Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

திருமானூர் கூட்டு குடிநீர் திட்டம் தஞ்சையை இணைக்க வேண்டும் நகர்மன்ற கூட்டத்தில் வலியுறுத்தல்

Print PDF

தினகரன்               26.10.2010

திருமானூர் கூட்டு குடிநீர் திட்டம் தஞ்சையை இணைக்க வேண்டும் நகர்மன்ற கூட்டத்தில் வலியுறுத்தல்

தஞ்சை, அக்.26: தஞ்சை நகர் மன்றத்தின் சாதாரண கூட் டம் நேற்று நடந்தது. தலைவர் தேன்மொழி ஜெயபால் பேசியதாவது:

தஞ்சை நகர்மன்றம் பதவிஏற்று 4 ஆண்டுகள் முடிவடைந்து 5ம்ஆண்டு துவங்கியுள்ளது. உறுப்பினர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டதுபோல் இனிவரும் காலங்களிலும் ஒத்துழைக்க வேண்டும். பெரியகோயில் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவை சிறப்பாக நடத்திய முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு நன்றி என்றார்.

தொடர்ந்து அதிமுக சித்ரா பேசும்போது, தஞ்சை யில் உலகத் தரம் வாய்ந்த சாலை அமைக்கப்படும் என்றீர்கள். ஆனால் உள்ளூர் தரத் தில் கூட இதுவரை சாலைகள் போடப்படவில்லை. ஒரு நபர் டெண்டரை அனுமதித்து ஏன்? என்றார். ஆணையர் நடராஜன், பெரியகோயில் ஆயிரமாவது ஆண்டு விழாவையொட்டி பணிகளை விரைந்து முடிப்பதற்கே ஒரு நபர் டெண்டருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடி க்க முடியவில்லை. தற்போது பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் பணிகள் பற்றிய விவரங்கள் இணையதளத்தில் விவரமாக தெரிவிக்கப்பட்டுள்ளன. அனைத்து தகவல்களையும் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம் என்றார்.

அதிமுக சாமிநாதன் மற் றும் சாவித்திரி ஆகியோர் பேசியபோது, பெரியகோயில் ஆயிரமாவது ஆண்டுவிழாவையொட்டி ஒரு சில இடங்களில் போடப்பட்ட சாலை கள் தரமானதாக இல்லை. சீனிவாசபுரம், பெரியகோயில் பகுதிகளில் போடப்பட்டுள்ள சாலைகள் ஒரு மாத்திற்குள்ளாகவே பெயர்ந்து வந்துவிட்டது என்றார்.

ஆணையர் நடராஜன், சாலைகள் அமைக்கப்பட்டு ள்ள பணிகள் உள்ளி¢ட்ட பல் வேறு பணிகள் குறித்து சென்னையிலிருந்து அதிகாரிகள் குழுவினர் வந்து ஆய்வு நடத்தினர். பணிகள் குறிப்பிட்ட படி தரமாக உள்ளதாக அவர்களும் சான்றளித்துள்ளனர் என்றார்.

திமுக குமார், தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலயில் சோடியம் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளதற்கு மக்கள் சார்பில் நன்றி. அதே நேரத்தில் சிமென்ட் சாலைகள் அமைக்க டெண்டர் விடப்பட்டும் இது வரை பணிகள் தொடங்கப்படவில்லை. மற்ற பகுதிகளில் தார் சாலைப் பணிகளும் கிட ப்பில் போடப்பட்டுள்ளன. அரசிடமிருந்து நிதி பெற்று உடன் நிறைவேற்ற வேண்டும் என்றார்.

திமுக கவுன்சிலர் இறை.கார்குழலி, திருமானூர் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் தஞ்சை நகரையும் இணைக்க அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என் றார்.

அதிமுக ராஜேஸ்வரன், சிறப்பு சாலை திட்டத்தில் நகராட்சிகளை மேம்படுத்த தமிழக அரசு ரூ100 கோடி ஒதுக்கீடு செய்தது. இத்திட்டத்தின்கீழ் தஞ்சை நகராட்சிக்கு மட்டும் இது வரை நிதி பெறாதது ஏன் என்றார். கமிஷனர் நடராஜன், இத்திட்டத்திற்காக ரூ19.66 கோடிக்கு திட்ட மதிப்பீடு செய்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதில் ரூ3.41 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதி கிடைக்கப்பெற்றவுடன் ஓரிரு நாட்களில் பணி மேற்கொள்ளப்படும் என்றார்.

