Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

செயலற்று கிடக்கும் ரூ1கோடி குடிநீர்திட்டம்

Print PDF

தினகரன் 23.09.2010

செயலற்று கிடக்கும் ரூ1கோடி குடிநீர்திட்டம்

குன்னூர்,செப்.23: குன்னூர் அருகே ரூ.1 கோடியில் நிறைவேற்றப்பட்ட குடிநீர் திட்டம் செயலற்று கிடப்பதாக நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் குற்றம் சாட்டி உள்ளது.

குன்னூர் அருகே உள்ள உலிக்கல் பேரூராட்சி சார்பில் சேலாஸ் சுற்றுவட்டார மக்கள் நலன் கருதி கடந்த 2005ம் ஆண்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கோடேரி& சேலாஸ் குடிநீர் திட்டம் ரூ.99.90லட்சத்தில் துவங்கப்பட்டு 2006ம் ஆண்டு நிறைவு பெற்றது. கோடேரியில் இருந்து சேலாஸூக்கு 4 அங்குல விட்டமுள்ள குழாய் மூலம் குடிநீர் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது. ஆனால் குடிநீர் குழாய்கள் முறையாக பொருத்தப்படாததால் இத்திட்டம் செயலற்று போய் உள்ளது. இதுகுறித்து விரிவான விளக்கம் தருமாறு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் மனோகரன் கேட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த பேரூராட்சி நிர்வாகம், தற்போது 2 அங்குல அளவில் குடிநீர் வந்து கொண்டிருப்பதாகவும், நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை அகலப்படுத்துவதுடன், கடந்த நவம்பர் மாதம் பெய்த மழையின் போது சன்னிசைடு என்ற இடத்தில் உள்ள பிரதான தடுப்பணையின் குழாய்கள், தாங்கும் தூண்கள் சேதம் அடைந்தன. இது குடிநீர் வடிகால் வாரியம் மூலம் விரைவில் சீரமைக்கப்படும் என தெரிவித்துள்ளது. ஆனால் இத்திட்டம் செயல்படுத்திய காலக்கட்டத்தில் இருந்தே இன்று வரை சேலாஸ் பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட வில்லை.

குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் முறையாக திட்டமிடாததால் இப்பணியில் குளறுபடி ஏற்பட்டு அரசு பணம் விரயமாகி உள்ளதாகவும், இதை நிவர்த்தி செய்யும் வகையில் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சேலாஸ் பகுதி மக்களுக்கு விரைந்து குடிநீர் வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

குந்தா பகுதியில் ரூ20லட்சத்தில் புதிய குடிநீர் திட்டம் ஊட்டி எம்.எல்.ஏ.தகவல்

Print PDF

தினகரன் 23.09.2010

குந்தா பகுதியில் ரூ20லட்சத்தில் புதிய குடிநீர் திட்டம் ஊட்டி எம்.எல்..தகவல்

மஞ்சூர்,செப்.23: குந்தா அருகே ரூ.20 லட்சத்தில் புதிய குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும் என ஊட்டி எம்.எல்..கூறினார்.

மஞ்சூர் அருகே உள்ள ஓனிக்கட்டி, அண்ணாநகர் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். கீழ்குந்தா பேரூராட்சிக்குட்பட்ட இந்த பகுதியில் திருமணம், திருவிழா உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளை நடத்த மண்டப வசதி இல்லாததால் சமுதாய கூடம் கட்டித்தர வேண்டுமென பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் இதுகுறித்து ஊட்டி எம்.எல்..கோபாலிடம் மனு கொடுத்திருந்தனர்.இதைத்தொடர்ந்து கீழ்குந்தா பேரூராட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அண்ணாநகரில் சமுதாய கூடம் கட்ட ரூ.5 லட்சம் ஒதுக்கப்பட்டது.

இதையடுத்து சமுதாய கூடம் கட்டுவதற்காக பூமி பூஜை நேற்று நடந்தது. விழாவுக்கு கிராம தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். கீழ்குந்தா பேரூராட்சி செயல் அலுவலகர் ஜெயராமன்,துணைத்தலைவர் பாபு, குந்தா வட்டார காங்கிரஸ் தலைலர் கோபாலன், கவுன்சிலர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர் கமிட்டி செயலாளர் மணியன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக எம்.எல்..கோபாலன் கலந்து கொண்டு சமுதாய கூடத்திற்கு அடிக்கல் நாட்டி பேசினார். அவர் பேசியதாவது:

சட்டமன்ற உறப்பினர்தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இதுவரை 14 சமுதாய கூடங்கள் கட்டப்பட்டுள்ளன. புறக்கணிக்கப்பட்ட மற்றும் அடிப்படை வசதிகள் இல்லா பகுதிகளுக்கு முன்னுரிமை கொடுத்து வளர்ச்சித்திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த மாதம் அதிகரட்டி பேரூராட்சியில் ரூ.88 லட்சம் மதிப்பீட்டில் புதிய குடிநீர் திட்டப்பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இதேபோல் ஓனிக்கட்டி பகுதியில் உள்ள குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண மலைப்பகுதி மேம்பாட்டுத்திட்டம், சுற்றுலா வளர்ச்சி ஆகியவை மூலம் ரூ.20 லட்சத்தில் 6 மாதத்தில் பணி மேற்கொள்ளப்படும்.

