Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

ரூ.43.3 கோடியில் வாசுதேவநல்லூர் குடிநீர் திட்டபணிகள் அக்டோபர் மாத இறுதியில் முடிவடையும்

Print PDF

தினமலர் 14.09.2010

ரூ.43.3 கோடியில் வாசுதேவநல்லூர் குடிநீர் திட்டபணிகள் அக்டோபர் மாத இறுதியில் முடிவடையும்

திருநெல்வேலி:ஆலங்குளம் தொகுதியில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் பூங்கோதை உத்தரவிட்டார்.ஆலங்குளம் தொகுதியில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குடிநீர், சாலை திட்ட வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் ஜெயராமன் முன்னிலை வகித்தார்.இதில் அமைச்சர் பூங்கோதை பேசியதாவது:கடந்த 4 ஆண்டுகளில் ஆலங்குளம் தொகுதியில் 7.5 கோடி செலவில் சாலை பணிகள் நடந்துள்ளது. 23 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் புதிதாக கட்டப்பட்டுள்ளது. 10 தொட்டிகள் அமைக்கும் பணி விரைவில் முடிவடையும். ஏற்கனவே கட்டப்பட்ட 15 தொட்டிகள் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இதில் 43.3 கோடி செலவில் அமைக்கப்பட்டு வரும் வாசுதேவநல்லூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் நடந்து வரும் பணிகள் வரும் அக்டோபர் மாத இறுதிக்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து நடந்து வரும் பணிகள், ஏற்கனவே நடந்து வரும் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும்.ஆலங்குளம் தொகுதிக்கு உட்பட அனைத்து பஞ்., பகுதிகளில் உள்ள வீடுகளில் தனி நபர் கழிப்பறைகள் அமைத்து முழு சுகாதாரமான கிராமங்களாக மாற்ற அனைத்து பஞ்., தலைவர்கள் ஒத்துழைக்க வேண்டும். கிராமங்களுக்கு செல்லும் மினி பஸ்கள் சரியான நேரத்திற்கு இயங்கவில்லை என புகார்கள் வந்துள்ளது. எனவே, மினி பஸ்கள் சரியான நேரத்தில் சரியான இடங்களுக்கு செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அமைச்சர் பேசினார்.மேலும், மானூர், ஆலங்குளம், கீழப்பாவூர் ஆகிய பஞ்.,யூனியன்களுக்கு உட்பட்ட பஞ்., தலைவர்களிடம் பஞ்.,களில் நடந்து வரும் திட்டப் பணிகள் குறித்து கேட்டறிந்தார். பஞ்., தலைவர்களின் கோரிக்கைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் உத்தரவிட்டார்.

இதில் அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் முருகன், வட்டார போக்குவரத்து அலுவலர் பொன் செந்தில்நாதன், நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குனர் மோகன், குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக இன்ஜினியர்கள் ராஜ்குமார், மரிய சவரிமுத்து, நெடுஞ்சாலைத் துறை கோட்ட இன்ஜினியர்கள் சவுந்தர்ராஜன், சத்தியமூர்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் வீரமணி, பஞ்.,களின் உதவி இயக்குனர் திரவியம், பி.ஆர்.ஓ ரவீந்திரன், .பி.ஆர்.ஓ நவாஸ்கான், மாவட்ட பஞ்.,கவுன்சிலர் அன்பழகன், வேளாண் விற்பனை குழு துணைத் தலைவர் அருள்மணி, கீழப்பாவூர் டவுன் பஞ்., செயல் அலுவலர் லெனின், பஞ்.,களின் உதவி இயக்குனர் அலுவலக உதவியாளர் சுதாகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

கூட்டுக் குடிநீர்த் திட்டங்களுக்காக ரூ 8,000 கோடி ஒதுக்கீடு: ஸ்டாலின்

Print PDF

தினமணி 09.09.2010

கூட்டுக் குடிநீர்த் திட்டங்களுக்காக ரூ 8,000 கோடி ஒதுக்கீடு: ஸ்டாலின்

திருச்சி, செப். 8: தமிழகத்தில் கூட்டுக் குடிநீர்த் திட்டங்களுக்காக கடந்த நான்கரை ஆண்டுகளில் ரூ 8,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார் துணை முதல்வர் மு.. ஸ்டாலின்.

திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் அலுவலக புதியக் கட்டட திறப்பு விழா, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கு தலைமை வகித்து அவர் மேலும் பேசியது:

"கடந்த நான்கரை ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் குடிநீர் பிரச்னையை தீர்க்கும் வகையில், கூட்டுக் குடிநீர்த் திட்டங்களுக்காக ரூ 8,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம், ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டம், தாமிரபரணி கூட்டுக் குடிநீர்த் திட்டம், கோவை, திருப்பூர் மக்களுக்காக ரூ 724 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டம், நாகப்பட்டினம் மக்களுக்காக ரூ 105 கோடியில் கூட்டுக் குடிநீர்த் திட்டம், வேலூரில் ரூ 1,318 கோடியில் கூட்டுக் குடிநீர்த் திட்டம் எனப் பல்வேறு குடிநீர்த் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

சேலம் பகுதி மக்களுக்காக குடிநீர்த் திட்டத்துக்கு ரூ 212 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் தொடங்கப்படவுள்ளன. திருச்சியை மாநிலத்தின் தலைநகரமாக்க வேண்டும் என்ற பேச்சு இருந்தது. ஆனால், தற்போது சென்னைக்கு இணையாக திருச்சி வளர்ந்து வருகிறது.