 

சிவகாசி நகராட்சி 10 வார்டுகளில் ஆழ்துளை கிணறு அமைக்க முடிவு

Print PDF

தினகரன்              26.10.2010

சிவகாசி நகராட்சி 10 வார்டுகளில் ஆழ்துளை கிணறு அமைக்க முடிவு

சிவகாசி,அக்.26: சிவகாசி நகராட்சியில் உள்ள 10வார்டுகளில் வறட்சி நிவாரண திட்டத்தின் கீழ் ஆழ்துளை கிணறுகள் அமைக்க முடிவு செய்யப்பட்டு ள்ளது. சிவகாசி நகராட்சியில் வறட்சி நிவாரண திட்டத்தின் கீழ் சுமார் ரூ.5 லட்சம் மதிப் பில் 10வார்டுகளில் ஆழ்துளை கிணறுகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ராணி அண்ணா காலனி, முஸ்லீம் நடுத்தெரு, பசும்பொன் ரோடு, புதுரோடு, பிகேஎஸ்ஏ ஆறு முகம் ரோடு, காரனேசன் காலனி, பட்டிதெரு, பராசக்தி காலனி, பாரதிநகர் ஆகிய இடங்களில் இந்த ஆழத்துளை கிணறுகள் அமைய உள்ளன. இந்த பணி கள் விரைவில் துவங்கும் என துணைத்தலைவர் தெரிவித்தார்.

Last Updated on Tuesday, 26 October 2010 09:42
 

ரூ. 30.44 கோடியில் குடிநீர் திட்டம் கொடைக்கானல் நகராட்சியில் அதிகாரிகள் குழு ஆய்வு

Print PDF

தினகரன்              26.10.2010

ரூ. 30.44 கோடியில் குடிநீர் திட்டம் கொடைக்கானல் நகராட்சியில் அதிகாரிகள் குழு ஆய்வு

கொடைக்கானல், அக். 26: கொடைக்கானல் நகராட்சி யில் ரூ.30.44 கோடி மதிப்பில் புதிய குடிநீர் திட்டம் துவங்குவது குறித்து அதிகாரிகள் குழு ஆய்வு நடத்தியது.

கொடைக்கானல் நகராட்சியில் 32 ஆயிரத்து 969 பேர் வசிக்கின்றனர். அப்சர்வேட்டரியில் பழைய நீர்தேக்கம் மற்றும் புதிய அணை மூலம் கொடைக்கானல் நகராட்சி மக்களுக்கு நாளொன்றுக்கு நபருக்கு 90 லிட்டர் வீதம் குடிநீர் வழங்கப்படுகிறது. இதற்காக பூம்பாறை ரோட்டில் நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது கொடைக்கானல் நகராட்சியில் 3 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. ஏப், மே மாதங்களில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டு விடும். நகர மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளின் குடிநீர் தேவையையும் சமாளிக்க வேண்டியுள்ளது.

இதனால் கொடைக்கானல் மலைப்பகுதியில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள கீழ்குண்டாறு என்னுமிடத்தில் சிறிய அணை கட்டி புதிய குடிநீர் திட்டம் துவங்க நகராட்சி நிர்வாகம் கோ ரிக்கை விடுத்தது. நகராட்சிக ளின் நிர்வாக ஆணையாள ரால் இத்திட்டம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அனுப்புமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்பேரில் ரூ.30.44 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயார் செய்யப்பட்டது.

இதன்படி கீழ்குண்டாறில் சிறிய அணை கட்டி 3 இடங்களில் பம்பிங் ஸ்டேஷன் அமைக்க வேண்டும். மேலும் கொடைக்கானல் நகரில் அப்சர்வேட்டரி, குறிஞ்சி ஆண்டவர் கோயில், கூலிகாட் ரோடு, நாயுடுபுரம், செல்லபுரம் ஆகிய 5 இடங்களில் நீர்தேக்க தொட்டி அமைத்து நகர் முழுவதும் குடிநீர் சப்ளை செய்யப்படும். வரும் 2027ம் ஆண்டில் கொடைக்கானல் நகராட்சியில் 47 ஆயிரத்து 300 பேர் இருப்பர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனை கருத்தில்கொண்டு இத்திட்டத்தில் நாள்தோறும் நபருக்கு 135 லிட்டர் வீதம் குடிநீர் சப்ளை செய்ய முடியும்.

இத்திட்டம் குறித்து நகர்மன்ற தலைவர் முகமது இப்ராகிம், நகராட்சி பொறியா ளர் ராஜாராம், நகரமைப்பு அலுவலர் பெரியசாமி, பொதுப்பணித்துறை இளநிலைப்பொறியாளர் காஞ்சித் துரை, உதவி வனப்பாதுகாவலர் அன்பழகன், வனச்சரகர்கள் பரமசிவன், முகமது முஸ்தபா, நகராட்சி கவுன்சிலர்கள் பாலசுப்ரமணியம், தீனதயாளன், ஆல்பர்ட், ஆரோக்கியராஜ் ஆகியோர் கொண்ட குழுவினர் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வறிக்கை நகராட்சி நிர்வாக ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நகராட்சி தலைவர் முகமது இப்ராகிம் கூறு கையில், 'கொடைக்கானல் நகர மக்களுக்கு 2027ம் ஆண்டு முதல் 2042ம் ஆண்டு வரை பிரச்னையின்றி குடிநீர் வழங்க கீழ்குண்டாறு குடிநீர் திட்டம் கொண்டு வரப்படுகிறது. அணை அமைய உள்ள பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகும். அதனால் வனத்துறையின் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் திட்ட பணிகள் துவங்கும்என்றார்.

Last Updated on Tuesday, 26 October 2010 09:42
 


Page 150 of 390