Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

கடையநல்லூர் பகுதியில் குடிநீர் திட்டப்பணிகளை அதிகாரிகள் ஆய்வு

Print PDF

தினகரன்                  28.10.2010

கடையநல்லூர் பகுதியில் குடிநீர் திட்டப்பணிகளை அதிகாரிகள் ஆய்வு

கடையநல்லு£ர், அக். 28: கடையநல்லு£ர் நகராட்சி பகுதியில் சுமார் 1 லட்சம் பேர் வசிக்கின்றனர். இங்கு தாமிரபரணி குடிநீர் திட்டம் மூலமும், கருப்பாநதி பெரியாற்று படுகையின் மூலமும் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு சுமார் 40 ஆண்டுகள் ஆவதால் குடிநீர் விநியோக குழாயில் பழுது ஏற்பட்டு பொதுமக்களுக்கு சீரான குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.

இந்நிலையில் கடையநல் லு£ர் நகராட்சி பகுதியில் ரூ.23 கோடி மதிப்பீட்டில் புதிய குடிநீர் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக நீர்ஆதார பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கருப்பாநதி, கல்லாறு பெரியநாயகிஅம்மன் கோயில் பகுதியில் நகராட்சி நிர்வாக தலைமை பொறியாளர் ரகுநாதன், நகராட்சி மண்டல உதவி செயற்பொறியாளர் கனகராஜ், குடிநீர் வடிகால் வாரிய உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். நகராட்சி பொறியாளர் நடராஜன், உதவி பொறியாளர் அகமதுஅலி உடன் சென் றனர். கடையநல்லு£ர் நகராட்சி பகுதியில் புதிய குடிநீர் திட்டப் பணிகளை அதிகாரிகள் பார்வையிட்டனர்.

 

வணிகமயமாகி, நீர்வளம் வீணாகிவிடும் குளங்களை தனியாரிடம் விட எதிர்ப்பு

Print PDF

தினகரன்                 27.10.2010

வணிகமயமாகி, நீர்வளம் வீணாகிவிடும் குளங்களை தனியாரிடம் விட எதிர்ப்பு

கோவை, அக்.27: குளங்களை தனியாரிடம் விட்டால் வணிக மயமாகி விடும். நீர் வளத்தை வீணாக்க கூடாது என சுற்றுச்சூழல் அமைப்பினர் தெரிவித்தனர்.

கோவை மாநகராட்சியில், 8 குளங்களை சீரமைப்பது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடந்தது. நரசாம்பதி, கிருஷ்ணாம்பதி, செல்வாம்பதி, முத்தண்ண குளம், செல்வசிந்தாமணி, உக்க டம் பெரியகுளம், வாலாங்குளம், சிங்காநல்லூர் குளம் மாநகராட்சி கட்டுபாட்டில் இருக்கிறது. இந்த குளத்தை நகர் மேம்பாட்டு திட்டத்தில், 127 கோடி ரூபாய் செலவில் சீரமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், மாநகராட்சி நிர்வா கம், சுற்றுச்சூழல் அமைப்பு, விவசாயிகள் சங்கம், பொதுப்பணித்துறை நிர்வாகத்தினரி டம் கருத்து கேட்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மாநகரா ட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா, செயற்பொறியாளர் லட்சும ணன், சுற்றுச்சூழல் (பொதுப் பணி) செயற்பொறியாளர் இளங்கோவன், சிறுதுளி நிர் வாக அறங்காவலர் வனிதாமோகன், விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் வழுக்குபா றை பாலு, துணை தலைவர் கந்தசாமி, ஓசை நிர்வாகி காளிதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் சுற்றுச்சூழல் அமைப்பின் நிர்வாகிகள் பேசு கையில், " கோவை நகரில் உள்ள குளங்களில் வெளிநாட்டு பறவைகள் அதிகளவு வசிக்கின்றன. தற்போது குளத்தில் சாக்கடை நீர் தேக்கம் அதிக மாக இருக்கிறது. குளங்கள் மாநகராட்சி வசம் ஒப்படை த்த பின்னர் நிலைமை மேலும் மோசமாகி விட்டது. தனியார் வசம் குளங்களை ஒப்படைத் தால் வணிக மயமாகி விடும். குளத்தில் படகு விட்டு கேளிக் கை கூடமாக மாற்றி விடுவார் கள். நீர் வளம், உயிர் ஆதாரம். இதனை கேளிக்கையாக நினைக்க கூடாது. நீர் வளத் தை வீணாக்கி விடக்கூடாது. நீராதாரத்தை சுற்றுச்சூழல் பாது காப்பிற்கும், உயிரினங்கள் வாழ்வதற்கும், சுகாதாரமான காற்று கிடைக்கும் வகையிலும் மேம்படுத்தவேண்டும். மாநகராட்சி நிர்வாகமே, குளங்களை சீரமைக்கலாம். வணிக நோக்கத்திற்காக குளங்கள் மாற்றப்படுவதை நாங்கள் ஏற்கமாட் டோம்," என்றனர்.

விவசாய சங்கத்தின் சார் பில் வழுக்குபாறை பாலு, கந்த சாமி பேசுகையில், " 8 குளங் கள் நீர் பாசனத்திற்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலை மாறி விட்டது. பாசன வாய்க்கால் காணாமல் போய் விட்டது. கிருஷ்ணாம்பதி, செல்வாம்பதி குளத்திற்கு அருகே வேளாண் துறையின் விவசாய தோட்டம் இருக்கி றது. ஆனால் மாநகராட்சி நிர் வாகம், விவசாயமே நடக்கவில்லை, நீர் பாசனமே இல்லை எனக்கூறி வருகிறது. பொழுது போக்கு மையங்களாக குளங் கள் மாறிவிட்டால் விவசாயம் நடக்காது. நொய்யல் ஆற்றில் வெள்ளம் பாயும் போது தாதுபொருட்கள் அதிக கிடைக் கும். குளத்தில் வண்டல் மண் படியும். இந்த நீரையும், வண் டல் மண்ணையும் பயன்படுத்தினால் தான் விவசாயம் செழிக்கும். இதை மாநகராட்சி புரிந்து கொள்ளவில்லை.

