Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

இன்று குடிநீர் குறை தீர்ப்பு முகாம்

Print PDF

தினமணி            13.12.2010

இன்று குடிநீர் குறை தீர்ப்பு முகாம்

பெங்களூர், டிச. 12: பெங்களூர் நகர தெற்கு துணை மண்டலத்தில் உள்ள பி.டி.எம். லே-அவுட் உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை குடிநீர் குறை தீர்ப்பு முகாம் நடைபெறுகிறது.

÷இது குறித்து குடிநீர் வடிகால் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

÷துணை செயற்பொறியாளர் அலுவலகத்தில் காலை 9.30 மணி முதல் 11 மணி வரை நடைபெறும் இம்முகாமில் தெற்கு துணை மண்டலத்தில் உள்ள பி.டி.எம். லே-அவுட், அரிகெரே, கோடிசிக்கனஹள்ளி, ஓசூர் சாலை, வீரசந்திரா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம்.

÷கழிவு நீர் இணைப்பு, வியாபார இணைப்பைக் குடியிருப்பு இணைப்பாக மாற்றுவது ஆகியவை குறித்தும், குடிநீர் விநியோகத்தில் தாமதம் உள்ளிட்ட குறைகளையும் அதிகாரிகளிடம் தெரிவித்துப் பயன்பெறலாம்.

÷மேலும் தகவல்களுக்கு 22945143, 22945151 ஆகிய தொலைபேசி என்களில் தொடர்பு கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Last Updated on Monday, 13 December 2010 10:52
 

குழாயில் கூடுதல் நேரம் குடிநீர் வழங்க முடிவு அனைத்து தொட்டிகளிலும் ஏற்றி சப்ளை

Print PDF

தினகரன்            13.12.2010

குழாயில் கூடுதல் நேரம் குடிநீர் வழங்க முடிவு அனைத்து தொட்டிகளிலும் ஏற்றி சப்ளை

மதுரை, டிச.13: அணை நிரம்பி வழிந்தாலும், மதுரை நகரில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் சப்ளையில் மாற்றம் இல்லை. குழாயில் கூடுதல் நேரம் குடிநீர் வழங்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அனைத்து மேல் நிலைத் தொட்டிகளிலும் தண்ணீர் ஏற்றி சப்ளை செய்ய தொடங்கியுள்ளனர்.

மதுரை நகருக்கு தேவையான குடிநீர் வைகை அணையில் இருந்து குழாய் மூலம் நேரடியாக வருகிறது. வைகை 2வது குடிநீர் திட்டம் ரூ.68 கோடி மதிப்பீட்டில் 2008 இறுதியில் நிறைவேறியதும், சில மாதங்கள் தினமும் குடிநீர் சப்ளை செய்யப்பட்டது. அப்போது அணையில் தண்ணீர் இருப்பு குறைந்ததால், 2009 மார்ச் 22ம் தேதி முதல் மீண்டும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. அணையில் தண்ணீர் நிரம்பியதும் தினமும் குடிநீர் சப்ளை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இரண்டு மாதங்களாக பெய்த தென்மேற்கு பருவ மழையினால் வைகை அணை நிரம்பி உபரி நீர் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. பெரியாறு அணையிலும் 132 அடிக்கு மேல் நிரம்பியுள்ளது. அணை பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். "தினமும் குடிநீர் சப்ளை தேவையில்லை. ஒரு நாள் விட்டு ஒரு நாள் குழாயில் கூடுதல் நேரம் சீராக சப்ளை செய்வதே சிறந்தது. அதை தான் பெண்கள் விரும்புகிறார்கள்" என கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். தினமும் சப்ளை செய்தால் குடிநீர் வீணாகும் சூழலே ஏற்படும் என கருதப்படுகிறது.

ஒரு நாள் விட்டு ஒரு நாள் சப்ளை முறை நீடிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதுவரை குழாயில் ஒன்றரை மணி நேரம் சப்ளை ஆனது. இனிமேல் கூடுதல் நேரமாக 2 முதல் 3 மணி நேரம் மக்களுக்கு தாராளமாக வழங்க முடிவு செய்து, ஒவ்வொரு பகுதியாக அமல் செய்யப்பட்டு வருகிறது.

