Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

ரூ.173 கோடியில் கூட்டு குடிநீர் திட்டம்; மு.க.ஸ்டாலின் தகவல்

Print PDF

மாலை மலர் 10.11.2010

ரூ.173 கோடியில் கூட்டு குடிநீர் திட்டம்; மு..ஸ்டாலின் தகவல்

ரூ.173 கோடியில்
 
 கூட்டு குடிநீர் திட்டம்;
 
 மு.க.ஸ்டாலின் தகவல்

சென்னை, நவ. 10- சட்டசபையில் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி எம்.எல்.. ராமசாமி கேட்ட கேள்விக்கு பதில் அளித்து துணை முதல்-அமைச்சர் மு..ஸ்டாலின் கூறியதாவது:-

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி வத்திராயிருப்பு ஒன்றியத்தை சேர்ந்த அனைத்து குடியிருப்புகளுக்கும் தாமிரபரணி ஆற்றை நீர் ஆதாரமாக கொண்டு குடிநீர் வழங்கும் வகையில் கூட்டுக் குடிநீர் திட்டங்கள் ஆய்வில் உள்ளது. ரூ.173 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. வருகிற 29-ந் தேதி அடிக்கல் நாட்டுவிழா நடைபெறும்.

இதே போல தாமிரபரணி ஆற்றில் முக்கூடல் அருகே நீர் உறிஞ்சும் நிலையம் அமைக்கப்பட்டு 7 பேரூ ராட்சிகளில் சுமார் 3 லட்சம் மக்கள் பயன் அடையும் வகையில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 

திருவில்லிபுத்தூரில் 5 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம்

Print PDF

தினகரன்                        10.09.2010

திருவில்லிபுத்தூரில் 5 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம்

திருவில்லிபுத்தூர், நவ. 10:மலை பகுதிகளில் பெய்த தொடர் மழையால் திருவில்லிபுத்தூரில் 5 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படும் என நகராட்சி மேலாளர் கூறினார். மழைக்காலம் என்பதால் குடிநீரை சுட வைத்து குடிக்க வேண்டு மென அவர் அறிவுறுத்தியுள்ளார்.

திருவில்லிபுத்தூர் பகுதியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக போதிய மழையின்மையால் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் நகரில் குடிநீர் வழங்கும் ஆழ்துளை கிணறுகள், செண்பகத்தோப்பு பேயனாற்று பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. துவக்கத்தில் 3, 4, 5, 7 நாட்களுக்கு ஒருமுறை என சப்ளை செய்யப்பட்ட குடிநீர் தொடர் வறட்சியால் சில மாதங்களாக 10 நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்பட்டது. குளங்கள், கண்மாய்களில் தண்ணீர் வற்றியதால் வீடுகளில் உள்ள கிணறுகள், ஆழ்துளை கிணறுகளிலும் தண்ணீர் இல்லை. டிராக்டரில் கொண்டு வந்து விலைக்கு விற்கப்பட்ட குடிநீரை நீண்ட வரிசையில் மக்கள் நின்று வாங்கி பயன்படுத்தினர். வர்த்தக நிறுவனங்கள், ஓட்டல்கள் டிராக் டர் தண்ணீரை நம்பியே தொழில் செய்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மேற்கு தொடர்ச்சி மலையில் மழை பெய்தது. இதன் மூலம் திருவில்லிபுத்தூர் நகருக்கு குடிநீர் வழங்கும் பேயனாறு, அழகர்கோவில், பேச்சியம்மன் கோவில் பின்புறமுள்ள ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்தது.

இதுகுறித்து திருவில்லிபுத்தூர் நகராட்சி மேலாளர் அப்துல் ரஷீத் நிருபர்களிடம் கூறியதாவது: நிலத்தடி நீர்மட்டம் குறைவால் நிலவிய தண்ணீர் பற்றாக்குறையால் கடந்த 3 மாதங்களாக 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை செய்யப்பட்டது. தற்போது ஓடைகளில் தண்ணீர் ஓடுவதையடுத் நகராட்சி பகுதியில் 5 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மழையின் அளவை பொறுத்து 3 நாட்களுக்கு ஒருமுறை அல்லது ஒருநாள் விட்டு ஒருநாள் என குடிநீர் சப்ளை செய்ய வாய்ப்புள்ளது.

மலைப்பகுதியில் இருந்து வரும் மழைநீர் என்பதால் நோய் தடுப்பு மருந்து கலந்து குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. மழைக்காலம் என்பதால் பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

"ஜல்" புயல் மழை: 4 ஏரிகளில் நீர்மட்டம் உயர்வு

Print PDF

மாலை மலர்               09.11.2010

"ஜல்" புயல் மழை: 4 ஏரிகளில் நீர்மட்டம் உயர்வு

“ஜல்” புயல் மழை:
 
 4 ஏரிகளில் நீர்மட்டம் உயர்வு

சென்னை, நவ.8- சென்னையை மிரட்டி வந்த "ஜல்" புயல் நேற்றிரவு கரையை கடந்தபோது பலத்த மழை- சேதம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புயல் வலுவிழந்து கரையை கடந்ததால் அதிக அளவு மழை பெய்யவில்லை. விட்டு விட்டுதான் மழை பெய்தது.

ஆனாலும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான பூண்டி, புழல், செம்பரம் பாக்கம், சோழவரம் ஏரிகளுக்கு கணிசமான நீர் வரத்து வந்தது.

பூண்டி எரிக்கு 47 மி. கனஅடி தண்ணீரும், புழல் ஏரிக்கு 84 மி.கனஅடி தண்ணீரும் வந்துள்ளது.

இதேபோல் செம்பரம்பாக்கம் ஏரிக்கு 35 மி.கன அடியும், சோழவரத்துக்கு 7 மி.கனஅடி தண்ணீரும் கிடைத்துள்ளது. 4 ஏரிகளுக்கும் மொத்தம் 173 மி.கனஅடி தண்ணீர் கிடைத்துள்ளதால் ஏரிகளின் நீர்மட்டம் ஓரளவு உயர்ந்துள்ளது.

தற்போது பூண்டி ஏரிக்கு 1007 கனஅடி வீதம் தண்ணீர் வருகிறது. புழல் ஏரிக்கு 1105 கனஅடியும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு 498 கனஅடியும் சோழவரம் ஏரிக்கு 81 கனஅடி தண்ணீரும், வீராணம் ஏரிக்கு 200 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

 


Page 140 of 390