Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

அனைவருக்கும் குடிநீர் இணைப்பு: பல்லடம் நகராட்சி அறிவிப்பு

Print PDF

தினமணி 31.08.2010

அனைவருக்கும் குடிநீர் இணைப்பு: பல்லடம் நகராட்சி அறிவிப்பு
பல்லடம், ஆக. 30: பல்லடம் நகராட்சி பகுதியில் அனைவருக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என்று நகராட்சி பொறியாளர் சாந்தகுமார் தெரிவித்துள்ளார்.

÷பல்லடம் நகராட்சி (முதல் நிலை) மன்ற அவசரக் கூட்டம், தலைவர் ஆர்.ராமமூர்த்தி தலைமையில் திங்கள்கிழமை நடந்தது. இதில் துனைத்தலைவர் சேகர், செயல்அலுவலர் பெஞ்சமின் குணசிங், பொறியாளர் சாந்தகுமார் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நடந்த விவாதம்:

ராஜேந்திரகுமார்: நகராட்சி குப்பை கொட்ட கேத்தனூர் பகுதியில் வாங்கிய இடத்தில் குப்பை கொட்டப்படுகிறதா?

தலைவர்: அப்பகுதியில் காற்றாலைகள் அதிக அளவில் இருப்பதால் அவ்விடத்தில் குப்பை கொட்டினால் காற்றாலைகளுக்கு பாதிப்பு ஏற்படும். அதனால் அவ்விடத்தில் நகராட்சி சார்பில் ஒரு காற்றாலை அமைத்துக்கொள்ள நகராட்சி இயக்குனர் அலுவலகம் அனுமதி வழங்கியுள்ளது. குப்பை கொட்ட வேறு இடம் பார்த்து கொண்டு உள்ளோம்.

சரளை ரத்தினசாமி: குடிநீர் இணைப்புகளை முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டும். மங்கலம் சாலை - திருப்பூர் சாலையை இணைக்கும் சாலைக்கு புதிய தார்ச் சாலை அமைக்க வேண்டும்.

பொறியாளர்: முன்பு விண்ணப்பம் அளித்த 2,500 பேருக்கும் தபால் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். மேலும் பிரதானக் குழாய் செல்லும் பகுதியில் யார் குடிநீர் இணைப்பு கேட்டு விண்ணப்பம் அளித்தாலும் அவர்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படும்.

துணைத் தலைவர்: சந்தைப்பேட்டையில் சிறுநீர்க் கழிப்பிடம், குடிநீர்க் குழாய் வசதி உடனடியாக செய்ய வேண்டும்.

÷சத்தியமூர்த்தி: கடந்த சில நாட்களுக்கு முன்பு நகராட்சி அலுவலகத்தில் தி.மு.. கவுன்சிலர் கவுஸ்பாட்ஸôவை அதே கட்சியைச் சேர்ந்த வெள்ளியங்கிரி தாக்கியது கண்டனத்திற்குரியது. வெள்ளியங்கிரி மீது காவல் துறையினர் என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர்?

ஜெகதீசன்: கவுன்சிலர் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். வெள்ளியங்கிரிக்கு நகராட்சி டெண்டர் வேலைகளை வழங்கக் கூடாது.

துணைத் தலைவர்: நகராட்சி அலுவலகத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. நகராட்சி அதிகாரி ஏன் போலீசில் புகார் அளிக்கவில்லை?

தலைவர்: நகராட்சி அலுவலகத்தில் இச்சம்பவம் நடந்தது வருத்தம் அளிக்கிறது. இது குறித்து வெள்ளியங்கிரி, நகராட்சிக்கு மன்னிப்பு கடிதம் அளிக்க வேண்டும். அவருக்கு ஒர் ஆண்டுக்கு நகராட்சி ஒப்பந்த வேலைகள் வழங்கப்படாது.

÷இவ்வாறு விவாதம் நடந்தது.

 

கோதண்டபாணிபுரத்தில் சீரான முறையில் குடிநீர் விநியோகம் அமைச்சர் பொன்முடி தகவல்

Print PDF

தினகரன் 31.08.2010

கோதண்டபாணிபுரத்தில் சீரான முறையில் குடிநீர் விநியோகம் அமைச்சர் பொன்முடி தகவல்

திருக்கோவிலூர், ஆக. 31: திருக்கோவிலூர் அருகே அரகண்டநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட கோதண்டபாணிபுரத்தில் கட்டிமுடிக்கப்பட்டும் பொதுமக்களுக்கு பயன்படாத நிலையில் இருந்த மேல்நிலை குடிநீர் தொட்டியை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி ஆய்வு செய்தார்.

