Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

40 ஆண்டுக்கு தட்டுப்பாடு இருக்காது முதல்வர் இன்று துவக்குகிறார் ரூ169 கோடியில் குடிநீர் அபிவிருத்தி திட்டம்

Print PDF

தினகரன் 08.09.2010

40 ஆண்டுக்கு தட்டுப்பாடு இருக்காது முதல்வர் இன்று துவக்குகிறார் ரூ169 கோடியில் குடிநீர் அபிவிருத்தி திட்டம்

திருச்சி, செப் 8:அடுத்த 40 ஆண்டுகளுக்கான குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் ரூ169 கோடி மதிப்பிலான குடிநீர் விரிவாக்க திட்டத்தின் முன்னோடி திட்டத்தை தமிழக முதல்வர் கருணாநிதி இன்று துவக்கி வைக்கிறார்.

திருச்சி மாநகராட்சி பகு தியில் பொன்மலை கூட்டு குடிநீர் திட்டம், பிராட்டியூர் கூட்டு குடிநீர் திட்டம், கம்பரசம்பேட்டை கலெக் டர் வெல் (பழைய நகராட்சி திட்டம்) ஸ்ரீரங்கம், மெயின் பம்பிங் ஸ்டேஷன், டர்பைன் ஆகிய 6 திட்டங்களின் கீழ் காவிரி ஆற்றின் கம்பரசம்பேட்டை, ஜீயபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதில் பொன்மலை கூட்டு குடிநீர் திட்டத்தில் பதிக்கப்பட்ட குழாய்களில் அவ்வப் போது உடைப்பு ஏற்பட்டு குடிநீர் விநியோகம் தடைபட்டு வந்தது. அதோடு அழுத்தம் குறைவாக இருந்ததன் காரண மாக இந்த திட்டத்தின் புறநகர் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகத்தில் தட்டுப் பாடு ஏற்பட்டு வந்தது.

இதையடுத்து திருச்சி மாநகரில் அனைத்து பகுதிகளிலும் வசிக்கும் மக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செ ய்யும் வகையில் தமிழ்நாடு நகர்புற உட்கட்டமைப்பு நிதி சேவை நிறுவனம் மூலம் ஜப்பான் நிதி நிறுவனத்தின் நிதியுதவி, மாநில அரசின் மான்யத் தொகை மற்றும் மாநகராட்சியின் பங்களிப்பையும் சேர்த்து ரூ169

கோடி மதிப்பில் 8 தொகுப்புகளாக குடிநீர் அபிவிருத்தி திட்டத்தை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த புதிய திட்ட பணிகள் கடந்த 2009ம் ஆண்டில் துவங்கப்பட்டது. 2009ம் ஆண்டில் ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு 58.60 மில்லி லிட்டர் தண்ணீர், 2024ம் ஆண்டில் ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு 70.09 மில்லி லிட்டர் தண்ணீர், 2039ம் ஆண்டில் ஒரு நபருக்கு 93.26 மில்லி லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யும் வகையில் அடுத்த 40 ஆண்டுகளுக்கான குடிநீர் தேவையை அடிப்படையாக கொண்டு இந்த திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் ஸ்ரீரங்கம், மேலூர் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் 3 இடங்களில் பிரதான நீர் சேகரிக்கும் கிணறு, 2 தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்படுகிறது. நகரில் குடிநீர் விநியோகத்தில் விடுபட்டுள்ள பகுதிகள் கண்டறிந்து, அந்த பகுதிகளுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்யும் வகையில் 35 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கும் பணியும் இந்த திட்டத்தில் நடந்து வருகிறது.

88.59 கி.மீ., தூரத்திற்கு மெயின் மற்றும் கிளை குடிநீர் உந்து குழாய் அமைக்கப்படுகிறது. 262.08 கி.மீ., தூரத்திற்கு குடிநீர் விநியோக குழாய் மற்றும் 446 கி.மீ., தூரத்திற்கு ஏற்க னவே உள்ள பழுதடைந்தகுழாய்களை மாற்றி அமைக் கும் பணிகளும் நடந்து வருகிறது.

