Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

முக்கூடல்&வாசுதேவநல்லூர் கூட்டுக்குடிநீர் திட்டம் டிசம்பரில் முடியும் அதிகாரிகள் தகவல்

Print PDF

தினகரன் 05.10.2010

முக்கூடல்&வாசுதேவநல்லூர் கூட்டுக்குடிநீர் திட்டம் டிசம்பரில் முடியும் அதிகாரிகள் தகவல்

முக்கூடல்&வாசுதேவநல்லூர் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் ஆலங்குளம் அருகே குழாய்கள் பதிக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. உள்படம்: பணியினை குடிநீர் வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

ஆலங்குளம், அக். 5: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ரூ.43.3 கோடியில் முக்கூடல்&வாசுதேவநல்லூர் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர், ராயகிரி, சிவகிரி, ஆலங்குளம் பேரூராட்சிகள் மற்றும் வாசுதேவநல்லூர், பாப்பாக்குடி ஒன்றியங்களில் உள்ள 78 வழியோர கிராமங்கள், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியங்களில் உள்ள 41 வழியோர கிராமங்கள் பயன்பெறும் வகையில் முக்கூடல்&வாசுதேவநல்லூர் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளுக்கு தமிழக அரசு ரூ.43.3 கோடி ஒதுக்கீடு செய்தது.

இதற்கான பணிகள் கடந்த 2007ம் ஆண்டு மே 29ம் தேதி துவங்கியது. மொத்தம் 79 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த திட்டத்தில் குழாய்கள் பதிக்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. கடந்த சில நாட்களாக நெல்லை, தென்காசி மெயின் ரோட்டில் குழாய் பதிக்கும் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை குடிநீர் வடிகால் வாரியத்தின் நெல்லை, குமரி வட்ட கண்காணிப்பு பொறியாளர் சுப்பிரமணியன், தென்காசி குடிநீர் வாரிய நிர்வாக பொறியாளர் குத்தாலிங்கம் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது, ''இந்த மெகா கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கென முக்கூடல், காசிநாதபுரம், கலிங்கப்பட்டி, சேர்ந்தமங்கலம், கூடலூர், ராயகிரி, வாசுதேவநல்லூர் ஆகிய பகுதிகளில் நீர் உந்தும் பம்ப்பிங் நிலையங்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 79 கிலோ மீட்டர் தூரத்தில் இதுவரை 67 கிலோ மீட்டர் தூரம் வரை குழாய்கள் பதிக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இந்த திட்டம் வரும் டிசம்பர் மாதத்திற்குள் முழுமையாக முடிக்கப்படும்.

இந்த மெகா திட்டத்தின் மூலம் நெல்லை, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 64 ஆயிரத்து 43 பேர் பயன்பெறுவர். ஆலங்குளம் பேரூராட்சிக்கு குடிநீர் சப்ளை செய்ய புதிதாக இரண்டு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்திட்டம் மூலம் ஆலங்குளத்திற்கு தினசரி 12 லட்சம் லிட்டரும், உச்ச காலத்தில் 16 லட்சம் லிட்டர் வரையிலும் குடிநீர் சப்ளை செய்யப்படும். ஆலங்குளத்திற்கு வரும் 30ம் தேதிக்குள் குடிநீர் சப்ளை செய்ய வேண்டும் என்ற நோக்கோடு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன'' என்றனர்.

 

 

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டப்பணிகளை எம்.பி., ஆய்வு

Print PDF

தினகரன் 05.10.2010

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டப்பணிகளை எம்.பி., ஆய்வு

பென்னாகரம், அக்.5: ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் கனவாக உள்ளது. ரூ.1900 கோடி மதிப்பீட்டில் ஒகேனக்கல் காவிரியாற்றில் இருந்து குடிநீர் வழங்கும் திட்டத்திற்காக பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

ஒகேனக்கல், சத்திரம் பகுதி, ஒகேனக்கல்& தர்மபுரி செல்லும் பாதையில் முண்டச்சிபள்ளம், பென்னாகரம் அருகே மடம் கிராம பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இத்திட்டப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

பென்னாகரம் அருகே மடம் பகுதியில் 2640 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்தேக்கத்தொட்டி அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதேபோன்று ஒகேனக்கல்லில் இருந்து பென்னாகரம் செல்லும் சாலையில், வனப்பகுதியான முண்டச்சிபள்ளம் அருகில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மேலும், குடிநீர் திட்டப்பணிகளுக்கு ஒகேனக்கல்லில் இருந்து ரட்சத குழாய்கள் அமைக்கும் பணியும் தற்போது நடந்து வருகிறது. இப்பணிகளை தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் தாமரைச்செல்வன் மேற்பார்வையிட்டார்.

