Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

பில்லூர் இரண்டாவது குடிநீர் திட்டம்: 2011-ல் குடிநீர் விநியோகம்

Print PDF

தினமணி             01.12.2010

பில்லூர் இரண்டாவது குடிநீர் திட்டம்: 2011-ல் குடிநீர் விநியோகம்

கோவை, நவ.30: பில்லூர் இரண்டாவது குடிநீர் திட்டம் 2010 மார்ச் மாதம் நிறைவடைந்து பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் என கோவை மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா தெரிவித்தார்.

கோவை மாநகராட்சி சாதாரணக் கூட்டம் மாநகராட்சி அரங்கில் மேயர் ஆர்.வெங்கடாசலம் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடந்தது. இதில் ஆணையர் அன்சுல் மிஸ்ரா முன்னிலை வகித்து பேசியது:

பில்லூர் இரண்டாவது குடிநீர் திட்டம் 2011 மார்ச் மாதம் நிறைவடைந்து பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும். பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இத் திட்டம், ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ்113.74 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுகிறது.

இதற்கென சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலை கீரணத்தம் ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் நெடுஞ்சாலைக்குகுறுக்கே திறந்த வெளியில் குழி தோண்டாமல் மண்ணை துளையிட்டு உந்துதல் முறையில் 1700 மி.மீ. விட்டம் கொண்ட இரும்பு மூடு குழாய்கள் பதிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த குழாய்களை தயாரித்து விநியோகம் செய்வதற்கு மதிப்பீட்டு தொகைக்கு குறைவாக விண்ணப்பித்த ஒப்பந்தரார்களுக்கு அனுமதி வழங்கும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநகராட்சி பகுதி அபிவிருத்தி திட்டத்தின் காந்திநகர், அண்ணாநகர் உள்ளிட்டபகுதிகளில் தார்சாலைகள், கான்கிரீட் தளம் அமைத்தல், மேற்கு மண்டலத்தில் வணிக வளாகக் கடைகள், மேட்டுப்பாளையம் சாலை அண்ணா மார்க்கெட் கடைகள், மொத்த காய்கறி மார்க்கெட் கடைகள், கடைகளில் உரிமக் காலம் நீட்டிக்கப்பட்டு வாடகை 15 சதவீதம் உயர்த்தப்பட்டது.

அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மேயரின் வார்டில் பூங்கா அபிவிருத்தி செய்ய பொது நிதியிலிருந்து பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக எதிர்கட்சி கவுன்சிலர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். துணை மேயர் நா.காரத்திக், மண்டலத் தலைவர்கள் எஸ்.எம்.சாமி (கிழக்கு மண்டலம்), சி.பத்மநாபன் (வடக்கு), வி.பி.செல்வராஜ் (மேற்கு), .பைந்தமிழ் (தெற்கு), எதிர்கட்சித் தலைவர் வெ..உதயக்குமார்,ஆளும்கட்சித்தலைவர் ஆர்.எஸ். திருமுகம், நிலைக்குழு தலைவர்கள், கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

 

பில்லூர் குடிநீர் திட்டம் டிரெஞ்சிங் தொழில்நுட்பத்தில் குழாய் பதிக்க நிதி ஒதுக்கீடு கவுன்சிலர்கள் ஒப்புதல்

Print PDF

தினகரன்            01.12.2010

பில்லூர் குடிநீர் திட்டம் டிரெஞ்சிங் தொழில்நுட்பத்தில் குழாய் பதிக்க நிதி ஒதுக்கீடு கவுன்சிலர்கள் ஒப்புதல்

கோவை, டிச. 1: கோவை மாநகராட்சிக்கு குடிநீர் தேவை யை பூர்த்தி செய்ய செயல்படுத்தப்படும் பில்லூர் இரண் டாவது குடிநீர் திட்டத்தில் பல்வேறு இடங்களில் ரயில் பாதை மற்றும் ரோடுகளின் குறுக்கே குழி தோண்டாமல் குழாய்களை உந்துதல் முறை யில் பதிக்க (டிரெஞ்சிங் டெக் னாலஜி) நிதி ஒதுக்கீடு செய்வதற்கு தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

கோவை மாநகராட்சி மன்றத்தின் சாதாரண கூட் டம் மேயர் வெங்கடாச்சலம் தலைமையில் நடந்தது. இதில் கோவை மாநகராட்சிக்கு குடிநீர் வழங்க செயல்படுத்தப்படும் ரூ113.74 கோடி மதிப்பிலான பில்லூர் குடிநீர் திட்ட பணியில் கட்டன் மலை குகையில் இருந்து ராமகிருஷ்ணாபுரம் மேல் நிலை தொட்டி வரை இரும்பு குழாய் பதிக்கப்படுகிறது. இதில் கோவை&மேட்டுப்பாளையம் ரயில் பாதையில் வீரபாண்டி பிரிவு அருகே 58 மீட்டர் நீளத்திற்கு குடிநீர் குழாயை உந்துதல்(டிரெஞ்ச்லெஸ் டெக்னாலஜி) முறை யில் பதிக்க ரூ99.50 லட்சம் செலவிலான திட்டப்பணிக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

அதேபோல் கீரணத்தம் அருகே சத்தியமங்கலம்& மைசூர் சாலையில் இதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ரூ.58 லட்சம் மதிப்பில் குழாய் பதிப்பது தொடர்பாக நான்கு தீர்மானங்கள் மன்றத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டது. இதற்கு மாநகராட்சி கவுன்சில் ஒப்புதல் அளித்தது.

