Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

30 கோடி குடிநீர் திட்டம்: சோதனை ஓட்டம் வெற்றி

Print PDF

தினமணி 02.09.2010

30 கோடி குடிநீர் திட்டம்: சோதனை ஓட்டம் வெற்றி

உடுமலை,செப்.1: உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி நகரில் ரூ30 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் 95 சதவிகிதம் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் புதன்கிழமை நடந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக அமைந்தது. (படம்)

÷உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் என 3 ஒன்றியம், சங்காரமநல்லூர், மடத்துக்குளம், குமரலிங்கம், கணியூர் என 4 பேரூராட்சிகள் இவற்றுக்குள் அடங்கிய 112 கிராமங்களுக்கு ரூ| 30 கோடி மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தைச் செயல்ப டுத்த தமிழக அரசு முடிவெடுத்தது. 2009 மார்ச் மாதம் பணிகள் துவங்கின. 2010 செ ப்டம்பரில் பணிகளை முடிக்க அரசு உத்தரவிட்டிருந்தது.

÷இதன்படி திருமூர்த்தி அணை தளி வாய்க்காலில் இருந்து 36 கி.மீ. தொலைவில் ஒன்றிய, பேரூராட்சிப் பகுதிகளுக்கும், 93 கி.மீ. ஊரக குடியிருப்புப் பகுதிகளுக்கும் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக 9 நீருந்துகள் (பழைய 5 நீரூந்துகளையும் சேர்த்து), ஏற்கெனவே உள்ள மேல்நிலைத் தொட்டிகள், புதிதாகக் கட்டப்பட உள்ள 5 மேல்நிலைத் தொட்டிகள், புதிதாக பதிக்கப்பட உள்ள 29 கி.மீ. நீளமுள்ள பகிர்மானக் குழாய்கள் மூலம் இந்தக் குடிநீர் வழங்கப்பட உள்ளது.

÷இது குறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் புதன்கிழமை கூறியது:

இது வரை 95 சதவிகித பணிகள் நிறைவு பெற்றுள்ளன. செப்டம்பர் இறுதிக்குள் அனை த்துப் பணிகளையும் முடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இன்று சோதனை வெள்ளோட்டம் நடைபெற்றது. இதில் தளி கால்வாயில் இருந்து நீரேற்று நிலையத்திற்கு எடுத்துச் செல்லும் அதிநவீன மோட்டார்களின் செயல்பாடுகள் சோத னை செய்யப்பட்டது. பின்னர் அங்கிருந்து சுத்திகரிப்பு நிலையத்திற்கும், மேல் நிலைத் தொட்டிக்கும் தண்ணீர் செல்லும் பாதைகளும் சோதனை செய்து பார்க்கப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்துள்ளது என்றனர்.

÷மடத்துக்குளம் ஒன்றியக் குழு பெருந்தலைவர் இரா.ஜெயராமகிருஷ்ணன், துணைத் தலைவர் ப.கா.ரங்கசாமி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கே.எம்.முபாரக் அலி, மாரி முத்து உள்ளிட்ட பலர் இந்த சோதனை ஓட்டத்தை பார்வையிட்டனர்.

Last Updated on Thursday, 02 September 2010 11:33
 

தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க ஜெனரேட்டர்

Print PDF

தினமலர் 02.09.2010

தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க ஜெனரேட்டர்

பாபநாசம்: பாபநாசம் டவுன் பஞ்சாயத்து பகுதிக்கு குடிநீர் வடசருக்கை அருகே கொள்ளிட கரையில் இருந்து குடிநீர் பைப் மூலம் கொண்டு வரப்பட்டு சப்ளை செய்யப்படுகிறது. கொள்ளிடக் கரை பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் குடிநீர் சப்ளை பாதிக்கப்பட்டு வந்தது. இதை போக்கும் வகையில் புதிய ஜெனரேட்டர் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதன்படி 8.55 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட புதிய ஜெனரேட்டரை பாபநாசம் டவுன் பஞ்சாயத்து தலைவர் சேக்தாவூது துவக்கி வைத்தார். துணைத்தலைவர் கதிரேசன் மற்றும் பலர் பங்கேற்றனர்

 

புதிய பஸ் நிலையத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க நடவடிக்கை

Print PDF

தினகரன் 02.09.2010

புதிய பஸ் நிலையத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க நடவடிக்கை

நெல்லை, செப்.2: நெல்லை புதிய பஸ் நிலையத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க நேற்று இரு இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டன.

நெல்லை புதிய பஸ் நிலையத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் பயணிகள் குடிக்க அங்கு போதுமான குடிநீர் இல்லை. அங்கு ஓட்டல்களில் கூட கழிவறை தண்ணீர் பயன்படுத்தப்பட்டு வந்தது.

இதுகுறித்து மாநகராட்சிக்கும் பல்வேறு புகார்கள் சென்றன. மாநகராட்சி கமிஷனர் சுப்பையன், புதிய பஸ் நிலையத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் அங்கு நேற்று இரவில் நாகர்கோவில் பஸ்கள் நிறுத்தும் இடத்திலும், தென்காசி பஸ்கள் நிறுத்தும் இடத்தில் இரு ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டன.

அதில் இருந்து குழாய்கள் பதிக்கப்பட்டு, பஸ் நிலையத்தில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட உள்ளது. அந்த தண்ணீரை சுத்தப்படுத்தி பொதுமக்களுக்கு வழங்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

கயத்தாரில் பிளாஸ்டிக் ஒழிப்பு தினம்

கயத்தார், செப். 2: கயத்தார் அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் பிளாஸ்டிக் பைகளை அகற்றினர்.

கயத்தார் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் பேரூராட்சி சார் பில் ஒரு நாள் பிளாஸ்டிக் ஒழிப்பு தினம் நடந்தது.

பள்ளி தலைமை ஆசிரியை சௌந்திரநாயகி தலைமை வகித்தார். கயத் தார் பேரூராட்சி நிர்வாக அதிகாரி மூக்கன் முன் னிலை வகித்தார். பள்ளி வளாகம் மற்றும் கயத்தார் நகரின் முக்கிய வீதிகளில் அரசு மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ் மாணவர் கள் மற்றும் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் பிளாஸ்டிக் பைகளை அகற்றி சுத்தப்படுத்தினர். 65 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு பேரூராட்சி நிர்வாக அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது. ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ். திட்ட அலு வலர் ராஜேந்திரன் செய்தார்.

 


Page 172 of 390