Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

ரூ.5 கோடி மதிப்பில் கூடுதல் குடிநீர் திட்டம்: கரூர் மாவட்ட கலெக்டர் தகவல்

Print PDF

தினமலர் 07.10.2010

ரூ.5 கோடி மதிப்பில் கூடுதல் குடிநீர் திட்டம்: கரூர் மாவட்ட கலெக்டர் தகவல்

கரூர்: ""மாவட்டத்தில் நடப்பாண்டு 122 குடியிருப்புகளுக்கு 5 கோடி ரூபாய் மதிப்பில் தனி மின்விசை திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்படும் என்றும், அத ற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும்,'' என்று கரூர் கலெக்டர் உமாமகேஸ்வரி பேசினார். குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் மின் வாரிய அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமையில் கரூரில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது: மக்களுக்கு குடிநீர் வழங்குவது முக்கிய பணி. குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் மின்வாரியம் இணைந்து செயல்பட வேண்டும். குடிநீர் பிரச்னை என்றால், அதை உடனடியாக சமாளித்து நிரந்தர தீர்வு காண வேண்டும். இற்காகவே ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நடக்கிறது. இக்கூட்டம் மாதந்தோறும் நடக்கும்.

மாவட்டத்தில் ஒன்பது கூட்டுகுடிநீர் திட்டம் மூலம் 950 குடியிருப்புக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. கிராம திட்ட அமை ப்பு மூலம் கடைகோடி கிராம மக்களுக்கும் குடிநீர் கிடைக்கும் வகையில் திட்டம் இருக்க வேண்டும். அதற்காகத்தான் அரசு தனி மின்விசை திட்டத்தை செயல்படுத்தி அதற்கு முன்னுரிமை கொடுத்துள்ளது. கூட்டுகுடிநீர் திட்டத்தில் மின்தடை ஏற்படாமல் அதை உடனடியாக சீர்செய்ய வேண்டும். அரசு நடப்பாண்டில் இம்மாவட்டத்தில் மேலும் 122 குடியிருப்புகளுக்கு தனிமின்விசை திட்டம் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது. அதற்காக 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 122 குடியிருப்புகளில் 32ல் பணி முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணி விரைவாக முடிக்க வேண்டும். அதற்கு குடிநீர் வடிகால் வாரியம், மின்சார வாரியம் இணைந்து துரிதமாக ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் ராஜ்குமார், மின்வாரிய செயற்பொறியாளர் (பொ) தண்டபாணி, ஜெயசிங் பாஸ்கரன் மற்றும் பலர் பங்கேற்றனர்..

Last Updated on Thursday, 07 October 2010 07:48
 

ஸ்ரீவிலி.யில் புதிய குடிநீர் இணைப்பு: நாளை முதல் விண்ணப்பம் விநியோகம்

Print PDF

தினமணி 06.10.2010

ஸ்ரீவிலி.யில் புதிய குடிநீர் இணைப்பு: நாளை முதல் விண்ணப்பம் விநியோகம்

ஸ்ரீவில்லிபுத்தூர்,​​ அக்.​ 5:​ ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிப் பகுதியில் புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட உள்ளதால்,​​ பொதுமக்கள் 7-ம் தேதி முதல் விண்ணப்பம் பெற்று முன் வைப்புத் தொகை கட்டி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

​ ​ இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி ஆணையர் க.முத்துக்கண்ணு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

​ ​ ஸ்ரீவில்லிபுத்தூர் நகருக்கான தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேறும் நிலையில் உள்ளது.​ எனவே பொதுமக்களுக்குப் புதிய குடிநீர் இணைப்பு வழங்கும் வகையில் நகராட்சி அலுவலகத்தில் முன்பதிவு 7-ம் தேதி ​(வியாழக்கிழமை)​ முதல் நடைபெறுகிறது.

​ ​ விண்ணப்பக் கட்டணம் ரூ. 100.​ முன்வைப்புத் தொகை வீட்டு உபயோகத்திற்கு ரூ. 5,000,​ வணிக உபயோகத்திற்கு ரூ. 10,000,​ தொழிற்சாலைகளுக்கு ரூ. 15,000.​ பொதுமக்கள் விண்ணப்பத்துடன்,​​ முன்வைப்புத் தொகையை செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். ​ ​ இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஸ்ரீவி.,நகராட்சியில் புதிய குடிநீர் இணைப்புகள் வழங்க முடிவு: குடிநீர் திட்ட பணிகள் தீவிரம் எதிரொலி

Print PDF

தினமலர் 06.10.2010

ஸ்ரீவி.,நகராட்சியில் புதிய குடிநீர் இணைப்புகள் வழங்க முடிவு: குடிநீர் திட்ட பணிகள் தீவிரம் எதிரொலி

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவி.,யில் வாசுதேவநல்லூர் கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் துரிதமாக நடந்து வருவதையொட்டி புதிய குடிநீர் இணைப்பு வழங்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஸ்ரீவி., நகராட்சி மக்களுக்கு குடிநீர் வழங்க செண்பகதோப்பு பேயனாற்று பகுதியிலிருந்து தினமும் கிடைத்த 40 லட்சம் லிட்டர் தண்ணீரை வைத்து ஸ்ரீவி.,யில் மூன்று நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்பட்டது. வறட்சியால் 20 லட்சம் லிட்டர் மட்டுமே கிடைப்பதால் பத்து நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நகராட்சி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய 2007 நவம்பரில் 29 கோடி ரூபாயில் நெல்லை மாவட்டம் முக்கூடல் தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வர வாசுதேவ நல்லூர் குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் ஸ்ரீவி., நகராட்சிக்கு தினமும் 72 லட்சம் லிட்டர் குடிநீர் கிடைக்கும்.

இத்திட்டத்தில் ஸ்ரீவி., நகராட்சியில் ஊரணிப்பட்டி, பெருமாள் பட்டி , நகராட்சி வளாகம் பகுதியில் குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் கட்டப்பட்டன. இதற்காக விருதுநகர் மாவட்ட எல்லையிலிருந்து ஸ்ரீவி., வரையிலான 41 கிலோ மீட்டர் தூரத்திற்கு குழாய் பதிக்கும் பணிகள் நடந்தது. இப்பணி நிறைவு பெறும் நிலையில் உள்ளது. நெல்லை மாவட்டத்தில் மட்டும் குழாய் பதிக்கும் பணி தாமதமாக நடந்து வருகிறது. இப்பணியையும் விரைவாக முடித்து டிசம்பர் மாதத்திற்குள் தாமிரபரணி குடிநீர் கிடைக்க அதிகாரிகள் முடுக்கி விடப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி சார்பில் வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவைகளுக்கு புதிய குடிநீர் இணைப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் அக்., 7 முதல் நகராட்சி அலுவலகத்தில் வினியோகிக்கப்பட உள்ளது. இதில் வீடுகளுக்கு 5,000 ரூபாய், வணிக நிறுவனங்களுக்கு 10,000, தொழிற்சாலைகளுக்கு 15,000 ரூபாய் முன் வைப்பு தொகையாகவும், விண்ணப்ப பதிவு கட்டணமாக 100 ரூபாயும் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

 


Page 158 of 390