ஜவகர்லால் நேரு நகர்ப் புற புனரைம¬ப்பு திட்டத் தில் 14வது வார்டில் காந்திநகர் பகுதியில் ரூ2.35 லட்சம் செலவில் தார் ரோடு, 15வது வார்டில் அண்ணாநகர் குடிசை பகுதியில் ரூ2லட்சம் மதிப்பிலும், 19வது வார்டு அருந்ததியர் வீதியில் ரூ3.15 லட்சம் மதிப்பில் கான்கீரீட் ரோடு, 11வது வார்டில் கமலா மில் குட்டை பகுதியில் ரூ4.50லட்சத்தில் தார் ரோடு புதுப்பித்தல், 14வது வார்டில் காந்திநகர் பகுதியில் ரூ2.43 லட்சத்தில் சிமென்ட் கான் கீரிட் தளம் அமைத்தல் பணி களுக்கு கோரப்பட்ட ஒப்பந்தப்புள்ளியை அனுமதியளி க்க மன்றம் முடிவு செய்தது. மேற்கு மண்டலத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாக கடைகளுக்கு வாட கை தொகை 15 சதவீதம் உயர் த்தப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட வாடகை தொகைக்கும் மன்றம் ஒப்புதல் அளித்தது.

 

61 ஆண்டுகால தண்ணீர் பிரச்னைக்குத் தீர்வு

Print PDF

தினமணி          30.11.2010

61 ஆண்டுகால தண்ணீர் பிரச்னைக்குத் தீர்வு

விருதுநகர், நவ. 29: தாமிரபரணி கூட்டுக்குடிநீர்த் திட்டத்துக்கு ரூ. 597 கோடி மதிப்பில் துணை முதல்வர் மு..ஸ்டாலின் அடிக்கல் நாட்டியதன்மூலம் விருதுநகர் மாவட்டத்தில் 61 ஆண்டுகாலமாக நிலவிவந்த தண்ணீர்ப் பிரச்னைக்குத் தீர்வுகிடைத்துள்ளது என, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார்.

ஆலங்குளத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற தாமிரபரணி கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் அவர் பேசியது:

விருதுநகர் மாவட்டத்தில் கிடைப்பதெல்லாம் உப்புத் தண்ணீரும், சுண்ணாம்பு கலந்த தண்ணீரும்தான். குடிநீர் கிடைப்பதில் எவ்வளவு பிரச்னை உள்ளது என்று பெண்களுக்கு அதிகம் தெரியும்.

சுமார் 61 ஆண்டுகாலமாக இப்பகுதியில் குடிநீர்ப் பிரச்னை இருந்து வருகிறது. திமுக அரசின் முயற்சியால் தற்போது தாமிரபரணி ஆற்றுத் தண்ணீரை இப்பகுதி மக்கள் பயன்படுத்த உள்ளனர்.

விருதுநகர் மட்டுமல்ல அருப்புக்கோட்டை, சாத்தூர், திருச்சுழி, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய பகுதிக்கும் நல்ல தண்ணீர் கிடைக்க உள்ளது. மேலும் சில பகுதிக்கு இத்திட்டத்தின் மூலம் குடிநீர் கிடைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு: தாமிரபரணி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தால் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதியினருக்கும் குடிநீர் கிடைக்கும். இத் திட்டத்தை துணை முதல்வர் மு..ஸ்டாலினிடம் நாங்கள் கூறியதும் அதை ஏற்றுக்கொண்டு தற்போது இத்திட்டம் நிறைவேற்றப்படுகிறது.

தாகம் தீர்க்க இப்பகுதி மக்களுக்கு தண்ணீர் கிடைக்கச் செய்ததற்காக வரும் தலைமுறையினரும் திமுக ஆட்சியை நன்றியோடு நினைத்துப் பார்ப்பார்கள் என்றார்.

முன்னதாக விருதுநகர் மாவட்டத்தின் கடந்த 4 ஆண்டுகால சாதனை மலரை துணை முதல்வர் மு..ஸ்டாலின் வெளியிட்டார். அதை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பெற்றுக்கொண்டார்.

 


Page 130 of 390