கடந்த காலங்களில் கிராமப்புறங்களில் புதிய ரேஷன்கடைகளை திறக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது 200 குடும்ப அட்டைகள் இருந்தாலே பொதுமக்கள் நலன் கருதி அப்பகுதியில் ரேஷன் கடை திறக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஓனிக்கட்டி சுற்றுவட்டார பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று ஓனிக்கட்டியில் ரேஷன் கடை அமைக்க கூட்டுறவு துறைக்கு பரிந்துரை செய்யப்படும். அண்ணாநகர் பகுதியில் மண்சரிவு அபாயம் உள்ளதை கருத்தில் கொண்டு குடியிருப்புகளில் தடுப்பு சுவர் அமைக்க கலெக்டர் மற்றும் மலைப்பகுதி மேம்பாட்டுத்திட்ட இயக்குனரிடம் கோரிக்கை வைக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் காங்கிஸ் கமிட்டி ஓ.பி.சி.பிரிவு £நில தலைவர் பீமன், குந்தா வட்டார எஸ்.டி,, எஸ்.சி.பிரிவு தலலவர் கன்னையன், கிராம கமிட்டி பொருளாளர் மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஓனிக்கண்டி பஜாரில் காங்கிரஸ் கிராம கமிட்டி தலைவர் சத்தியசீலன் தலைமையில் எம்.எல்..கோபாலன் காங்கிரஸ் கொடியேற்றினார், முடிவில் கவுன்சிலர் குமார் நன்றி கூறினர்.

 

ஜெகதளா பேரூராட்சிக்கு விரைவில் புதிய குடிநீர் திட்டம்

Print PDF

தினகரன் 23.09.2010

ஜெகதளா பேரூராட்சிக்கு விரைவில் புதிய குடிநீர் திட்டம்

குன்னூர்,செப்.23: குன்னூர் அருகே உள்ள ஜெகதளா பேரூராட்சி பகுதிக்கு புதிய குடிநீர் திட்டப்பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளது. குன்னூர் அருகே உள்ள ஜெகதளா பேரூராட்சி சார்பில் லக்குமனை கூட்டு குடிநீர் திட்டம் ரூ.1.63 கோடி செலவில் துவங்கப்பட உள்ளதாக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது.கடந்த 4 மாதத்துக்கு முன்பு கோத்தகிரி வந்த துணை முதல்வர் ஸ்டாலின் இதற்கான அடிக்கல்லை நாட்டினார். இத்திட்டத்திற்காக பேரூராட்சி சார்பில் ரூ.33 லட்சம் பங்கு தொகையை அரசுக்கு வழங்க வேண்டும் என்பதால் இத்திட்டம் தாமதப்படுத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ஜெகதளா பேரூராட்சி தலைவர் கிருஷ்ணகுமார் கூறுகையில், பேரூராட்சிக்குட்பட்ட அருவங்காடு, ஒசட்டி, கலைமகள் பிரிவு, கோபாலபுரம், எம்.ஜி.காலனி, பெட்டட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் இருந்துதான் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு காரணங்களால் பொதுமக்களுக்கு முறையாக குடிநீர் வழங்க இயலாததால் லக்குமனை குடிநீர்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பேரூராட்சி சார்பில் முதல்கட்டமாக ரூ.17 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள தொகை விரைவில் வழங்கப்பட்டு கூட்டு குடிநீர் திட்டம் விரைவில் தொடங்கப்படும்.இதற்கான ஆயத்தப்பணி முழுமையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டம் நிறைவுபெறும் பட்சத்தில் மேற்கண்ட கிராமங்களுக்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யப்படும்.

தற்போது இப்பேரூராட்சிக்கு குன்னூர் எம்.எல்..சவுந்தரபாண்டியன் தொகுதி வளர்ச்சி நிதியின் கீழ் ரூ.18 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் பொது சுகாதார வளாகம், தடுப்பு சுவர், கழிவு நீர் கால்வாய், நடைபாதை உள்ளிட்ட பணிகள் மேற்கொள்வதற்கான டெண்டர் நேற்று விடப்பட்டுள்ளது என்றார்.

 


Page 162 of 390