அப்போது பென்னாகரம் நகர திமுக செயலாளர் தமிழ்செல்வன், முன்னாள் ஒன்றிய செயலாளர் காளியப்பன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் அண்ணாதுரை, திமுக நிர்வாகிகள் தர்மச்செல்வன், மல்லமுத்து, வைத்தியலிங்கம், பாளைஅன்பு, பாலமுருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ஒகேனக்கல்லில் இருந்து பென்னகாரம் செல்லும் சாலையில் உள்ள வனப்பகுதி முண்டச்சிபள்ளம் பகுதியில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டப்பணிகளுக்காக ரட்சத குழாய் பதிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளை தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் தாமரைச்செல்வன் பார்வையிட்டார். அருகில் திமுக நிர்வாகிகள் உள்ளனர்.

 

அடுத்த ஓராண்டு காலத்துக்கு குடிநீர் வெட்டு இல்லை

Print PDF

தினகரன் 04.10.2010

அடுத்த ஓராண்டு காலத்துக்கு குடிநீர் வெட்டு இல்லை

மும்பை, அக்.4: அடுத்த ஓராண்டு காலத்துக்கு மும்பையில் குடிநீர் வெட்டு அமல்படுத்துவதில்லை என மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டு நல்ல மழை பெய்ததால் மும்பைக்கு குடிநீர் சப்ளை செய்யும் ஆறு ஏரிகளிலும் 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரையில் தேவைப்படும் தண்ணீர் உள்ளது. ஏரிகளில் போதிய அளவு தண்ணீர் கையிருப்பு உள்ளதால் அடுத்த மழைக்காலம் துவங்கும் வரையில் குடிநீர் வெட்டு எதுவும் அமல்படுத்தப்பட மாட்டாது.

மாநகராட்சி கமிஷனர் சுவாதீன் ஷத்திரியா, ஏரிகளின் தண்ணீர் நிலவரம் குறித்து குடிநீர் இலாகா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். நகரின் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு ஏரிகளில் தண்ணீர் இருப்பதால் அடுத்த மழைக்காலம் வரையில் குடிநீர் வெட்டு அமல்படுத்த வேண்டிய தேவை ஏற்படாது என்று இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தற்போது ஆறு ஏரிகளிலும் 12.96 லட்சம் மில்லியன் லிட்டர் தண்ணீர் கையிருப்பு உள்ளதாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மும்பையில் 15 சதவீதம் குடிநீர் வெட்டு அமல் படுத்தப்பட்டிருந்தது. பண்டிகை காலத்தையொட்டி செப்டம்பரில் இந்த குடிநீர் வெட்டு நீக்கப்பட்டது. எனினும் மழை சரியாக பெய்யாவிட்டால் குடிநீர் வெட்டை மீண்டும் அமல் படுத்த மாநகராட்சி திட்டமிட்டு இருந்தது. ஆனால் கடந்த மாதம் நல்ல மழை பெய்து ஏரிகள் அனைத்தும் நிரம்பி விட்டன. மொடக் சாகர் மற்றும் துள்சி ஏரிகள் ஜூலை 27ம் தேதி நிரம்பி வழிந்தன. தான்சா ஏரி ஆகஸ்ட் 6ம் தேதியும் விஹார் ஏரி ஆகஸ்ட் 19ம் தேதியும் நிரம்பின. அப்பர் வைதர்னா ஏரி கடந்த செவ்வாய்க்கிழமை நிரம்பியது. பட்சா ஏரியும் கிட்டத்தட்ட நிரம்பிய நிலையில் இருக்கிறது. இதனால் மாநகராட்சி அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாநகராட்சியின் இந்த முடிவை அடுத்து கடந்த ஓராண்டு காலமாக 15 சதவீதம் குடிநீர் வெட்டை சந்தித்து வந்த மும்பைவாசிகள் தற்போது நிம்மதி அடைந்துள்ளனர்.

 


Page 160 of 390