Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

சேலம் புதிய குடிநீர் திட்டம் தமிழக அரசு ஒப்புதல்

Print PDF

தினமலர்                    26.10.2010

சேலம் புதிய குடிநீர் திட்டம் தமிழக அரசு ஒப்புதல்

சென்னை : சேலம் மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் வகையில், 270 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய குடிநீர் திட்டத்திற்கு நிர்வாக ஒப்புதலை வழங்கி, முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,"சேலம் மாவட்டத்தில் ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சிகள், 20 பேரூராட்சிகள், 12 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 1,345 ஊரகக் குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவையை நிறைவு செய்யும் வகையில், புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் 270 கோடி ரூபாய் மதிப்பீட்டில், முழுவதும் மாநில அரசின் திட்டமாக நிறைவேற்ற நிர்வாக ஒப்புதலை வழங்கி, முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே, சேலம் மாநகராட்சிக்கு 283 கோடியே ஒன்பது லட்சம் ரூபாய் செலவில் ஒரு தனி குடிநீர் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முதல்வர் கருணாநிதியால் நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு, அதன் தொடர்ச்சியாக சேலம் மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது' என, குறிப்பிடப்பட்டுள்ளது

Last Updated on Tuesday, 26 October 2010 09:42
 

கன்னியாகுமரி தொகுதி மக்களுக்கு ரூ79 கோடியில் குடிநீர் திட்டம்

Print PDF

தினகரன் 25.10.2010

கன்னியாகுமரி தொகுதி மக்களுக்கு ரூ79 கோடியில் குடிநீர் திட்டம்

ஆரல்வாய்மொழி, அக்.25: ஆரல்வாய்மொழி பேரூராட்சிக்கு உட்பட்ட மிஷன் காம்பவுண்ட், தாணுமாலையன்புதூர் பகுதியில் ரூ13 லட்சம் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்ட துவக்கவிழா நேற்று நடந்தது.

விழாவில் புதிய குடிநீர் திட்டத்தை துவக்கி வைத்து அமைச்சர் சுரேஷ்ராஜன் பேசியதாவது:

ஆரல்வாய்மொழி பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக சட்டமன்ற தொகுதி மேம் பாட்டு திட்டத்தின் மூலம் முதல் கட்டமாக பெருமாள்புரம், தேவசகாயம் மவுண்ட் ஆகிய பகுதிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனர்.

அடுத்த கட்டமாக ஆரல்வாய்மொழி மிஷன் காம் பவுண்ட் பகுதியில் குடிநீர்திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இதர பகுதிக்கும் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு ஆரல்வாய்மொழி பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து மக்களுக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழக முதல்வர் கருணா நிதி தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு எவ் வளவு நல்ல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு ஏழை எளிய மக்கள் பயன்பெற்று வருகின்றனர் என்பது உங்களுக்கு தெரியும். ஜாதி, மத, கட்சி வேறுபாடின்றி அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் அனைவருக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்கும் வகையில் ரூ79 கோடி ஒதுக் கீடு செய்யப்பட்டு அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்பட உள்ளது. பணிகளை துணை முதல்வர் விரைவில் தொடங்கி வைக்க உள்ளார். இவ்வாறு அவர் தெரிவித் தார்.

நிகழ்ச்சியில் ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் பியூலா பாக்கிய ஜெயந்தி, ஹெலன் டேவிட் சன் எம்.பி, பேரூராட்சி துணைத்தலைவர் நாகராஜன், செயல் அலுவலர் அம்பு ரோஸ், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் நெடுஞ்செழியன், வார்டு கவுன்சிலர்கள் சுப்பிரமணியன், மாலா, அன்ன ஜோதி, செல்வகுமார், ஏசு மணி, மணி, திமுக மாவட்ட பிரதிநிதி சந்திரன், லாரன்ஸ், தமிழ்ராஜ், பாலகிருஷ்ணன், ஜோசப், தோவாளை ஊராட்சி துணை தலைவர் தாணு ஆகியோர் கலந்துகொண்டனர். ஆரல்வாய்மொழியில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு குடிநீர் நிலையத்தை அமைச்சர் சுரேஷ்ராஜன் திறந்து வைத்தார். (அடுத்தபடம்) திறந்து வைக்கப்பட் குடிநீர் தொட்டி.

 

குடிநீர் கசிவு அறிய ‘ஸ்கேடா’ திட்டம் இன்று ஆலோசனை குழு கூட்டம்

Print PDF

தினகரன் 22.10.2010

குடிநீர் கசிவு அறிய ஸ்கேடாதிட்டம் இன்று ஆலோசனை குழு கூட்டம்

கோவை, அக். 22: கோவை மாநகராட்சியில் குடிநீர் கண்காணிப்பு, கசிவு அறிய ஸ்கேடா என்ற தொழில்நுட்ப திட்டம் செயல்படுத்தப்படும்.

கோவை மாநகராட்சி யில் பில்லூர் 2வது குடிநீர் திட்டம் 140 கோடி ரூபாய் செலவில் நடக்கிறது.

