Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

குடிநீர், கழிவுநீர் புகாருக்கு தொலைபேசி சேவை

Print PDF

தினமலர்      02.02.2011

குடிநீர், கழிவுநீர் புகாருக்கு தொலைபேசி சேவை

சென்னை : "பொதுமக்கள், குடிநீர் மற்றும் கழிவுநீர் தொடர்பான புகார்களை அளிக்க, புதிய தொலைபேசி எண் சேவை துவக்கப்பட உள்ளது' என, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் தெரிவித்துள்ளது. சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தில், பொதுமக்கள், குடிநீர் மற்றும் கழிவுநீர் குறித்த புகார்களை தெரிவிக்க, ஏற்கனவே, 24 மணி நேர சேவை இயங்கி வருகிறது. பிரச்னை குறித்து தெரிவிக்க உதவும், தொலைபேசி எண் எளிதில் நினைவில் கொள்ளும் வகையில், புதிய தொலைபேசி எண் சேவை இன்று முதல் இயங்கும்.


பொதுமக்கள், புகார்களை, 24 மணி நேரமும், 044- 4567 4567 என்ற புதிய எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

சிறுவாணியில் 90 நாளுக்கே இருப்பு நகரில் குடிநீர் தட்டுப்பாடு தடுக்க விரைவில் அதிகாரிகள் ஆலோசனை

Print PDF
தினகரன்        01.02.2011

சிறுவாணியில் 90 நாளுக்கே இருப்பு நகரில் குடிநீர் தட்டுப்பாடு தடுக்க விரைவில் அதிகாரிகள் ஆலோசனை

கோவை, பிப். 1:சிறுவாணி அணையிலிருந்து தினமும் 7.2 கோடி லிட்டர், பில்லூர் அணையில் இருந்து 6.5 கோடி லிட்டர் குடிநீர், கோவைக்கு வினியோகிக்கப்படுகிறது. ஒருவருக்கு தின மும் 135 லிட்டர் என்ற அளவு குடிநீர் வினியோகிக்கவேண்டும். 100 லிட்டர் குடிநீர் கிடைப்பதே அரிதாகி விட்டது. 10 முதல் 15 சத வீதம் வரை வினியோக இழப்பு ஏற்படுகிறது. ரோடு, வடிகால் உள்ளிட்ட பணி களால் குடிநீர் குழாய் சேதம் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது.

சிறுவாணி அணை நீர் மட்டம் 15 மீட்டர். 9 மீட்டர் தண்ணீர் உள்ளது. 90 நாளுக்கு மட்டுமே குடிநீர் உள்ளது. 2 ஆண்டுகளாக ஜூலையில்தான் பருவ மழை துவங்குகிறது. சிறு வாணி நீர் மட்டம் பாதா ளத்தை எட்டினால் 3 மாதம் குடிநீர் பஞ்சம் ஏற்படும் என குடிநீர் வாரியத்தினர் அச்சமடைந்துள்ளனர். குடி நீர் அளவை குறைத்து, வினி யோக நடைமுறையை மாற்றி னால் பருவ மழை துவங்கும் காலம் வரை சமாளிக்க முடியும் என அதிகாரிகள் கருதுகின்றனர்.

‘ஒரு நாள் விட்டு ஒரு நாள்’ என்ற நடைமுறையை 3 நாள் அல்லது 4 நாளுக்கு ஒரு முறை குடிநீர் என நீடிக்க யோசனை நடக்கிறது. இதை செயல்படுத்தினால், மே மாத இறுதி வரை சிறுவாணி குடிநீர் வினியோகத்தை சமாளிக்க முடியும் என அதிகாரிகள் கருதுகின்றனர்.

சிங்காநல்லூர், உப்பிலிபாளையம் உள்ளிட்ட கிழக்கு, வடக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதியில் குடிநீர் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. குடிநீர் வினியோக மாற்றம் தொடர்பாக மாநகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் விரைவில் ஆலோசனை நடத்தவுள்ளனர்.

அனுமதிக்கப்பட்ட அளவு சப்ளை இல்லை

சிறுவாணி அணையிலிருந்து தினமும் 10 கோடி லிட்டர் (100 மில்லியன் லிட்டர்) குடிநீர் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுத்திகரித்த பின்னர் 9.8 கோடி லிட்டர் குடிநீர் பெற முடியும். இதில் மாநகராட்சிக்கு 8.3 கோடி லிட்டர், வழியோர நகராட்சி, கிராமங்களுக்கு 1.5 கோடி லிட்டர் குடிநீர் வழங்கவேண்டும். கடந்த 7 ஆண்டுகளாக இந்த உத்தரவு மீறப்படுகிறது.

