Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

கூட்டு குடிநீர் திட்ட பிரதான குழாய் உடைப்பு: ராசிபுரம் நகராட்சியில் 4 நாள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

Print PDF

தினமலர்             26.11.2010

கூட்டு குடிநீர் திட்ட பிரதான குழாய் உடைப்பு: ராசிபுரம் நகராட்சியில் 4 நாள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

ராசிபுரம்: பூலாம்பட்டி - ராசிபுரம் கூட்டு குடிநீர் திட்டத்தில் புங்கனேரி அருகே ராசிபுரத்துக்கு வரும் பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் 28ம் தேதி குடிநீர் விநியோகம் ராசிபுரம் நகராட்சியில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. ராசிபுரம் நகர மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு பூலாம்பட்டி - ராசிபுரம் காவிரி கூட்டு குடிநீர் 34.10 கோடி ரூபாய் செலவில் திட்டம் செயல்படுத்தப்பட்டு, மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அதற்காக ராசிபுரம் பழைய பஸ் ஸ்டாண்ட் மற்றும் ஹவுசிங் போர்டு ஆகிய இடங்களில் மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் இடைப்பாடி, ராசிபுரம், கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. அதற்காக நெடுங்குளம், கரட்டுப்புதூர், பூலாம்பட்டி ஆகிய ஊர்களில் பம்பிங் ஸ்டேசன் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 600 எம்.எம்., கொண்ட ராட்சத குழாய்கள் தண்ணீர் அழுத்தம் தாங்காமல், அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. தவிர, பூலாம்பட்டி துவங்கி வழியோர கிராமங்கள் முழுவதும் தண்ணீர் சென்று விடுவதால் கடைசியாக உள்ள ராசிபுரத்திற்கு போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை. அதனால் ராசிபுரத்தில் அடிக்கடி குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குறிப்பாக கோடை காலங்களில் குடிநீருக்காக மக்கள் படும் அவஸ்தை வார்த்தைகளால் சொல்ல இயலாத நிலை உள்ளது. மூன்று மாதத்திற்கு ஒரு முறை குடிநீர் வரும் குழாய்களில் உடைப்பு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டு குடிநீர் கிடைக்காத நிலையும் உள்ளது. இந்நிலையில் தற்போது பெய்து வரும் தொடர் மழைப்பொழிவால் இடைப்பாடி அருகே ராட்சத குழாய்கள் தாங்கிச் செல்லும் மூன்று மேடை குட்டைகள் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு, பைப்புகள் அனைத்தும் உடைந்து சேதம் அடைந்துள்ளது. அதை சீரமைக்கும் வரை ராசிபுரத்துக்கு குடிநீர் சப்ளை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து ராசிபுரம் நகராட்சி கமிஷனர் தனலட்சுமி வெளியிட்ட அறிக்கை: ராசிபுரம் நகராட்சிக்கு இடைப்பாடி நெடுங்குளம் காவேரி ஆற்றிலிருந்து குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் தினசரி குடிநீர் பெறப்பட்டு வருகிறது. தற்போது பெய்து வரும் கன மழையால் இடைப்பாடி அருகே உள்ள குரும்பப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட புங்கனேரியிலிருந்து வந்த மழை வெள்ளம் மூலம் ராசிபுரத்திற்கு பிரதான குடிநீர் குழாய் அடித்து செல்லப்பட்டது. அதை சீரமைக்கும் பணியை குடிநீர் வடிகால் வாரியத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். அதனால் ராசிபுரம் நகராட்சியில் 25ம் தேதி முதல் 28ம் தேதி வரை குடிநீர் விநியோகம் செய்ய இயலாது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இரண்டே நாளில் குடிநீர் இணைப்பு கமிஷனர் அறிவிப்பு

Print PDF

தினகரன்                  26.11.2010

ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இரண்டே நாளில் குடிநீர் இணைப்பு கமிஷனர் அறிவிப்பு

ஊட்டி, நவ. 26: ஊட்டி நகராட்சிக்குட்பட்ட மெயின் பஜார் மற்றும் அப்பர் பஜார் பகுதி மக்கள் விண்ணப்பித்த இரு நாட்களில் குடி நீர் இணைப்பு வழங்கப்ப டும் எனநகராட்சி கமிஷனர் தெரிவித்தார்.

ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெரும்பாலான பகுதிகளில் குடிநீர் இணைப்பு வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு நகரா ட்சி நிர்வாகம் உடனடியாக அனுமதி வழங்கி வருகிறது.அனுமதி வழங்கியவுடன் சம்பந்தப்பட்ட குடியிருப்புவாசிகள்சாலையின் குறுக்கே குழாயை கொண்டு செல்ல இரவில் யாருக்கும் தெரி யாமல் சாலையை தோண்டி விடுகின்றனர். தோண்டப்பட்ட இடத்தை அப்படியே விட்டு விடுவதால் நாள டைவில் சாலை பழுதடைந்து விடுகிறது.

சாலையில் பெரும் பள் ளம் ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத நிலை உருவாகிறது.

இதனை கருத்தில் கொண்டு நகராட்சி நிர்வாகம் தற்போது ரூ.3 கோடியில் சீரமைக்கப்படவுள்ள சாலை களின் ஓரங்களிலுள்ள குடியிருப்பு வாசிகளுக்கு சாலை அமைக்கும் முன் குடிநீர் குழாய்களுக்கு விண்ணப்பித்தால் சாலை தோண்டப்பட்டு குழாய் அமை த்த பின் சாலை சீரமைப்பு பணி களை தொடர முன் வந்துள்ளது.