வைகை 2வது குடிநீர் திட்டத்தின் மூலம் 5 மேல் தொட்டிகள் கட்டப்பட்டன. குடிநீர் ஏறாமல் இருந்த புதூர் சூரியாநகர் தொட்டியிலும் தற்போது ஏறுகிறது. 8 பழைய மேல் தொட்டிகள் 14 ஆண்டுகளாக குடிநீர் ஏற்ற முடியாமல் பழுதடைந்து கிடந்தன. அந்த தொட்டிகளும் புதிய திட்டத்தின் மூலம் சீர் செய்யப்பட்டுள்ளன.

அதிகாரி ஒருவர் கூறுகையில், 1396984945 வைகை 2வது குடி நீர் திட்டம் நிறைவேறியதால் மொத்தமுள்ள 28 மேல் நிலை தொட்டிகளிலும் குடிநீர் ஏற்றி சீராக சப்ளை செய்ய முடிகிறது. முன்பு ஒரு நபருக்கு தினமும் 64 லிட்டர் வீதம் வழங்கப்பட்டது. இப்போது 110 லிட்டராக அதிகரித்து வழங்கப்படுகிறது. இதையே மக்கள் விரும்புகின்றனர். வைகை ஆற்றின் குறுக்கே மேல்கால், கோச்சடை, மணலூர் ஆகிய இடங்களில் புதிதாக தடுப்பணைகள் கட்டி இருப்பதால், அங்குள்ள நீரேற்று நிலையங்களிலும் கூடுதல் நீர் கிடைக்கிறது. கோடையில் குடிநீருக்கு பிரச்சினையே இருக்காது,"என்றார்.

 

புதிய குடிநீர் திட்டப்பணியை விசாரிக்க குழு

Print PDF

தினமலர்                10.12.2010

புதிய குடிநீர் திட்டப்பணியை விசாரிக்க குழு

கோபிசெட்டிபாளையம்: எதிர்பார்த்ததைப் போலவே, தமிழக சிறப்பு சாலைகள் மற்றும் உள்ளூர் திட்டக் குழுமம் தொடர்பான தீர்மானங்களை மட்டும், கோபி நகராட்சி கூட்டத்தில் நிறைவேறின. "புதிய குடிநீர் திட்டப்பணிகள் தொடர்பாக ஆய்வுக்குழு அமைக்க வேண்டும்' என, .தி.மு.., - தி.மு.., - காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வைத்த கோரிக்கையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.கோபி நகராட்சி கூட்டம் தலைவர் ரேவதிதேவி தலைமையில் நேற்று காலை 11 மணிக்கு துவங்கியது. கூட்ட விவாதம்:

திலீப் (தி.மு.., ): தி.மு.., - காங்கிரஸ் கவுன்சிலர்கள் நகராட்சி நிர்வாகத்தை முடக்குவதாக தவறான தகவல் வெளியிடுகிறீர்கள். தமிழக சிறப்பு சாலைகள் பணிகள் ஒதுக்கீட்டில் ஜே.., தமிழ் செல்வன் உள்ளிட்ட அதிகாரிகள் செய்த தவறால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். கோபி நகர மக்களின் நலன் கருதி சிறப்பு சாலைகள் மற்றும் திட்ட குழுமம் தொடர்பான தீர்மானங்களை நிறைவேற்றலாம். மற்ற தீர்மானங்களை ஒத்தி வைக்க வேண்டும்

தலைவரிடம் மனு கொடுத்தார்).ரவி (தி.மு..,): நகராட்சிக்கு வரும் அரசாணையை கவுன்சிலர்களுக்கு காட்டாமல் அதிகாரிகள் மறைக்கின்றனர். சிறப்பு சாலைகள் திட்டத்தில் எழுந்த பிரச்னைகளுக்கு ஜே.., தமிழ் செல்வன்தான் முதல் காரணம். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முரளி ஸ்ரீதர் (காங்.,): ஜே.., தமிழ் செல்வன் பல மாதங்களாக நகராட்சி கூட்டத்துக்கு வருவது இல்லை. முறைகேடுகள் தொடர்பாக எங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும் என்பதால் கூட்டத்துக்கு வர ஜே.., தயங்குகிறார்.

