Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

தாமிரபரணி கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கு 29-ம் தேதி அடிக்கல்: மு.க.ஸ்டாலின்

Print PDF

தினமணி                 11.11.2010

தாமிரபரணி கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கு 29-ம் தேதி அடிக்கல்: மு..ஸ்டாலின்

சென்னை, நவ. 10: தாமிரபரணி கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கு வரும் 29-ம் தேதி அடிக்கல் நாட்டப்படும் என்று துணை முதல்வர் மு..ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சட்டப் பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது, இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் ராமசாமி எழுப்பிய கேள்விக்கு ஸ்டாலின் அளித்த பதில்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் வத்திராயிருப்பு ஒன்றியத்தைச் சேர்ந்த அனைத்து குடியிருப்புகளுக்கும் குடிநீர் வழங்கும் வகையில் தாமிரபரணி ஆற்றை நீர் ஆதாரமாகக் கொண்டு 173 கோடி திட்ட மதிப்பீட்டில் கூட்டுக்குடிநீர்த் திட்டம் தயாரிக்கப்பட்டு நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா வரும் 29-ம் தேதி நடைபெறும். இந்தப் பணிகள் முடிவடைகின்ற நேரத்தில் புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூலமாக வத்திராயிருப்பு ஒன்றியத்தில் இருக்கக் கூடிய குடிநீர் பற்றாக்குறை மற்றும் எதிர்கால குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும்.

தாமிரபரணி ஆற்றினை நீர் ஆதாரமாகக் கொண்டு முக்கூடல் அருகே நீர் உறிஞ்சும் கிணறுகள் அமைக்கப்படும். இதன்வழியாக, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள செய்தூர், செட்டியார்பட்டி, மம்சாபுரம், வத்திராயிருப்பு, சுந்தரபாண்டியபுரம், .புதுப்பட்டி, .கொடிக்குளம் ஆகிய ஏழு பேரூராட்சிகள், இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் வத்திராயிருப்பு ஒன்றியங்களில் இருக்கக் கூடிய 395 குடியிருப்புகளைச் சேர்ந்த 3 லட்சத்து 84 ஆயிரத்து 315 மக்கள் பயன்பெறுவர்.

இந்த கூட்டுக் குடிநீர்த் திட்டத்தோடு ராஜபாளையம் நகராட்சியை இணைப்பதற்கான கோரிக்கையும் பரிசீலிக்கப்படும் என்றார் துணை முதல்வர் மு..ஸ்டாலின்.

 

கோத்தகிரி மக்கள் எதிர்பார்ப்பு குடிநீர் பற்றாக்குறை போக்க உடனடி நடவடிக்கை தேவை

Print PDF

தினகரன்                11.11.2010

கோத்தகிரி மக்கள் எதிர்பார்ப்பு குடிநீர் பற்றாக்குறை போக்க உடனடி நடவடிக்கை தேவை

குன்னூர், நவ.11: கோத்த கிரி நகரின் குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. கோத்தகிரி நகரின் குடி நீர் தேவையை பூர்த்தி செய்ய கடந்த 1972ம் ஆண்டு ஈளாடாவில் பேரூ ராட்சி நிர்வாகம் சார்பில் ஆயுள் காப்பீட்டு கழகத்தின் மூலம் ரூ.20 லட்சம் கடன் பெற்று தடுப்பணை கட்டப்பட்டது.

தடுப்பணைக்கு வரும் நீரை கேர்பெட்டா புதூர் பகுதியிலுள்ள பம்ப் ஹவு சில் சுத்திகரித்து சக்திமலை குடிநீர் தேக்க தொட்டியில் சேமித்து பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. அப்போது இருந்த மக்கள் தொகைக்கு ஏற்ற வகையில் தடுப்பணை கட்டப்பட் டது. ஆனால் நாளிடைவில் மக்கள் தொகை அதிகரிப்பு, குடிநீர் பயன்பாடு அதிகரிப்பு காரணமாக தற்போது அடிக்கடி குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. தடுப்பணையில் வீணாகும் நீரை சேமித்து மக்களுக்கு பயன்படும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.

இதையடுத்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பில் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மாற்று குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

தடுப்பணையில் குடிநீர் குழாய்கள் இணைக்கப்பட்டு குடிநீர் வினியோக வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.ஆனால் குழாய்கள் முறையாக பதிக்காததால் இத்திட்டம் பயன் அளிக்கவில்லை. கோத்தகிரி நகரில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க அளக்கரை குடிநீர் திட்டம் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கான தீர்மானமும் பேரூராட்சி மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட் டது. திட்டத்தை நிறைவேற்ற செலவாகும் ரூ.4 கோடியில் ஒரு பங்கினை பேரூராட்சி நிர்வாகம் செலுத்த வேண் டும் என்று குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்தது.

