிக்கப்படும். நகராட்சி நவீன எரிவாயு தகன மேடையில் கூடுதல் கட்டணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நகர்மன்றத் தலைவர் உறுதி கூறினார்.

 

மாநகரின் குடிநீர் திட்டம் ஜப்பான் நிதிக்குழு ஆய்வு

Print PDF

தினகரன்             03.08.2012

மாநகரின் குடிநீர் திட்டம் ஜப்பான் நிதிக்குழு ஆய்வு

திருச்சி, : திருச்சி மாநகரில் அனைத்து பகுதிகளுக்கும் சீரான குடிநீர் வழங்குவதற் காக ரூ.221 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இப்பணிகளை ஆய்வு நடத்த ஜப் பான் நிதி நிறுவன திட்ட நிபுணர் நக்கமுரா, முது நிலை திட்ட வளர்ச்சி நிபு ணர் மிகிர், தமிழ்நாடு நகர்ப் புற உள்கட்டமைப்பு நிதி சேவை நிறுவனத்தின் முது நிலை உதவி துணை தலை வர் ராஜேந்திரன், துணை மேலாளர் ஆரோன் ஜஸ் டின் ஆகியோர் நேற்று திருச்சி வந்தனர். பின்னர் குடமுருட்டி அருகே பிர தான குழாய்களை இணை க்கும் பணி, கொள்ளிடம் ஆற்றில் ராட்சத குடிநீர் சேகரிப்பு கிணறுகள், சஞ்சீவிநகர், விறகுப்பேட்டை ஆகியவற்றில் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் கட்டும் பணிகளை ஆய்வு செய்தனர். அப்போது மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி அருகில் இருந்தார்.

 


Page 111 of 390