Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் சென்னை ஏரிகளில் கூடுதல் தண்ணீர் அடுத்த ஆண்டு வரை குடிநீர் தட்டுப்பாடு வராது

Print PDF

மாலை மலர்             29.11.2010

நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் சென்னை ஏரிகளில் கூடுதல் தண்ணீர் அடுத்த ஆண்டு வரை குடிநீர் தட்டுப்பாடு வராது

நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால்
 
 சென்னை ஏரிகளில்
 
 கூடுதல் தண்ணீர்
 
 அடுத்த ஆண்டு வரை
 
 குடிநீர் தட்டுப்பாடு வராது

சென்னை, நவ. 29- இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் சென்னை நகரில் சராசரி அளவை விட குறைவாக மழை பெய்துள்ளது.

என்றாலும், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் ஓரளவு மழை பெய்துள்ளது. கிருஷ்ணா தண்ணீரும் தொடர்ந்து வந்து கொண்டி ருக்கிறது.

எனவே, கடந்த ஆண்டு இதேநாளில் குடிநீர் ஏரிகளில் இருந்த தண்ணீரை விட இந்த வருடம் 2219 மில்லியன் கன அடிதண்ணீர் கூடுதலாக உள்ளது. மழையால் மட்டும் 2600 மில்லியன் கனஅடி தண்ணீர் வந்திருக்கிறது.

கடந்த ஆண்டு பூண்டி ஏரியில் இதேநாளில் 2158 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது. இன்று 2829 மில்லியன் கனஅடி உள்ளது. புழல் ஏரியில் தற்போது 2591 மில்லியன் கனஅடி தண்ணீர் இருக்கிறது. கடந்த ஆண்டு இதேநாளில் 1679 மில்லியன் கனஅடி இருந்தது.

சோழவரம் ஏரியில் கடந்த ஆண்டு இருப்பு 607 மில்லியன் கனஅடி. இன்றைய இருப்பு 685 மில்லியன் கனஅடியாக உள்ளது. செம்பரம் பாக்கத்தில் கடந்த ஆண்டு இதேநாளில் 1570 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது. இன்றைய இருப்பு 2128 மில்லியன் கனஅடி. வீராணத்தில் தற்போது 1051 மில்லியன் கனஅடி தண்ணீர் இருக்கிறது. கடந்த ஆண்டு இதேநாளில் இருப்பு 785 மில்லியன் கனஅடி.

பூண்டி ஏரியின் மொத்த உயரம் 35 அடி. இன்றைய நீர்மட்டம் 34.02 அடி. தண்ணீர் வரத்து 669 கனஅடி. இன்று புழல் ஏரியின் நீர்மட்டம் 17.93 அடி இதன் உயரம் 21.20 அடி சோழவரம் ஏரியின் உயரம் 17.86 அடி. இன்றைய நீர்மட்டம் 15.15 அடி.

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரம் 24 அடி. இன்றைய நீர்மட்டம் 17.97 அடி. இன்று காலை வீராணம் ஏரியின் நீர்மட்டம் 13.90 அடி இதன் மொத்த உயரம் 15.60அடி. வீராணம் ஏரிக்கு 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகிறது. ஏரியின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அந்த தண்ணீர் முழுவதும் திறந்துவிடப்படுகிறது.

பூண்டி. புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், வீராணம் ஏரிகளில் தற்போது 9284 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. இந்த தண்ணீர் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை சென்னை நகருக்கு குடிநீர் சப்ளை செய்ய போதுமானது.

இதுதவிர கிருஷ்ணா தண்ணீர் கடந்த அக்டோபர் 7-ந்தேதி முதல் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதவிர கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்தின் கீழ் மீஞ்சூரில் இருந்தும் தண்ணீர் வருகிறது. எனவே, இந்த வருடம் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு என்ற பேச்சேவராது என்று குடிநீர் வாரியஅதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு சென்னைக்கு 7 டி.எம்.சி. கிருஷ்ணா தண்ணீர் வந்தது. இந்த ஆண்டு அக்டோபர் முதல் இதுவரை 2.63 டி.எம்.சி. தண்ணீர் வந்திருக்கிறது. சென்னைக்கு இதுவரை சராசரியாக தினமும் 650 மில்லியன் லிட்டர் குடிநீர் சப்ளை செய்யப்பட்டது. தற்போது 670 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

 

விருதுநகர்: கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

Print PDF

தினமணி            29.11.2010

விருதுநகர்: கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

சிவகாசி, நவ.29: விருதுநகர் மாவட்டத்தில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு துணை முதல்வர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். விருதுநகர் மாவட்டத்தில் ரூ. 597 கோடி திட்ட மதிப்பில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கான அடிக்கல்லை நாட்டினார் துணை முதல்வர் ஸ்டாலின். இன்று சிவகாசிக்கு அருகே உள்ள ஆலங்குளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் இன்று இதற்கான அடிக்கல் நாட்டி பேசினார்.

குடிநீர் தட்டுப்பாடு நிலவும் மாவட்டமாக அறியப்பட்ட விருதுநகர் மாவட்டத்தில் குடிநீர் பஞ்சத்தைப் போக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிய பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கைக்கு நடவடிக்கை எடுக்கும் விதத்தில் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

 

வல்லநாடு அருகே தூத்துக்குடிக்கு குடிநீர் வழங்கும் பைப் லைனில் உடைப்பு சீரமைப்பு பணிகளை அமைச்சர் ஆய்வு

Print PDF

தினகரன்                29.11.2010

வல்லநாடு அருகே தூத்துக்குடிக்கு குடிநீர் வழங்கும் பைப் லைனில் உடைப்பு சீரமைப்பு பணிகளை அமைச்சர் ஆய்வு

தூத்துக்குடி, நவ.29: தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 139 வீடுகள் இடிந்துள்ளன. வல்லநாட்டில் இருந்து குடிநீர் கொண்டுவரும் 80 ஆண்டுகள் பழமையான ராட்சத குழாய் உடைந்தது. இதனை சீரமைக்கும் பணி போர்க் கால அடிப்படையில் நடந்து வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக தூத்துக்குடி மாநகராட்சிக்கு குடிநீர் கொண்டு வரும் பைப் லைன் உடைந்தது. வல்லநாடு தலைமை நீரேற்றும் நிலையம் அருகே உள்ள மருதவாய்க்கால் பகுதி வழியாக இந்த பைப் லைன் தூத்துக்குடி செல் கிறது. இதில் 1930ல் அமைக்கப்பட்ட முதலாவது பைப் லைனில் பெரிய அளவில் உடைப்பு ஏற்பட்டதால் அதிகப்படியான குடிநீர் வீணாக வெளியேறுகிறது. இதனால் தூத்துக்குடிக்கு குடிநீர் வழங்குவது பாதிக்கப்பட்டுள்ளது.

உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்கும் பணி போர்க்கால அடிப்படை யில் நடந்து வருகிறது. இதை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டார். பணிகளை விரைவில் முடிக்கு மாறு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு அவர் உத்தரவிட்டார். மேயர் கஸ்தூரி தங்கம், இளநிலை பொறியாளர்கள் சரவணன் மற்றும் கவுன்சிலர்கள் இருந்தனர்.

தூத்துக்குடிக்கு குடிநீர் கொண்டு வரும் முதலாவது பைப் லைனில் வல்லநாடு அருகே உடைப்பு ஏற்பட்டுள்ளதால் தண்ணீர் பீறிட்டு வெளியேறுகிறது. உள்படம்: சீரமைப்பு பணிகளை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டார்.

 


Page 131 of 390