Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

பூண்டி ஏரியில் இருந்து செங்குன்றம், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு சென்ற நீர் திடீர் நிறுத்தம்

Print PDF

தினமணி           09.12.2010

பூண்டி ஏரியில் இருந்து செங்குன்றம், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு சென்ற நீர் திடீர் நிறுத்தம்

முழு அளவை எட்டி கடல் போல் காட்​சி​ய​ளிக்​கும் பூண்டி ஏரி.​ ​(வலது படம்)​ செங்​குன்​றம்,​​ செம்​ப​ரம்​பாக்​கம் ஏரி​க​ளுக்கு நீர் வெளி​யேற்​றப்​ப​டும்

திருவள்ளூர், டிச. 8: பூண்டி ஏரியில் இருந்து இணைப்புக் கால்வாய் மூலம் செம்பரம்பாக்கம், செங்குன்றம் ஏரிகளுக்கு திறந்து விடப்பட்டிருந்த நீர் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.

சென்னை குடிநீரின் முக்கிய ஆதாரமாக உள்ள பூண்டி ஏரி, வடகிழக்குப் பருவமழையால் நிரம்பியதை அடுத்து இங்கிருந்து செம்பரம்பாக்கம், செங்குன்றம் ஆகிய ஏரிகளுக்கு கடந்த 15 தினங்களாக வினாடிக்கு 800 முதல் 1000 கனஅடி நீர் வீதம் திறந்து விடப்பட்டிருந்தது. இருப்பினும் பூண்டி ஏரியின் மொத்த உயரமான 35 அடி நீர்மட்டத்தை எட்டியதால் 5-ம் தேதி பூண்டி ஏரியில் 2 மதகுகள் திறக்கப்பட்டு வினாடிக்கு 500 கனஅடி நீர் வீதம் ஆரணி ஆற்றில் வெளியேற்றப்பட்டது.

கிருஷ்ணா கால்வாய் வழியாக கண்டலேறு அணை மற்றும் மழைநீர் சேர்ந்து வினாடிக்கு 2000 கனஅடி வீதம் நீர்வரத்து அதிகரித்ததால் பூண்டி ஏரியின் 4 மதகுகள் திறக்கப்பட்டு வினாடிக்கு 3000 கனஅடி வரை நீர் ஆற்றுக்கு வெளியேற்றப்பட்டது. தொடர்ந்து இணைப்புக் கால்வாய் வழியாக செம்பரம்பாக்கம், செங்குன்றம் ஏரிகளுக்கும் நீர் சென்றுக் கொண்டிருந்தது.

இந்நிலையில் செங்குன்றம் ஏரி 90 சதவீதமாக 20.57 அடி நீர்மட்டமும், செம்பரம்பாக்கத்தில் 90 சதவீதமாக 21.15 அடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. இதனால் பூண்டி ஏரியில் இருந்து இணைப்புக் கால்வாய் வழியாக திறந்து விடப்பட்ட நீர் புதன்கிழமை காலை முதல் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. புதன்கிழமை பகல் 3 மணி நிலவரப்படி பூண்டி ஏரியின் நீர்மட்டம் மொத்த உயரமான 35 அடியில் 34.60 அடி உள்ளது.

ஏரிக்கு கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு 480 கனஅடி நீரும், மழை காரணமாக வினாடிக்கு 1119 கனஅடி நீரும் சேர்த்து 1599 கனஅடி நீர் வரத்து உள்ளது. பூண்டி ஏரியில் திறக்கப்பட்டுள்ள 4 மதகுகள் வழியாக வினாடிக்கு 2237 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. மேலும் மழலைக் கால்வாய் மூலம் சென்னை குடிநீரேற்று நிலையத்துக்கு வினாடிக்கு 10 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

 

குடிநீர் இணைப்பு பெற 5 நாட்கள் அவகாசம்

Print PDF

தினமலர்             09.12.2010

குடிநீர் இணைப்பு பெற 5 நாட்கள் அவகாசம்

திண்டுக்கல்: திண்டுக்கல் நகராட்சியில் பாதாள சாக்கடை இணைப்பு, குடிநீர் இணைப்பு பெறுவதற்கு பொதுமக்கள் விண்ணப்பங்கள் வழங்க 5 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

நகராட்சி தலைவர் நடராஜன், கமிஷனர் லட்சுமி கூறியதாவது: திண்டுக்கல் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முடிந்துள்ள பகுதிகளில் ரோடு போடும் பணி துவக்கப்பட உள்ளது. இந்த பகுதியில் குடியிருப்போர் பாதாள சாக்கடை இணைப்பு, குடிநீர் இணைப்பு பெறாதவர்கள் தேவை இருப்பின் 5 நாட்களுக்குள் விண்ணப்பித்து உடன் இணைப்பு பெற்றுக் கொள்ளலாம். இதற்கு பின்பு வரும் விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

 

விழுப்புரம் நகரில் பிரதான குடிநீர் குழாய் உடைந்தது சரிசெய்யும் பணி தீவிரம்

Print PDF

தினகரன்               08.12.2010

விழுப்புரம் நகரில் பிரதான குடிநீர் குழாய் உடைந்தது சரிசெய்யும் பணி தீவிரம்

விழுப்புரம், டிச. 8: விழுப்புரம் நகராட்சி பயணியர் விடுதியில் 9 லட்சம் கொள்ளளவு உள்ள குடிநீர் தொட்டியுள்ளது. குடிநீர் தொட்டி மூலம் மேலவீதி, வடக்குதெரு, தக்கா தெரு, சேவியர் காலனி, கமலா நகர், கைவல்லியர் தெரு, மாசிலாமணிபேட்டை, வாலாஜா பள்ளிவாசல், விராட்டிக்குப்பம் சாலை, செல்லியம்மன்கோவில் தெரு, முத்துதோப்பு, அகரம்பேட்டை, சித்தேரிக்கரை ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. இப்பகுதியில் கடந்த 10 நாட்களாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்தது. நடவடிக்கை எடுக்க நகர்மன்ற தலைவர் ஜனகராஜிடம் மக்கள் வலியுறுத்தினர்.

அவரது உத்தரவின்பேரில் ஆணையர் சிவக்குமார் மேற்பார்வையில் பொறியாளர் பார்த்திபன் தலைமையில் ஓவர்சியர் ஜெயபிரகாஷ்நாராயணன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர். பல இடங்களில் பள்ளம்தோண்டி உடைப்பு எங்கு ஏற்பட்டுள்ளது என ஆராய்ந்தனர். பயணியர் விடுதியில் இருந்து வரும் பிரதான 8 அங்குலம் குடிநீர் குழாய் உடைந்திருப்பது தெரியவந்தது.

இது குறித்து நகராட்சி தரப்பில் கூறுகையில், சென்னை நெடுஞ்சாலையில் சில மாதத்திற்கு முன்பு பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடந்தது. அப்போது பூமிக்கு அடியில் சுரங்கம் தோண்டி குழாய் பு¬த்தனர். போதியளவில் மண்ணை கொட்டி மீண்டும் மூடவில்லை. வாகனங்கள் சென்றதால் குடிநீர் குழாய் அமுங்கி உடைந்துவிட்டது. 10 மீட்டர் நீளத்துக்கு குடிநீர் குழாய் அகற்றப்பட்டு புதிய குடிநீர் குழாய் பொருத்தப்படும். அதேபோன்று ஆங்காங்கே பள்ளம் தோண்டப்பட்டு துண்டிக்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்புகளும் வழங்கப்படும். ஓரிரு நாட்களில் இப்பணி முடிந்துவிடும், என்றனர்.

 


Page 126 of 390