ஊட்டி நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ராமமூர்த்தி கூறியதாவது:

ஊட்டி நகராட்சிக்குட்பட்ட மெயின் பஜார், அப்பர் பஜார், அணிக்கொரை செல்லும் சாலையில் உள்ள பகுதிகள், தாமஸ் சர்ச் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் சாலைமிகவும் பழுதடைந்துள்ளது. இச்சாலைகளை ரூ.3 கோடி மதிப்பில் சீர மைக்க திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் விடும் பணிகளும் முடியும் தருவாயில் உள் ளது. சாலைகளை சீரமைக்கும் பணி விரைவில் துவக்கப்படவுள்ளது.

இப்பகுதிகளில் உள்ள மக்கள் தங்களது குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வேண்டுமாயின் உடனடியாக விண்ணப்பிக்கலாம். இப்பகுதிகளில் பல குடியிருப்புக்களுக்கு சாலையின் குறுக்கே குழாய்கொண்டு செல்ல வேண்டிய கட்டா யம் உள்ளதால் சாலை அமைத்த பின்னர் மீண்டும் சாலையை தோண்டி எடுக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே சாலை அமைக்கும் முன் இப்பகுதி மக்கள் குடிநீர் இணைப்பு வேண்டி விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த இரு நாட்களில் குழாய்கள் அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்படும். சாலைகள் அமை த்த பின் குடிநீர் இணைப்பு கேட்டு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு சாலையின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பை கருத்தில் கொண்டு 3 ஆண்டுகள் கழித்தே குடிநீர் இணைப்பு வழங்கப்படும்.

எனவே ஊட்டி நகராட்சிக்குட்பட்ட தாமஸ் சர்ச், அப்பர் பஜார், லோவர் பஜார், மெயின் பஜார் மற்றும் அணிக்கொரை செல்லும் சாலையோர குடியிருப்புவாசிகள் புதிதாக குடிநீர் இணைப்பு வேண்டுமாயின் உடனடியாக நகரா ட்சி நிர்வாகத்தை அணுகி விண்ணப்பித்து இணைப்பை பெற்று கொள்ளலாம். இதன் மூலம் இப்பகுதிகளில் சீரமைக்கப்படும் சாலைகளை 3 ஆண்டுகளுக்கு பழுதடையாமல் காக்க முடியும். இவ்வாறு கமிஷனர் ராமமூர்த்தி தெரிவித்தார்.

 

மோட்டார் மூலம் குடிநீரை உறிஞ்சுவதால் வாலாஜாபாத்தில் குடிநீர் தட்டுப்பாடு

Print PDF

தினமலர்             25.11.2010

மோட்டார் மூலம் குடிநீரை உறிஞ்சுவதால் வாலாஜாபாத்தில் குடிநீர் தட்டுப்பாடு

வாலாஜாபாத் : வாலாஜாபாத்தில் சிலர் மின் மோட்டார் பயன்படுத்தி, குடிநீரை உறிஞ்சுவதால் பலர் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். வாலாஜாபாத் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. ஒவ்வொரு வார்டிலும் ஐந்துக்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. பேரூராட்சியில் 12 ஆயிரத்து 400 பேர் வசித்து வருகின்றனர். நேரு நகர், பேரூராட்சி அலுவலகம், சேர்காடு ஆகிய இடங்களில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள் கட்டப்பட்டு, மக்களுக்கு பாலாற்று குடிநீர் வழங்கப்படுகிறது. வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தவிர தெருவிற்கு இரண்டு தெருக் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. வீடுகளுக்கு வழங்கப்பட்ட குடிநீர் இணைப்புகளுக்கு குடிநீர் வரியாக மாதம் 50 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. வீடுகளில் குடிநீர் இணைப்பு பெற்ற பலர் மின் மோட்டார் பொருத்தி குடிநீரை உறிஞ்சி தொட்டிகளில் சேமித்து வைக்கின்றனர். இதனால் தெரு குழாய்களில் தண்ணீர் வருவதில்லை. மின் மோட்டார் பொருத்தாதவர்களுக்கும் போதிய அளவு குடிநீர் கிடைப்பதில்லை.

இதனால் பாதிக்கப்படுபவர்களும் தங்கள் வீடுகளில் குடிநீர் தொட்டி கட்டி குடிநீரை சேமித்து வைக்க துவங்கியுள்ளனர். வசதி படைத்தவர்கள் உடனடியாக குடிநீர் தொட்டி கட்டுகின்றனர். மின் மோட்டார் பொருத்தி தண்ணீரை உறிஞ்சுகின்றனர். வசதி இல்லாதவர்கள் குடிநீருக்காக அலைய வேண்டியுள்ளது. மின் மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சுவதை தடுக்க வேண்டிய பேரூராட்சி நிர்வாகம் அமைதியாக இருப்பது, மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேரூராட்சி செயல் அலுவலர் செல்வராஜன் கூறும்போது, "பேரூராட்சியில் மொத்தம் 1,480 குடிநீர் இணைப்புகள் உள்ளன. ஒரு தெருவிற்கு இரண்டு குழாய்கள் வீதம் 35 பொதுக் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. தெருக் குழாய்கள் தவிர அனைத்து குழாய் இணைப்பிற்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது' என்றார்.

 


Page 133 of 390