பின்னர் அமைச்சர் பொன்முடி நிருபர்களிடம் கூறியதாவது, அரகண்டநல்லூர் பேரூராட்சிக்குபட்ட கோதண்டபாணிபுரத்தில் அமைக்கப்பட்ட மேல்நிலை குடிநீர் தொட்டி யில் தண்ணீர் ஏற்றி பொதுமக்களுக்கு வழங்கப்படவில்லை என்று ஒரு நாளேட் டில் செய்தி வெளி யாகி உள்ளது. இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டார். அதன்படி இங்கு அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி ஆய்வு செய்யப்பட்டது. கடந்த ஆட்சியில் தான் இந்த மேல்நிலை குடிநீர் தொட்டி வடிவமைக்கப்பட்டது. அதன்பிறகு இந்த குடிநீர் தொட்டியை துணை முதல்வர் திறந்து வைத்தார். அப்போது வடிவமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரண மாக தான் இந்த மேல்நிலை தொட்டியில் தண்ணீ ஏற்றமுடியாமல் போனது.

ஆனால் இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்குவதில் எந்த தாமதமோ சிரமமோ இல்லை. சீரான முறையில் இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் எங்கு குடிநீர் பிரச்னை இருந்தாலும் முதல்வர் கருணாநிதி அரசு உடனடி யாக நடவடிக்கை எடுக்கும். இந்த மேல்நிலை குடிநீர் தொட்டியில் ஒரு வாரத்துக்குள் தண்ணீர் ஏற்றி பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படும். அதுமட்டுமின்றி தரைதளத்தில் இதற்காக தண்ணீர் தொட்டி அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க நாளை (இன்று) சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து ஆய்வு கூட்டம் நடத்தப்படவுள்ளது. என்று அவர் கூறினார். அப்போது புஷ்பராஜ் எம்எல்ஏ, மாவட்ட விற்பனை குழு தலைவர் ராதாமணி, மாவட்ட ஆட்சியர் பழனி சாமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பழனி சாமி, கோட்டாட்சி யர் வரலட்சுமி, தாசில்தார் பாமா, திமுக ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், வழக்கறிஞர் தங்கம், நகர செய லாளர் செல்வராஜ், சடை யாண்டி, தெய்வசிகா மணி, பேரூராட்சி தலைவர் சுந்தரமூர்த்தி, மஸ்தான், துணைத்தலைவர் வக்கீல் அன்பு, முன்னாள் பேரூராட்சி தலைவர் ஏழுமலை, பிரபு, கவுன்சிலர்கள், குணா, கோவிந்து, மொபின்கான், ஒன்றிய துணை செயலாளர்கள் சங்கர், லெனின்தாஸ், முருகதாஸ், சரவணகாசன், குணசேகரன், இளைஞரணி அமைப்பாளர் நாயகம், ஜெயராமன், ராஜ்மோகன், வருவாய் அய்வாளர் கண் ணன், விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Tuesday, 31 August 2010 09:32
 

கோவில்பட்டி நகராட்சி குடிநீர் திட்டத்திற்கு தமிழக அரசு விரைவில் ரூ.82 கோடி அனுமதி

Print PDF

தினமலர் 31.08.2010

கோவில்பட்டி நகராட்சி குடிநீர் திட்டத்திற்கு தமிழக அரசு விரைவில் ரூ.82 கோடி அனுமதி