கோவை மாநகராட்சிக்கு அணை நிரம்பி வழியும் காலம் தவிர இதர காலங்களில் தினமும் 7.3 கோடி லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது. வெயில் காலங்களில் இந்த அளவு தினமும் 6 கோடி லிட்டர் என குறைக்கப்படுவது உண்டு. 75 கோடி ரூபாய் குடிநீர் கட்டண கடன் காரணமாக மாநகராட்சியும் உரிய அளவு குடிநீரை கேட்டு வாங்கவில்லை.
 

மானூர் கூட்டு குடிநீர் திட்டத்தில் தண்ணீர் வீணாவதை தடுக்க மீட்டர் அமைப்பு

Print PDF

தினகரன்        28.01.2011

மானூர் கூட்டு குடிநீர் திட்டத்தில் தண்ணீர் வீணாவதை தடுக்க மீட்டர் அமைப்பு

சிவகாசி, ஜன. 28:

மானூர் கூட்டு குடிநீர் திட்டத்தில், கசிவுகள் மூலம் தண்ணீர் வீணாவதை தடுக்க மீட்டர் அமைக்கப்பட உள்ளது.

சிவகாசி நகரின் குடிநீர் பிரச்னையை தீர்க்க, மானு£ர் கூட்டுக்குடிநீர் திட்டம் 2006ம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது. நெல்லை மாவட் டம், சங்கரன்கோவில் அருகேயுள்ள பழையாற்றில் இருந்து குழாய்கள் மூலம் திருவேங்கடம், வெம்பக்கோட்டை, சித்துராஜபுரம் வழியாக சிவகாசி நகரில் தாமிரபரணி குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. நாள்ஒன்றுக்கு 60 லட்சம் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. ஆனால், தினசரி 30 லட்சம் லிட்டர் குடிநீர் பெறப்படுகிறது.

சிவகாசி நகரில் 5 நாட்களுக்கு ஒருமுறை என, சுழற்சி அடிப்படையில், அனைத்து பகுதிகளுக்கும், குடிநீர் விநியோகம் நடக்கிறது. இத்திட்டம் மூலம் சிவகாசி பகுதியில் உள்ள சுமார் 61 வழியோர கிராமங்கள் பயன்பெற்று வருகின்றன. கடந்த சில மாதங்களாக, மானூர் கூட்டு குடிநீர் திட்ட குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் கசிந்து வீணாகி வருகிறது. சிவகாசிக்கு விநியோகிக்கப்படும், தண்ணீர் அளவும் குறைகிறது.

இதனை தடுக்கும் நடவடிக்கையாக தமிழ்நாடு குடிநீர் வாரியம், நெல்லை மாவட்டத்தில், தாமிரபரணி தண்ணீர் சப்ளையாகும் பகுதிகளை கணக்கீட்டு, அனைத்து பகுதிகளையும் ஒருங்கிணைந்து கசிவுகளை கண்டறியும் சடா மீட்டர் களை பொருத்தியுள்ளது. இந்த மீட்டர்கள் மூலம் குழாய்களில் ஏற்படும் கசிவுகள் கண்டறியப்படும். மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளதால், இனிவரும் காலங்களில், சிவகாசி நகருக்கு தங்குதடையின்றி, தாமிரபரணி குடிநீர் கிடைக்கும் என, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

கூடுதல் குடிநீர் பெற முடிவு

சிவகாசி நகராட்சியின், குடிநீர் ஆதாரமான வெம்பக்கோட்டை அணை விளங்கி வருகிறது. சிவகாசி நகரின் குடிநீர் தேவையை கருதி, அணையில் உறைகிணறுகள் அமைக்கப்பட்டு, 2 மின் மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சி எடுக்கப்படுகிறது. வெம்பக்கோட்டை அணையில் இருந்து, சிவகாசி நகராட்சிக்கு தற்போது தினமும், 19 லட்சம் லிட்டர் குடிநீர் பெறப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளாக சரிவர மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்து இல்லை. கடந்தாண்டு, தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தும், வெம்பக்கோட்டை பகுதியில் மழை இல்லாததால், அணைக்கு நீர்வரத்து இல்லை. தற்போது அணை வறண்டு காணப்படுகிறது.

சிவகாசி நகரின், குடிநீர் தேவை அதிகரிப்பால், வெம்பக்கோட்டை அணையில், மேலும் ஒரு மின்மோட்டாரை அமைக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன்மூலம் கூடுதல் தண்ணீர் எடுக்க முடியும். அடுத்த 2 மாதங்களில் கோடை துவங்க உள்ள நிலையில், முன்னெச்சரிக்கையாக இப்போதே, கூடுதல் குடிநீர் பெற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

 


Page 120 of 390