தமிழகத்தில் உள்ள மாவட்டத் தலைநகரங்கள் அனைத்தும் மாநில தலைநகருக்கு இணையாக வளர்ந்து வருகின்றன' என்றார் ஸ்டாலின்.

கே.என். நேரு: போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு பேசியது:

"திருச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் முதல்வர் கருணாநிதியால் கொண்டு வரப்பட்டவை. மேலும், திருச்சி நகருக்கு மிகத் தேவையான வெள்ளத் தடுப்புப் பணிக்காக ரூ 74 கோடியில் திட்டங்கள், ரூ 169 கோடியில் கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் போன்ற திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன' என்றார் அவர்.

.பெரியசாமி: மாநில வருவாய் மற்றும் வீட்டுவசதித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி பேசியது:

"ஆட்சேபகரமற்ற இடங்களில் குடியிருந்து வருபவர்களுக்காக ஏழரை லட்சம் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ 2,618 கோடி. திருச்சியில் சில ஆயிரம் பேருக்கு பட்டா வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

நிலமற்ற ஏழைகளுக்காக ரூ 322 கோடியில் நிலம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளாகத் தீர்வு காணப்படாமல் உள்ள திருச்சி நவல்பட்டு வீட்டுவசதி வாரியத்தில் வீடு பெற்ற 2,000 பேருக்கு 1980-ம் ஆண்டு மதிப்பீட்டில் பத்திரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் விரைவில் அனைவருக்கும் பத்திரம் வழங்கப்பட்டுவிடும்' என்றார் பெரியசாமி.

என். செல்வராஜ்: வனத் துறை அமைச்சர் என். செல்வராஜ் பேசியது:

"ஐந்தாவது முறையாக முதல்வராக இருக்கும் கருணாநிதி ஆறாவது முறையாகவும் முதல்வராக ஆவார்' என்றார் செல்வராஜ்.

து. நெப்போலியன்: மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் து. நெப்போலியன் பேசியது:

நம் நாட்டில் 2 கோடியே 19 லட்சம் மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். ஆஸ்திரேலியாவில் மொத்த மக்கள் தொகை 2 கோடியே 6 லட்சம்தான். ஒரு நாட்டின் மக்கள் தொகையைவிட, மாற்றுத் திறனாளிகள் அதிகம் உள்ள நம் நாட்டில் அவர்களின் மறுவாழ்வுக்கு என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டு இருக்கிறோம்.

ஆனால், தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்காக தனித் துறையை உருவாக்கி அவர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தியுள்ளார் முதல்வர் கருணாநிதி' என்றார் நெப்போலியன்.

பின்னர், ரூ 335 கோடியே 73 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட்ட 715 திட்டங்கள் மக்கள் பயன்பாட்டுக்காக தொடங்கி வைக்கப்பட்டன.

ரூ 194.66 கோடியில் 13,426 பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டன. 7,791 பேருக்கு ரூ 12.57 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விழாவில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி என். சிவா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் அன்பில் பெரியசாமி, கே.என். சேகரன், . செüந்தரபாண்டியன், இரா. ராணி, மா. ராஜசேகரன், வருவாய்த் துறைச் செயலர் கி. தனவேல், மாநகராட்சி மேயர் எஸ். சுஜாதா ஆகியோர் பேசினர். முன்னதாக, மாவட்ட ஆட்சியர் தா. சவுண்டையா வரவேற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் சி.. ராமன் நன்றி கூறினார்.

 

போர்வெல் நீர் 15 இடங்களில் குடிநீராக சுத்திகரிப்பு எம்.பி. தொகுதி நிதி ரூ.1.5 கோடி மு.க.அழகிரி வழங்கினார்

Print PDF

தினகரன் 09.09.2010

போர்வெல் நீர் 15 இடங்களில் குடிநீராக சுத்திகரிப்பு எம்.பி. தொகுதி நிதி ரூ.1.5 கோடி மு..அழகிரி வழங்கினார்

மதுரை, செப். 9: மதுரையில் 15 இடங்களில் போர்வெல் நீரை குடிநீராக சுத்திகரித்து வழங்க எம்.பி. தொகுதி நிதியில் இருந்து மு..அழகிரி ரூ.ஒரு கோடியே 50 லட்சம் வழங்கி உள்ளார்.

மதுரை திடீர் நகர், ஆரப்பாளையம் தண்ணீர் தொட்டி அருகில் கோமஸ்பாளையம், மஞ்சள்மேடு காலனி, பசுமலை, அண்ணாநகர், சுப்பிரமணிபுரம், கரும்பாலை, எம்.எஸ்.பி.காலனி உள்ளிட்ட 15 இடங்களில் போர்வெல் நீரை குடிநீராக சுத்திகரித்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான சுத்திகரிப்பு நிலையங்கள் தலா ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படுகிறது.

இதற்காக மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு..அழகிரி பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.ஒரு கோடி 50 லட்சம் வழங்கி உள்ளார். மேலும் டி.வி.எஸ்.நகர் பூங்கா மேம்பாட்டு பணிக்காக ரூ.40 லட்சமும், ஆரப்பாளையம் கோமஸ் பாளையத்தில் சமுதாய கூடம் கட்ட ரூ.5 லட்சமும் மு..அழகிரி தொகுதி நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்துள்ளார்.

இந்த பணிகள் அனைத்தும் ஒரு வாரத்தில் ஆரம்பிக்கப்பட்டு, 2 மாதத்தில் முடிக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் செபாஸ்டின் தெரிவித்துள்ளார்.

 


Page 167 of 390