தூத்துக்குடி : கோவில்பட்டி நகராட்சிக்கு தனி குடிநீர் திட்டம் செயல்படுத்துவதற்கு விரைவில் அரசு அரசு அனுமதி கிடைத்துவிடும் என்றும், கலைஞர் காப்பீடு திட்ட ஆபரேஷன் மேற்கொள்ள தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் ஒரு கோடி ரூபாய் செலவில் "ஸ்பெஷல்' வார்டு உருவாக்க கலெக்டர் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டிருப்பதாக கலெக்டர் தெரிவித்தார். தூத்துக்குடி கலெக்டர் ஆபிசில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பிரகாஷ் தலைமையில் நடந்தது. அதிகமான பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை சம்பந்தமாக கலெக்டரிடம் மனு அளித்தனர்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது;முதல்வர் தலைமையில் சென்னையில் நடந்த இரண்டு நாள் மாநாட்டில் கலைஞர் காப்பீடு திட்டத்தில் அதிகமான இலவச ஆபரேஷன் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. நம் பகுதியில் உள்ளவர்களுக்கு இருதய ஆபரேஷன் மேற்கொள்ள கோவை, சென்னை போன்ற இடங்களுக்கு தான் அனுப்ப வேண்டியிருக்கிறது.

இந்த பகுதியில் இதுபோன்ற சில நோய்களுக்கு ஆபரேஷன் செய்ய வசதி இருந்தால் கூடுதல் பயனாளிகளை இதன் மூலம் பயன்பெறச் செய்யும் வாய்ப்பு இருக்கும். அந்த வாய்ப்பு இந்த பகுதியில் இல்லாமல் இருக்கிறது.இதனால் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் ஒரு கோடி ரூபாய் செலவில் கலைஞர் காப்பீடு திட்டத்திற்கு என்று ஸ்பெஷல் வார்டு ஒன்று ஏற்படுத்த வேண்டும் என்றும், அந்த வார்டில் அனைத்து வசதிகளும் இருக்கும் வகையில் ஏற்படுத்தவேண்டும். இதற்காக சுமார் ஒரு கோடி ரூபாய் செலவாகும் என்று முதல்வர் மாநாட்டில் தெரிவித்தேன். மிக விரைவில் இதற்கான அனுமதி தருவதாக கூறியுள்ளனர்.

கோவில்பட்டி நகராட்சி பகுதியில் மக்கள் குடிநீர் பிரச்னையை போக்கும் வகையில் சீவலப்பேரியில் இருந்து கோவில்பட்டி நகராட்சிக்கு மட்டும் தனியாக குடிநீர் திட்டம் 82 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படுகிறது.

இதில் 80 சதவீதம் மத்திய அரசு நிதியும், 10 சதவீதம் மாநில அரசு நிதியும், 10 சதவீதம் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு நிதியும் பயன்படுத்தப்படுகிறது. கோவில்பட்டி நகராட்சிக்கு என்று பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த திட்டம் குறித்து கூட்டத்தில் வலியுறுத்தினேன். இதற்கு மிக விரைவில் அனுமதி வந்துவிடும் என்று தெரிவித்தனர்.

விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் பகுதியில் களிமண் அதிகமாக இருப்பதால் ரோடு போடும் பணியில் கடும் சிரமம் ஏற்படுகிறது. இதனால் களிமண் முழுவதையும் அகற்றிய பிறகு தான் ரோடுபோடும் பணியினை செய்ய வேண்டியுள்ளது.

இதனால் மற்ற பகுதியை விட இங்கு அதிகமாக செலவு ஆவதாக நெடுஞ்சாலைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் இந்த இரண்டு பகுதிக்கும் பிற இடங்களை விட ரோடு பணிக்கு கூடுதல் ரேட் வழங்க வேண்டும் என்று முதல்வர் மாநாட்டில் தெரிவித்தேன். அதனையும் பரிசீலிப்பதாக தெரிவிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுதிறனாளிகள் 15 ஆயிரம் பேர் வரை உள்ளனர். இதில் 4 ஆயிரம் பேர் மாதாந்திர ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். மேலும் 4 ஆயிரம் பேருக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்காக ஸ்பெஷல் கேம்ப் நடத்தி பயனாளிகள் அடையாளம் காணப்பட உள்ளனர். இவ்வாறு பிரகாஷ் தெரிவித்தார்.

டி.ஆர்.ஓ துரை.ரவிச்சந்திரன், இலவச கலர்டிவி திட்ட துணை ஆட்சியர் மீராபரமேஸ்வரி, மக்கள் குறைதீர்க்கும் பிரிவு தனித்துணை ஆட்சியர் லதா, துணை ஆட்சியர் (பயிற்சி) இந்துமதி, பி.ஆர்.ஓ பாலசக்திதாசன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர

 


Page 173 of 390