தலைவர்: கமிஷனர், எம்.., போன்ற உயர் அதிகாரிகளிடம்தான் நான் பேச முடியும். ஜே.., போன்ற இளநிலை அதிகாரிகளிடம் நான் தேவையில்லாமல் பேசுவது இல்லை. (எம்.., கிருஷ்ணகுமாரை பார்த்து) கவுன்சிலர்கள் எந்த விளக்கம் கேட்டாலும் தர வேண்டும்.ரவி (தி.மு..,): மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத தெருக்களில் ரோடு போட இடங்களை ஜே.., தமிழ்செல்வன் தேர்வு செய்துள்ளார். அவருக்கு அதிகாரம் கொடுத்தது யார்?அப்போது அ.தி.மு.., கவுன்சிலர் வேலுச்சாமிக்கும், தி.மு.., கவுன்சிலர்கள் திலீப், ரவி ஆகியோருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பெஞ்சு மேல் ஏறி நின்று கவுன்சிலர் வேலுச்சாமி பேசினார். அதிருப்தியடைந்த தலைவர் ரேவதி தேவி கூட்ட அரங்கில் இருந்து வெளியேறினார். ஐந்து நிமிடத்துக்கு பிறகு மீண்டும் கூட்டம் துவங்கியது.

சையத்புடான் ஷா (.தி.மு..,): புதிய குடிநீர் திட்டம் தொடர்பாக அனைத்து கட்சி கவுன்சிலர்கள் அடங்கிய குழு அமைக்க வேண்டும்.

திலீப் (தி.மு..,): ஒரு வாரத்துக்குள் குடிநீர் திட்டம் பற்றிய அறிக்கை வரவில்லை என்றால், தி.மு.., காங்கிரஸ் கவுன்சிலர்கள் உண்ணாவிரதம் இருப்போம்.தலைவர்: குழு அமைத்து ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உடனடியாக உத்தரவிடப்படும். மக்கள் நலன் கருதி அனைத்து தீர்மானங்களையும் நிறைவேற்ற தி.மு.., - காங்கிரஸ் கவுன்சிலர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.

தலைவர் ரேவதிதேவி இரண்டாவது முறையாக கூட்ட அரங்கை விட்டு வெளியேறினார். 15 நிமிடம் கழித்து மீண்டும் வந்தார்.

துரைசாமி (மார்க்சிஸ்ட்): எனது வார்டில் ரோடு வசதி இல்லை. தீபாவளிக்கு பிறகு குப்பை அள்ளவில்லை. வெளியே நடமாட முடியவில்லை. ஜெய்துர்க்கை நகரில் 15 ஆண்டுகளாக ரோடு வசதி இல்லை. ராஜினமா செய்வதை தவிர வேறு வழியில்லை.

தலைவர்: உங்கள் வார்டில் பல லட்ச ரூபாய் செலவில் ரோடு போடப்பட்டுள்ளது. அடுத்த கட்ட நிதி வந்ததும், மீண்டும் ரோடு போடப்படும். நிதி இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. மக்களிடம் எடுத்து சொல்லுங்கள். (தி.மு.., காங்., கவுன்சிலர்களை பார்த்து) தீர்மானங்கள் தொடர்பாக என்ன முடிவு செய்துள்ளீர்கள்.

திலீப் (தி.மு..,): குடிநீர் திட்டப்பணிகளின் செயல்பாடுகள் குறித்து அறிக்கை வந்த பிறகு சிறப்பு கூட்டத்தில் மற்ற தீர்மானங்களை நிறைவேற்ற ஒத்துழைப்பு தரப்படும்.

தலைவர்: நன்றி, நன்றி.

 


Page 125 of 390