Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

ஓசூரில் நவ.,13ல் குடிநீர் திட்ட 3ம் கட்ட பணி துவக்கம்: துணை முதல்வர் வருகை

Print PDF

தினமலர்                        04.11.2010

ஓசூரில் நவ.,13ல் குடிநீர் திட்ட 3ம் கட்ட பணி துவக்கம்: துணை முதல்வர் வருகை

ஓசூர்: ஓசூரில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் மூன்றாம் கட்ட பணிகள் வரும் 13ம் தேதி துணை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ஜப்பான் பன்னாட்டு நிதியுதவியுடன் 1,928 கோடி ரூபாயில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் துவங்கப்பட்டு ஐந்து தொகுப்பாக பணிகள் நடந்து வருகிறது. முதல் தொகுப்பில் காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்க ஒனேக்கல்லில் இறைப்பான் கிணறு, குழாய் பதிக்கும் பணிகளும், பென்னாகரம் அருகே மடத்தில் நான்கு ஏக்கரில் 240 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட சமநிலை நீர் தேக்க தொட்டி அமைக்கும் பணிகள் நடக்கிறது.

இரண்டாம் கட்டமாக தர்மபுரி அம்பேத்கர் நகர், சவுளூரில் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் மற்றும் நீர் சுத்திரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணியும் நடக்கிறது. ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 நகராட்சியில், 13 டவுன் பஞ்சாயத்துகள், 17 பஞ்சாயத்து யூனியன்களை சேர்ந்த 30 லட்சம் மக்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 70 லிட்டர் வீதம் தண்ணீர் வழங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.மூன்றாம் கட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், கெலமங்கலம், தளி, சூளகிரி மற்றும் வேப்பனப்பள்ளி பஞ்சாயத்து யூனியன்களை சேர்ந்த கிராமங்கள் பயன்பெறும் வகையில் 400 கோடி ரூபாய் மதிப்பில் ஒனேக்கல் கூட்டு குடிநீர் திட்டப்பணிகளை துணை முதல்வர் ஸ்டாலின் வரும் 13ம் தேதி ஓசூர் வருகிறார். அன்று ஓசூர் அடுத்த தின்னூரில் 20 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி, குழாய் பதிக்கும் பணிகளை துவக்கி வைக்கிறார். அரசு விழா முடித்த பின் மாலையில் கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டத்திலும், இரவு ஓசூரில் தி.மு.., சாதனை விளக்கதுக்கூட்டத்தில் துணை முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

 

6 வார்டுகளில் ரூ7.80 லட்சத்தில் குடிநீர் குழாய் சீரமைப்பு நகராட்சி தலைவர் தகவல்

Print PDF

தினகரன்                04.11.2010

6 வார்டுகளில் ரூ7.80 லட்சத்தில் குடிநீர் குழாய் சீரமைப்பு நகராட்சி தலைவர் தகவல்

பெரம்பலூர், நவ. 4: கவுன்சிலர்களின் கோரிக்கையை ஏற்று 6 வார்டுகளில் ரூ7.80 லட்சத்தில் காவிரி குடிநீர் திட்ட குழாய் சீரமைக்கப்படுமென நகராட்சி தலை வர் இளையராஜா தெரிவித்தார்.

பெரம்பலூர் நகராட்சி அவசர கூட்டம் நேற்று நடந் தது. தலைவர் இளையராஜா தலைமை வகித்தார். துணைத்தலைவர் முகுந்தன், ஆணையர் சுரேந்திர ஷா முன்னிலை வகித்தனர். பெர ம்பலூர் நகராட்சியில் குடி நீர் விநியோகம் சரிவர செய ல்படாத 4, 6, 7, 12, 16வது வார்டு, 20வது வார்டுகளில் கவுன்சிலர்களின் கோரிக் கையை ஏற்று, அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பழைய குடிநீர் பைப்லைனை அகற்றிவிட்டு ரூ7.80 லட்சத்தில் புதிய பைப்லைன் அமைத்து குடிநீர் விநியோகம் செய்வது. 16வது வார்டு பெரியார் சிலையிலிருந்து புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி செல்லும் வழியில் ரூ5 லட்சத்தில் புதிய தார்சாலை, சிமென்ட் சாலை அமைப்பது. காமராஜர் வளைவு பகுதியிலிருந்து ஆத்தூர் சாலையிலுள்ள மயானம் வரை உள்ள நெடுஞ்சாலை பகுதியில் ரூ8

லட்சத்தில் சென்டர் மீடியம் அமைத்து சோடியம் ஆவிவிளக்கு பொருத்துவது. மாவட்ட திமுக அலுவலகம் தொடங்கி துறைமங்கலம் 3 ரோடு வரை உள்ள நெடுஞ்சாலை பகுதியில் ரூ10 லட்சத்தில் சென்டர் மீடியம் அமைத்து சோடியம் ஆவிவிளக்கு பொருத்துவது உள்ளிட்ட 50 தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