இந்த திட்டப் பணிகள் முழுமையாக முடிக்க மேலும் கால அவகாசம் தேவைப்படுகிறது. முதல் கட்டமாக கொள்ளிடம் ஆற்றில் இருந்து காவரி ஆற்றில் குழாய்கள் பதிக்கப்பட்டு ஏற்கனவே உள்ள பொன்மலை கூட்டு குடிநீர் திட்டத்துடன் இணைக்கும் பணி தற்போது முடிவடைந்துள்ளது. இதற்காக இந்த திட்டத்தின் கீழ் கொள்ளிடம் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள மெயின் நீர் சேகரிக்கும் 3ம் எண் கிணற்றில் இருந்து 5 கி.மீ., தூரத்திற்கு காவிரி ஆற்றின் வடகரை வரை மெயின் குடிநீரேற்ற குழாய் பதிக்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி ஆற்றின் வடகரையில் இருந்து பொன்மலை கூட்டு குடிநீர் திட்ட நீர் சேகரிக்கும் கிணறு வரை காவிரி ஆற்றின் குறுக்கே அரை கி.மீ. தூரத்திற்கு நவீன தொழில்நுட்பம் மூலம் குழாய் பதிக்கப்பட்டுள்ளது.

இந்த இணைப்பு மூலம் பொன்மலை கூட்டு குடிநீர் திட்டத்தின் குடிநீர் விநியோகம் பெறும் கிராப்பட்டி, அன்புநகர், கல்லுக்குழி, காஜாமலை, காமராஜ்நகர், அம்மன் நகர், கிருஷ்ணமூர்த்தி நகர், சுந்தர்ராஜ் நகர், அரியமங்கலம், மலையப்ப நகர், ரயில்நகர், ஜெகநாதபுரம், முன்னாள் ராணுவத்தினர் காலனி, மேலகல்கண்டார்கோட்டை, பொன்னேரிபுரம், பொன்மலைப்பட்டி, சங்கிலியாண்டபுரம், விவேகானந்தநகர் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதற்கான பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. அடு த்த கட்ட பணிகளும் விரை வில் முடிக்கப்பட்டு முழு மையாக இந்த திட்டம் செயல்படுத்த சில மாதங்கள் ஆகும். எனினும் பொன் மலை கூட்டு குடிநீர் திட்டத்துடன் இணைக்கும் முன் னோடி திட்டத்தை தமிழக முதல்வர் கருணாநிதி இன்று (8ம் தேதி) கலெக்டர் அலு வலக திறப்பு விழாவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக துவக்கி வைக்கிறார்.

 

பிரம்மதேசம், மன்னார்கோவிலுக்கு ரூ.1 கோடியில் கூட்டுக்குடிநீர் திட்டம்

Print PDF

தினகரன் 08.09.2010

பிரம்மதேசம், மன்னார்கோவிலுக்கு ரூ.1 கோடியில் கூட்டுக்குடிநீர் திட்டம்

நெல்லை, செப். 8: பிரம்மதேசம், மன்னார்கோவில், வாகைக்குளத்திற்கு ரூ.ஒரு கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என சபாநாயகர் ஆவுடையப்பன் தெரிவித்துள்ளார்.

அம்பாசமுத்திரம் அருகே கோடாரங்குளத்தில் ரூ.8 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சமுதாய நலக்கூடம், ரூ.3.70 லட்சம் மதிப்பில் நூலக கட்டடம், மன்னார்கோவிலில் ரூ.3.70 லட்சம் மதிப்பில் நூலக கட்டடம் ஆகியவற்றை சபாநாயகர் ஆவுடையப்¢பன் திறந்து வைத்து பேசியதாவது:

தமிழக முதல்வர் ஆட்சியில் நகர்ப்புற மாணவர்களை போல கிராமப்புற மாணவர்களும் பயன்பெறும் வகையில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் புதிய நூலகங்கள் கட்டப்பட்டுள்ளன. எனவே கிராமப்புற மாணவர்கள் இந்த வாய்ப்பை சிறந்த முறையில் பயன்படுத்தி தங்கள் பொது அறிவை வளர்த்துக¢ கொள்ள வேண்டும்.