ஆனால் பேரூராட்சியில் நிலவும் நிதி பற்றாக்குறை காரணமாக இத்திட்டம் கைவிடப்பட்டது. அளக்கரை குடிநீர் திட்டத்தை நடப்பாண்டு செயல்படுத்த சமீபத்தில் மாவட்டத்திற்கு வந்திருந்த துணை முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. திட்டத்தை நிறைவேற்ற தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்வர் உறுதியளித்துள்ளார்.

எனவே இத்திட்டம் நிறைவேறும் பட்சத்தில் கோத்தகிரி நகர மக்களுக்கு தடையற்ற குடிநீர் வினியோகம் சாத்தியமாகும் என்று நம்பப்படுகிறது.

மேலும் ஈளாடா அணையை தூர் வாரி வீணாகும் நீரை சேமிக்க நடவடிக்கை எடுத்தால் பொதுமக்கள் அதிகம் பயன் பெறுவர் என்று பொதுமக்கள், அதிகாரிகள் கூறி வருகின்றனர்.

 

விருதுநகர், வத்திராயிருப்பு ஒன்றியத்தில் ரூ173 கோடி செலவில் கூட்டுக் குடிநீர் திட்டம்

Print PDF

தினகரன்                         11.11.2010

விருதுநகர், வத்திராயிருப்பு ஒன்றியத்தில் ரூ173 கோடி செலவில் கூட்டுக் குடிநீர் திட்டம்

சென்னை, நவ. 11: விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்தில் ரூ173 கோடி மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்று பேரவையில் துணை முதல்வர் மு..ஸ்டாலின் தெரிவித்தார்.

சட்டப் பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் ராமசாமி, வத்திராயிருப்பு ஒன்றியத்தில் கூட்டுக் குடிநீர் திட்டம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு துணை முதல்வர் மு..ஸ்டாலின் பதில் அளித்து பேசியதாவது:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு ஒன்றியத்தைச் சேர்ந்த அனைத்து குடியிருப்புகளுக்கும் குடிநீர் வழங்கும் வகையில் தாமிரபரணி ஆற்றை நீராதாரமாகக் கொண்டு ரூ173 கோடி திட்ட மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்டம் தயாரிக்கப்பட்டு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

ராமசாமி:

எங்களுடைய ஒன்றிய பகுதிக்கு தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தை அறிவித்த துணை முதல்வருக்கும், எங்களுடைய மாவட்ட அமைச்சர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டும். இந்த திட்டத்தோடு ராஜபாளையம் நகராட்சியை இணைப்பதற்கான முயற்சியை துணை முதல்வர் மேற்கொள்ள வேண்டும்.

மு..ஸ்டாலின்:

தமிழ்நாடு உள்கட்டமைப்பு மற்றும் நிதி சேவை நிறுவனத்தின் மூலமாக கலந்து ஆலோசித்து, திட்ட மதிப்பீடு சீராய்வு செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே, இந்த பணிகள் விரைவில் முடிவடைய இருக்கிறது. எந்த தேதியில் இது தொடங்கப்படும் என்று உறுப்பினர் கேட்கிறார். வரும் 29ம் தேதி, அதற்குரிய அடிக்கல் நாட்டுவிழா நடைபெற இருக்கிறது.

எனவே, இந்த பணிகள் முடிவடையும் நேரத்தில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலமாக வத்திராயிருப்பு ஒன்றியத்தில் இருக்கக்கூடிய குடிநீர் பற்றாக் குறை தீரும். எதிர்கால குடிநீர் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் தாமிரபரணி ஆற்றை நீராதார மாகக் கொண்டு முக்கூடல் அருகே நீர் உறிஞ்சி கிணறுகள் அமைத்து, விருதுநகர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய செய்தூர், செட்டியார்பட்டி, மம்சாபுரம், வத்திராயிருப்பு, சுந்தரபாண்டிய புரம், வட புதுப்பட்டி கொடிக்குளம் ஆகிய 7 பேரூராட்சிகள் மற்றும் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் வத்திராயிருப்பு ஒன்றியங்களில் இருக்கக்கூடிய 395 குடியிருப்புகளில் இருக்கும் 3 லட்சத்து 84 ஆயிரத்து 315 மக்கள் பயன் பெறக்கூடிய வகையில் இந்த கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படவிருக்கிறது. இந்த திட்டத்துடன் ராஜபாளையம் நகராட்சியை இணைப்பதற்கான கோரிக்கை பரிசீலிக்கப்படும். இவ்வாறு ஸ்டாலின் பதில் அளித்தார்.

Last Updated on Thursday, 11 November 2010 05:55
 


Page 139 of 390