நகராட்சி தலைவர் இளையராஜா பேசும்போது, காமராஜர் வளைவு முதல் சங்குப்பேட்டை வரை. சங்குப்பேட்டை முதல் பாலக் கரை வரை. புதிய பஸ்ஸ்டாண்டு முதல் மாவட்ட திமுக அலுவலகம் வரை என 3 கட்டமாக ரூ45

லட்சத்தில் சென்டர் மீடியா விளக்கு அமைக்கப்பட்டுள்ளன. நிர்வாக அனுமதி கிடைத்தவுடன், புதுபஸ்ஸ்டாண்டு பகுதியிலிருந்து 4 ரோடு வரை அடுத்தகட்டமாக 1 கிலோ மீட்டருக்கு சென்டர்மீடியம் அமைக்கப்படவுள்ளன.

பாதாள சாக்கடை திட்ட பணிகளு க்காக குழாய் அமைக்கும் பணி முடிவடைந்த பகுதிக ளில் தார்சாலை அமைக்கும் பணி நடைபெறவுள்ளன. உள்ளாட்சித்துறை அமைச்சரால் வழங்கப்பட்ட ரூ3 கோடியில் புதிய தார்சாலை அமைக்கப்பட்டவுடன் நகராட்சியில் தார்சாலை, சிமென்ட் சாலைகள் இல் லாத பகுதியே கிடையாது என்ற நிலை ஏற்படும் என்றார்.

நகராட்சி பொறியாளர் கருணாகரன், கவுன்சிலர் கள் பாரி, அன்புத்துரை, கனகராஜ், கருணாநிதி, ஜெயக்குமார், மாரிக்கண் ணன், ரஹமத்துல்லா, சிவக்குமார், ரமேஷ்பாண்டியன், ராமச்சந்திரன், ராஜேந்தி ரன், சரவணன், ஈஸ்வரி, புவனேஸ்வரி, சுசீலா, தா ண்டாயி, கண்ணகி, பொற் கொடி, பேபிகாமராஜ் கலந்து கொண்டனர்.

 

தொடர் மழை எதிரொலி விருதுநகர் நகராட்சியில் வாரம் ஒரு நாள் குடிநீர் விநியோகம் அமைச்சர் தகவல்

Print PDF

தினகரன்                  04.11.2010

தொடர் மழை எதிரொலி விருதுநகர் நகராட்சியில் வாரம் ஒரு நாள் குடிநீர் விநியோகம் அமைச்சர் தகவல்

விருதுநகர், நவ. 4: விருதுநகர் நகராட்சி பகுதி மக்களுக்கு வாரம் ஒரு நாள் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

விருதுநகர் மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமான ஆணைக்குட்டம் நீர்த்தேக்கத்தை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நேற்று பார்வையிட்டார். பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

விருதுநகர் பகுதி மக்களுக்கு தற்போது 14 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களாக பெய்த மழையால் ஆணைக்குட்டம் நீர்த்தேக்கம், ஒண்டிப்புலி குவா ரிக்கு தண்ணீர் வந்துள்ளது. ஏற்கனவே ஆணைக்குட்டம் அணையிலிருந்து நாள் ஒன்றுக்கு 2 லட்சம் லிட்டர் மட்டுமே விநியோகம் செய்யப்பட்டது.

தொடர் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தற்போது நாள் ஒன்றுக்கு 20 லட்சம் லிட்டர் வரை குடிநீர் விநியோகம் செய்ய முடியும். ஒண்டிப்புலி குவாரியில் இருந்து நாள் ஒன்றுக்கு 10 லட்சம் லிட்டர் வரை வந்து கொண்டிருக்கிறது. எனவே நவ.8ம் தேதி முதல் விருதுநகர் பகுதி மக்களுக்கு வாரத்திற்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படும். மேலும் தொடர்ந்து மழை பெய்தால் 4 அல்லது 5 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி நகராட்சிக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். குழாய்களிலுள்ள கசிவுகளை சரிசெய்ய திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. புதிய குழாய்கள் பதிக்கும் பணி விரைவில் துவங்கும். மேலும் குல்லூர்சந்தை, கோவிலாறு, வெம்பக்கோட்டை, ஆணைக்குட்டம் ஆகிய அணைகளில் உலக வங்கி நிதியுதவியுடன் ரூ.8 கோடியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

நகர்மன்ற தலைவர் கார்த்திகா, ஆணையர் ஜான்சன், துணை தலைவர் காசிராஜன், பொறியாளர் கருப்பசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 


Page 143 of 390