கனிம வளத்துறை வண் டல் மண் எடுக்க தடை விதி த்து விட்டது. வெறும் ரசாயனத் தில் எப்படி நாங்கள் விவசா யம் செய்வது. குளங்களை அழகாக்கி, வேடிக்கை பார்த் தால் நன்றாக இருக்குமா, " என்றனர்.

சிறுதுளி அமைப்பினர் பேசுகையில், "3 குளங்களில் நீர் கிடையாது. பேரூர் பாலத்திற்கு அடுத்து நொய்யலில் சாக் கடை நீர் பாய்கிறது. இதனை யும் சீரமைத்தால் தான் குளங்களுக்கு மழை நீர் வரும், " என்றனர்.

கமிஷனர் அன்சுல் மிஸ்ரா பதிலளித்து பேசுகையில், " குளங்களை சீரமைக்க மாநகராட்சியிடம் நிதி ஆதாரம் கிடையாது. அதனால் தான் தனியார் பொதுமக்கள் பங்களிப்பு (பிபிபி) திட்டத்தில் 127 கோடி ரூபாய் செலவில் குளங்களை மேம்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் குளங்களை பராமரிக்கவேண்டும். இதற்கும் அதிக தொகை தேவை.

குளங்களில் கழிவு நீரை அப்படியே விட்டு விடமாட் டோம். கழிவு நீரை சுத்திகரித்து அதன் பின்னரே குளங்க ளுக்கு விடப்படும். குளங்களை நன்றாக பராமரித்தால் முன்பு இருந்த அளவை விட கூடுதல் நீரை சேமிக்க முடியும். சிங்காநல்லூர் குளம் மட்டுமே பாசனத்திற்காக திறக்கப்படுகிறது. மற்ற 7 குளங்கள் பாசனத்திற்கு பயன்படுத்தப்படவில்லை. நிலத்தடி நீர் மட்ட உயர்விற்கு மட்டுமே இந்த குளங்கள் உதவியாக இருக்கிறது," என்றார்.

இந்த கூட்டத்தில் விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர் கள் கடும் எதிர்ப்பு காட்டினர். இந்த திட்டம் தொடர்பாக மீண்டும் ஒரு முறை கருத்து கேட்டு விவாதிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

இது தொடர்பாக பிறகு அறிவிப்பதாக மாநகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

ஆலோசனை கூட்டத்தில் பரபரப்பு

கோவை மாநகரை சுற்றியுள்ள 8 குளங்களை தனியாரிடம் ஒப்படைத்து பராமரிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் அன்சுல் மிஸ்ரா தலைமையில் நேற்று நடந்தது.

 

நவம்பர் 30க்குள் குடிநீர் கட்டண பாக்கியை செலுத்த மாநகராட்சி கெடு

Print PDF

தினகரன்                      27.10.2010

நவம்பர் 30க்குள் குடிநீர் கட்டண பாக்கியை செலுத்த மாநகராட்சி கெடு

மும்பை, அக். 27: குடிநீர் கட்டண பாக்கியை நவம்பர் 30ம் தேதிக்குள் செலுத்தாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரித்துள்ளது.

மும்பையில் குடிநீர் விநியோகத்துக்கான கட்டணத்தை மாநகராட்சிக்கு செலுத்தாமல் பல தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் லட்சக்கணக்கில் பாக்கி வைத்துள்ளன. குடிநீர் கட்டண பாக்கியாக ஏற்கனவே நிலுவையில் உள்ள தொகையுடன் ரூ18,97,999 அதிகரித்துள்ளது என்று தகவல் உரிமை அறியும் சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது.

மேலும் புள்ளிவிவர அடிப்படையில், தனியார் மற்றும் அரசு நிறுவனங்களின் கட்டண பாக்கியை விட பொதுமக்களிடம் வர வேண்டிய கட்டண பாக்கி தொகை குறைவாக இருப்பதும் தெரியவந்துள்ளது. வீடுகளுக்கான குடிநீர் கட்டண பாக்கியில் நிலுவை தொகை ஏற்கனவே உள்ள தொகைக்கு ரூ10,46,070 ஆக அதிகரித்துள்ளது.

வீடுகளுக்கான குடிநீர் கட்டண பாக்கியை பொதுமக்கள் பொறுப்பு உணர்ந்து செலுத்தி வருவதும் தகவல் உரிமை அறியும் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் குடிநீர் கட்டண பாக்கி வைத்திருப்பவர்கள் அவற்றை வரும் நவம்பர் மாதத்துக்குள் செலுத்திவிட வேண்டும். இல்லாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரித்துள்ளது.

குடிநீர் கட்டண பாக்கி குறித்த விவரத்தை தகவல் உரிமை அறியும் சட்டம் மூலம் வெளிபடுத்திய மிலிந்த் முலே இது பற்றி கூறுகையில், ‘’ பொதுமக்களிடம் இருந்து குடிநீர் கட்டண பாக்கியை எப்படி வசூலிக்க வேண்டும் என்பது மாநகராட்சிக்கு தெரிகிறது. மாநகராட்சியின் நடவடிக்கைக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.

இதே அணுகுமுறையை தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களிடத்திலும் கடைப்பிடித்தால் குடிநீர் கட்டண பாக்கி வசூலாகும்" என்றார்.

Last Updated on Wednesday, 27 October 2010 05:37
 


Page 149 of 390