இந்த குடிநீர் திட்டத் தில், குடிநீர் விநியோகம், கண்காணிப்பு, கசிவு அறி யும் தொழில்நுட்பம் (ஸ்கே டா) பயன்படுத்தப்படவுள் ளது. இதற்கென 6 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசு தனது பங்களிப்பாக 4 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.

2 கோடி ரூபாய் மாநக ராட்சி நிர்வாகம் தன் பங்களிப்பாக செலுத்தவுள் ளது. விரைவில் ஸ்கேடா தொழில்நுட்பம் செயல்படுத்த டெண்டர் விடப்படவுள்ளது. இந்த திட்டம் தொடர்பாக ஆலோசனை குழுவின் கூட்டம் மாநகராட்சியில் இன்று நடக்கிறது. இதில் திட்ட நடை முறை குறித்து விவாதிக்கப்படும்.

ஸ்கேடா திட்டத்திற் காக மாநகராட்சி அலுவலகத்தில் தனிபிரிவு துவக்கப்படும். பில்லூர் 2வது குடி நீர் திட்டத்தில் தினமும் பெறப்படும் குடிநீர் அளவு, நிமிடம் வாரியாக கண்ட றிய முடியும்.

பில்லூர் அணையில் குடிநீர் எடுப்பது, வெள்ளியங்காட்டில் சுத்திகரிப்பது, கட்டன் மலை, பெரிய கோம்பை மலையில் குகை பாதையில் குடிநீர் அனுப்புவது, ரயில் பாதை, ரோடு, காடு வழியாக குழாய் மூலமாக பாயும் குடிநீர், குடிநீர் கசிவு, அதிக நீர் அழுத்தம், நீரின் வேகம், மின் அளவு போன்றவற்றை துல்லியமாக கண்காணிப்பு அறையிலிருந்து கண்டறிய முடியும்.

பில்லூர் அணையில் குடிநீர் எடுப்பது, வெள்ளியங்காட்டில் சுத்திகரிப்பது, கட்டன் மலை, பெரிய கோம்பை மலையில் குகை பாதையில் குடிநீர் அனுப்புவது, ரயில் பாதை, ரோடு, காடு வழியாக குழாய் மூலமாக பாயும் குடிநீர், குடிநீர் கசிவு, அதிக நீர் அழுத்தம், நீரின் வேகம், மின் அளவு போன்றவற்றை துல்லியமாக கண்காணிப்பு அறையிலிருந்து கண்டறிய முடியும்.

கோவை மாநகராட்சிக்கு பில்லூர் 2வது குடிநீர் திட்டத்தில் தினமும் 6.5 கோடி லிட்டர் குடிநீர் பெறப்படவுள் ளது. இந்த குடிநீர் ராமகிருஷ்ணாபுரம் மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு கொண்டு வரப்படும். பின்னர் மாநகர் பகுதியில் குடிநீர் தொட்டிக ளுக்கு பகிர்ந்து வழங்கப்படும். ஒவ்வொரு தொட்டிக்கும் வழங்கப்படும் குடிநீர் அளவு, குடிநீரில் கலக்கப்படும் குடி நீர் அளவு எளிதாக கண்டறியப்படும். ரிமோட் மூலம் குடி நீர் அளவை கட்டுப்படுத்த முடியும். குடிநீர் வால்வுகளை திறக்க, மூட ரிமோட் கண்ட் ரோல் செயல்முறை நடைமுறைப்படுத்த முடியும். குழாய் உடைப்பை முன்கூட்டியே தடுக்க ஸ்கேடாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் நடைமுறைக்கு வந் தால் குடிநீர் வீணாவதை 30 முதல் 50 சதவீதம் வரை தடுக்க முடியும்.

கோவை மாநகராட்சிக்கு பில்லூர் 2வது குடிநீர் திட்டத்தில் தினமும் 6.5 கோடி லிட்டர் குடிநீர் பெறப்படவுள் ளது. இந்த குடிநீர் ராமகிருஷ்ணாபுரம் மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு கொண்டு வரப்படும். பின்னர் மாநகர் பகுதியில் குடிநீர் தொட்டிக ளுக்கு பகிர்ந்து வழங்கப்படும். ஒவ்வொரு தொட்டிக்கும் வழங்கப்படும் குடிநீர் அளவு, குடிநீரில் கலக்கப்படும் குடி நீர் அளவு எளிதாக கண்டறியப்படும். ரிமோட் மூலம் குடி நீர் அளவை கட்டுப்படுத்த முடியும். குடிநீர் வால்வுகளை திறக்க, மூட ரிமோட் கண்ட் ரோல் செயல்முறை நடைமுறைப்படுத்த முடியும். குழாய் உடைப்பை முன்கூட்டியே தடுக்க ஸ்கேடாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் நடைமுறைக்கு வந் தால் குடிநீர் வீணாவதை 30 முதல் 50 சதவீதம் வரை தடுக்க முடியும். ஆண்டுதோறும் சுமார் 50 கோடி லிட்டர் குடிநீர் வீணா வது தடுக்கப்படும். நகர் பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுவதை வெகுவாக தவிர்க்க முடியும்.

 


Page 151 of 390