Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

சரவணம்பட்டி பேரூராட்சி ரோட்டில் "போர்வெல்'

Print PDF

தினமலர் 21.10.2010

சரவணம்பட்டி பேரூராட்சி ரோட்டில் "போர்வெல்'

கோவை : பேரூராட்சிக்கு சொந்தமான ரோட்டில் போர்வெல் அமைத்து தனியார் காம்ப்ளக்ஸ் உரிமையாளர் குடிநீர் எடுத்து வந்ததற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டனர். கோவை சத்தி ரோட்டிலிருந்து எல்.ஜி.பி. நகர் பகுதி தெற்கு பகுதி கோவை மாநகராட்சிக்கு சொந்தமானது. கிழக்குப்பகுதி சரவணம்பட்டி பேரூராட்சி 9 வது வார்டைச் சேர்ந்தது. இதன் இடையே 30 அடி அகலத்திலும் 500 அடி நீளத்திலும் கிழக்கிலிருந்து மேற்காக ரோடு அமைந்துள்ளது. இந்த ரோட்டை கிருஷ்ணாபுரம், எல்.ஜி.பி.நகர்.,பாலாஜிநகர், மாருதிநகர், வேல்முருகன்நகர், சக்திநகர், மணிநகர் பகுதியில் வசிக்கும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ரோட்டிற்கு தெற்கு பகுதியில் மூன்று தளங்கள் கொண்ட அடுக்குமாடி கட்டடம் உள்ளது.

இந்நிலையில், எல்.ஜி.பி.,நகர் ரோடு குண்டும் குழியுமாக காணப்படுவதால் அதை சீரமைத்து புதியதாக ரோடு போடுவதற்கு சிங்காநல்லூர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 2.50 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. சரவணம்பட்டி பேரூராட்சி நிதியாக 2 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 4.50 லட்ச ரூபாய் செலவில் தார் ரோடு புதியதாக போடுவதற்கான பணிகள் நேற்று துவங்கின.முதல் பணியாக ரோட்டை சீரமைத்து குழிமேடுகள் சரிசெய்யும் பணி நேற்று துவங்கியது. ரோட்டை சீரமைப்பதற்õக பொக்லைன் இயந்திரத்தை விட்டு சமப்படுத்தும் போது ரோட்டிற்கு கீழே போர்போடப்பட்டு அதில் மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டிருந்தன. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த பொக்லைன் ஆபரேட்டர் அதை தவிர்த்து மற்ற பணிகளை கவனிக்க முயன்றார். பொதுமக்கள் காம்ப்ளக்ஸ் உரிமையாளரை முற்றுகையிட்டனர்.

இத்தகவல் தெரிந்ததும் சரவணம்பட்டி இன்ஸ்பெக்டர் சிவக்குமார், பேரூராட்சி மற்றும் மாநகராட்சி சர்வேயர்களை அழைத்து நாளை( இன்று) முறையான ஆவணங்களை சரி பார்த்து அளவீடு செய்து,ரோடு போடும் பணிகளை துவக்குவோம். அதுவரை போர் இருக்கும் இடத்தில் ரோட்டை தூர்வார வேண்டாம் என்று அறிவுறுத்தினார். அதன்படி பணிகள் நேற்று நடந்தன. இதனால் சரவணம்பட்டி பகுதியில் நேற்று காலை 10.00 மணிமுதல் பகல் 2.00 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

 

மாதாபுரத்தில் குடிநீர் தொட்டி திறப்பு

Print PDF

தினகரன் 20.10.2010

மாதாபுரத்தில் குடிநீர் தொட்டி திறப்பு

புதுக்கடை, அக்.20: புதுக்கடை அருகே மாதாபுரத்தில் குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி திறப்பு விழா நடைபெற்றது.கிள்ளியூர் பேரூராட்சிக்குட்பட்ட மாதாபுரத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத் தின் கீழ் ரூ5

லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணி நடைபெற்று. அதன் திறப்பு விழா நடைபெற்றது.கிள்ளியூர் எம்.எல்.. ஜாண்ஜேக்கப் திறந்து வைத்தார். ஹெலன்டேவிட் சன் எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். செயல் அலுவலர் பிராங்கிளின் சிவகுமார், பேரூராட்சி துணை தலைவர் சுரேஷ், முன் னாள் துணை தலைவர் தேவானந்த், பாலபள்ளம் பேரூ ராட்சி கவுன்சிலர் பால்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மாதாபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியை ஜாண்ஜேக்கப் எம்.எல்.ஏ திறந்து வைத்தார். உடன் ஹெலன்டேவிட்சன் எம்.பி.

 

ரூ.25 கோடியில் நடைபெற உள்ள குடிநீர் திட்ட பணிக்கு இடம் தாந்தோணி நகராட்சி கலெக்டருக்கு வலியுறுத்தல்

Print PDF

தினகரன் 18.10.2010

ரூ.25 கோடியில் நடைபெற உள்ள குடிநீர் திட்ட பணிக்கு இடம் தாந்தோணி நகராட்சி கலெக்டருக்கு வலியுறுத்தல்

கரூர், அக். 18: தாந்தோணி நகராட்சியில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் புதிய குடிநீர் திட்டப்பணிகளுக்காக வருவாய்த்துறை இடங்களை நகராட்சிக்கு அளிக்க கலெக்டரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

தாந்தோணி நகராட்சியின் குடிநீர் அபிவிருத்தி திட்டத்திற்காக தயார் செய்யப்பட்ட திட்ட மதிப்பீடு ரூ.25.16 கோடிக்கு அரசாணைப்படி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கு துறை நிதி ஒதுக்கீடு செய்து நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது. திட்ட பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மேற்கொண்டு செய்து முடிக்க உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த திட்ட மதிப்பீட்டில் கட்டளை பகுதியில் தலைமை நீரேற்று நிலையம், தாந்தோணி நகரில் பல்வேறு கொள்ளளவு கொண்ட 7 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் நீர் உந்து நிலையம், நீர் சேகரிப்பு கிணறு, நீரேற்று குழாய்கள், பகிர்மான குழாய்கள் பதித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த நீர்த்தேக்கத் தொட்டிகள், நீரேற்று நிலையம், நீர் உந்து நிலையம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட கீழ்காணும் இடங்களை நகராட்சி வசம் பெற்று குடிநீர் அபிவிருத்தி திட்ட பணிகளுக்கு பயன்படுத்த கலெக்டரிடம் அனுமதி கோரப்பட்டது. தாந்தோணி நகராட்சி தலைவி ரேவதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

5 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, நீர் சேகரிப்பு தொட்டி கட்டுதல், பொன்நகரில் குடிநீர் தொட்டி கட்ட தேவைப்படும் பரப்பரளவு 50 சென்ட், காந்தி கிராமத்தில் (சக்தி நகர்) மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட தேவைப்படும் 50 சென்ட், செல்லாண்டிபாளையத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கு தேவைப்படும் 50 சென்ட், தோரணக்கல்பட்டியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட தேவைப்படும் 50 சென்ட், கலெக்டர் அலுவலகம் பின்புறம் வெங்ககல்பட்டியில் நீர்த்தேக்க தொட்டி கட்ட தேவைப்படும் 50 சென்ட் இடங்கள் வருவாய்த்துறை பராமரிப்பில் தற்போது உள்ளது. இந்த குடிநீர் திட்ட பணிகளுக்கு தேவையான இடங்களை ,தேவையான விஸ்தீரணத்தில் சம்பந்தப்பட்ட துறையிடம் இருந்து பெறுவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு இடங்களை நகராட்சி பெறுவது என நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 


Page 153 of 390