இப்பகுதி மக்களின் நீண்ட நாள் தேவையான குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் பிரம்மதேசம், மன்னார்கேவில், வாகைக்குளத்திற்கு ரூ.ஒரு கோடியில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

கடந்த நான்கரை ஆண்டுகளில் ரூ.ஒரு கோடியே 24 லட்சம் மதிப்பில் கோடாரங்குளம் ஊராட்சி பகுதியில் 86 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நகர்ப்புற மக்கள் மட்டுமல்லாது கிராமப்புற மக்களும் பயன் பெறும் வகையில் பல்வேறு புதிய நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

விழாவிற்கு கலெக்டர் ஜெயராமன் தலைமை வகித்தார். அம்பாசமுத்த¤ரம் நகராட்சி தலைவர் பிரபாகரபாண்டியன், யூனியன் துணை சேர்மன் சிவகுருநாதன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரவீந்திரன், பிடிஓ இந்திரா, கவுன்சிலர் சிவசாமிநாதன், கோடாரங்குளம் பஞ். தலைவர் ராமசாமி மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

சபாநாயகர் ஆவுடையப்பன் தகவல்

அம்பாசமுத்திரம் அருகே கோடாரங்குளத்தில் கட்டப்பட்டுள்ள சமுதாய நலக்கூடத்தை சபாநாயகர் ஆவுடையப்பன் திறந்து வைத்தார். அருகில் கலெக்டர் ஜெயராமன்.

 

மழைநீர் சேமிக்க 12 ஏரி புதுப்பிப்பு

Print PDF

தினகரன் 08.09.2010

மழைநீர் சேமிக்க 12 ஏரி புதுப்பிப்பு

பெங்களூர், செப். 8: பெங்களூரில் மழை வெள்ளத்தை ஏரிகளுக்கு கொண்டு செல்லும் திட்டம் தீவிரமாக நடந்து வருகிறது. முதற்கட்டமாக 12 ஏரிகள் புதுப்பிக்கப்பட்டு இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிடிஏ அதிகாரிகள் கூறுகையில், பெங்களூரில் ஆண்டுதோறும் மழை அளவு அதிகரிக்கிறது. இதனால் உயிர்சேதம், போக்குவரத்து பாதிப்பு, வெள்ளபாதிப்பு போன்றவை ஏற்படுகிறது. இதனை தடுக்க மழைநீரை ஏரிகளில் சேமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதற்கட்டமாக பிடிஏ&விடம் 14ஏரிகள் புனரமைக்க திட்டமிடப்பட்டது. அவற்றில் 12 ஏரிகளில் பணிகள் நிறைவுபெற்றுள்ளன.

பெங்களூரில் மழைநீர் கழிவுநீருடன் கலப்பதால் பிரச்னையாகிறது. எனவே, அவற்றை சுத்தப்படுத்தி ஏரிகளில் நீர்செல்வதற்கான கால்வாயில் விடப்படுகிறது. மேலும், ஏரிகளில் நான்கு அடுக்கு வடிகட்டிகள் பயன்படுத்தப்பட்டு கால்வாயிலிருந்து வரும் தண்ணீரிலுள்ள உப்பு, கழிவுகள் வடிகட்டப்படுகின்றன. இதனால் சுத்தமான தண்ணீர் ஏரிகளை சென்றடைகின்றன.

பெங்களூர் மாநகராட்சி இரண்டாவது கட்டமாக 29ஏரிகளை சுத்தப்படுத்த பிடிஏவிடம் ஒப்படைக்க தயாராகவுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 


Page 168 of 390