Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

எதிர்பார்த்த மழை இல்லை சிறுவாணி அணையில் 4 மாதத்துக்கே குடிநீர்

Print PDF

தினகரன் 20.09.2010

எதிர்பார்த்த மழை இல்லை சிறுவாணி அணையில் 4 மாதத்துக்கே குடிநீர்

கோவை, செப். 20: சிறுவாணி அணைப் பகுதியில் இந்தா ண்டு எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை. நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து குறைவாகவே உள்ளது. தற் போதைய நிலவரப்படி 4 மாதத்திற்கு மட்டுமே குடிநீர் விநியோகிக்க முடியும்.

கோவை மாநகராட்சிக்கு குடிநீர் ஆதாரமாக சிறு வாணி, பில்லூர் அணைகள் உள்ளது. சிறுவாணி அணையின் நீர்மட்டம் 878.5 மீட்டராக உள்ளது. சிறுவாணி அணை யில் இருந்து தினமும் 6 முதல் 7 கோடி லிட்டர் வரை நீர் எடுக்கப்படுகிறது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில் லை. தென்மேற்கு பருவமழை கடந்தாண்டைக் காட்டிலும் தற்போது 20 சதவீத மழை குறைந்தே பெய்துள்ளது.

அணைக்கு நீர் ஆதார மான பாம்பாறு, பட்டியாறு, கோபியாறு உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்தும் குறை வாகவே உள்ளது. தற்போது தினமும் 1 செ.மீ அளவிற்கு அணையின் நீர்மட்டம் குறைந்து கொண் டே செல்கிறது. மழையே பெய்யாவிட்டால் தொடர்ச்சியாக 4 மாதத்திற்கு மட்டு மே குடிநீர் சப்ளை செய்ய முடியும்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘சிறுவாணி அணையில் தற்போது போதிய குடிநீர் உள்ளது. அணை நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்தாண்டைக் காட்டிலும் இந்தாண்டு மழை குறைவு. தற்போதைய அளவின் படி மேலும் 4 மாதங்களுக்கு சீராக குடிநீர் விநியோகிக்க முடியும். மழை பெய்யாவிட்டால் குடிநீர் விநியோக அளவைக் குறைக்க வேண்டி யது இருக்கும்என்றார்.

மாநகர மக்களுக்கு தொ டர்ந்து சீரான குடிநீர் விநி யோகம் செய்ய வேண்டுமானால் சிறுவாணி அணை பகுதியில் மழை பெய்தே ஆக வேண்டிய நிலை உள் ளது. ஓரிரு மாதங்களுக்குள் வடகிழக்கு பருவமழை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது சிறுவாணி அணை நிரம்பும் எனத் தெரி கிறது.

 

ஓகலிபுரத்தில் 32 லட்சத்தில் குடிநீர் குழாய் பதிக்கும் திட்டம் துவக்கம்

Print PDF

தினமணி 17.09.2010

ஓகலிபுரத்தில் 32 லட்சத்தில் குடிநீர் குழாய் பதிக்கும் திட்டம் துவக்கம்

பெங்களூர், செப்.16: பெங்களூர் ஓகலிபுரம் வார்டில் ரூ 32 லட்சத்தில் புதிய குடிநீர் குழாய் பதிக்கும் திட்டத்தை காந்தி நகர் சட்டப்பேரவை உறுப்பினர் தினேஷ்குண்டுராவ் துவக்கிவைத்தார்.

ஓகலிபுரம் முக்கியசாலையில் கனரா வங்கி அருகே இருந்து பிளாட்பாரம் சாலையில் உள்ள குடிசைமாற்று வாரியம் அருகே சுமார் 200 மீட்டர் தூரத்துக்கு 8 அங்குல குடிநீர் குழாய் பதிக்கும் திட்டத்துக்கு குடிநீர் வாரியம் அனுமதி அளித்துள்ளது. | 32 லட்சம் செலவிலான இத்திட்டத் துவக்கவிழா ஓகலிபுரத்தில் நடந்தது.

ஓகலிபுரம் வார்டு கவுன்சிலர் குயின் எலிசத் பூஜை செய்ய, குடிநீர் குழாய் பதிக்கும் திட்டத்தை காந்திநகர் சட்டப்பேரவை உறுப்பினர் தினேஷ்குண்டுராவ் துவக்கிவைத்தார்.

ஓகலிபுரம் வார்டு கவுன்சிலர் குயின் எலிசபத் முயற்சியால் இத்திட்டத்துக்கு இவ்வளவு விரைவாக அனுமதி கிடைத்துள்ளது குறித்து தினேஷ்குண்டுராவ் மகிழ்ச்சி தெரிவித்தார்.

குடிநீர் வாரிய அதிகாரிகளுடன் விவாதித்து மக்கள் பிரச்னையை எடுத்துக் கூறிய பிறகு இப்பகுதியில் புதிதாக 8 அங்குல குழாய் பதிக்க ஒப்புக் கொண்டார்கள். மேலும் இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்திக் கொடுப்பதாகவும் உறுதி அளித்துள்ளனர் என்றார் வார்டு கவுன்சிலர் குயின் எலிசபத்.

 

திருச்செங்கோடு: 22.75 கோடியில் புதிய குடிநீர் திட்டம்

Print PDF

தினமணி 17.09.2010

திருச்செங்கோடு: 22.75 கோடியில் புதிய குடிநீர் திட்டம்

திருச்செங்கோடு, செப்.15: திருச்செங்கோடு நகர மக்களுக்கு நாள் முழுவதும் குடிநீர் விநியோகம் செய்ய காவிரி நீர் புதிய திட்டத்தை திருச்செங்கோடு நகராட்சி தயாரித்துள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள திட்டத்தின் மூலம் ஆவத்திபாளையத்திலிருந்து குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் அனைத்து மக்களுக்கும் போதிய குடிநீர் கிடைப்பதில்லை.

பள்ளிப்பாளையம் கலியனூரிலிருந்து காவிரி நீர் எடுக்கப்பட்டு, நகர மக்களுக்கு விநியோகிக்கும் திட்டம் 22.75 கோடியில் நிறைவேற்றப்பட உள்ளது. டுபிட்கோ நிறுவன மூலம் நிதிஉதவி பெற்று இத் திட்டம் செயல்படுத்தப்படும். இது குறித்து நகர்மன்றக் கூட்டத்தில் தலைவர் நடேசன் எடுத்துரைத்தார்.

இதனைத் தொடர்ந்து 500 பயனாளிகளுக்கு முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவிகளை நடேசன் வழங்கினார். மொத்தம் 30 லடசம் உதவி வழங்கப்பட்டது. நகராட்சி ஆணையர் இளங்கோ, பொறியாளர் ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

 


Page 165 of 390