Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

இடலாக்குடி குளத்தூரில் ஆழ்குழாய் அமைக்கும் பணி

Print PDF

தினமணி 27.08.2010

இடலாக்குடி குளத்தூரில் ஆழ்குழாய் அமைக்கும் பணி

நாகர்கோவில், ஆக.26: நாகர்கோவில் நகராட்சி 19-வது வார்டுக்கு உள்பட்ட இடலாக்குடி குளத்தூரில் ஆழ்குழாய் அமைக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது. தொடக்க நிகழ்ச்சிக்கு, நகர்மன்ற உறுப்பினர் பியாஸô ஹாஜிபாபு தலைமை வகித்தார்.

சதாவதானி பாவலர் நற்பணி மன்றத் தலைவர் சித்திக் தொடங்கி வைத்தார். ஹாஜிபாபு, லியாகத்அலி, ஆசிரியர் பாலன், தலைமையாசிரியர் முத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

பரமக்குடி நகராட்சியில் கூடுதலாக 10 ஆயிரம் குடிநீர் இணைப்புகள்:ஆணையர்

Print PDF

தினமணி 27.08.2010

பரமக்குடி நகராட்சியில் கூடுதலாக 10 ஆயிரம் குடிநீர் இணைப்புகள்:ஆணையர்

பரமக்குடி,ஆக.26: பரமக்குடி நகராட்சிப் பகுதியில் கூடுதலாக 10 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட உள்ளதாக ஆணையர் கே.அட்சயா புதன்கிழமை தெரிவித்தார். இதுகுறித்து மேலும் அவர் கூறியது:

நகராட்சிப் பகுதியில் ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் கீழ் காவிரி ஆற்று குடிநீர் 12.6.2009 முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மேலும் 10 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன.

குடிநீர் இணைப்புப் பெற விரும்புவோர் நகராட்சி அலுவலகத்தில் நேரடியாக டெபாசிட் தொகை செலுத்தி ஒரு வார காலத்துக்குள் இணைப்பு பெற்றுக்கொள்ளலாம்.

இதில் குடியிருப்புப் பகுதியில் வசிப்பவர்கள் ரூ. 7 ஆயிரமும், குடியிருப்பு அல்லாத வணிக உபயோகத்துக்கு ரூ. 15 ஆயிரமும் டெபாசிட் தொகையாக செலுத்த வேண்டும்.

இதில் சாலை சீரமைப்புப்பணிக்காக கருங்கல் ஜல்லி சாலைக்கு ரூ. 2261-ம், தார்சா லைக்கு ரூ. 3641-ம், சிமெண்ட் சாலைக்கு ரூ. 4259-ம் கூடுதல் கட்டணமாக வசூலிக்கப் படும். சாலையின் தூரத்துக்கு தகுந்தபடி சாலை சீரமைப்புக் கட்டணம் மாறுபடும். குடியிருப்போர் தங்களின் வீடுகளுக்கு தாங்களே பிளம்பர்களைக் கொண்டு தங்கள் கட்டடங்களின் உள் குழாய் வேலைகளை செய்தபின் அலுவலகத்தில் தெரிவித்த ஏழு நாள்களுக்குள் இணைப்பு வழங்கப்படும். இதில் இடைத்தரகர்களை அணுகாமல் நகராட்சி அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம்.

ஏற்கெனவே குடிநீர் இணைப்பு பெற்றுள்ளவர்கள் தங்களது இணைப்புக்கு தற்போது திருத்தம் செய்து உயர்வு செய்யப்பட்ட டெபாசிட் தொகையின்படி வித்தியாசப்படும் தொகையினை மூன்று மாதத்துக்குள் மொத்தமாகவோ தவணை முறையிலோ செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என அவர் தெரிவித்தார்

 

காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு விரைவில் அடிக்கல் நாட்டு விழா

Print PDF

தினமலர் 27.08.2010

காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு விரைவில் அடிக்கல் நாட்டு விழா

மேலூர்:மதுரை மாவட்டம் முழுவதும் பயன்பெற உள்ள காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு மேலூரில் இரண்டு மாதங்களில் அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என தி.மு.., செயல்வீரர்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.மேலூர் நகர் சார்பில், லட்சுமி மண்டபத்திலும், ஒன்றியம் சார்பில் மூவேந்தர் மண்டபத்திலும் தி.மு.., செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

தலைமை வகித்து மூர்த்தி எம்.எல்.., பேசியதாவது : மதுரை மாவட்டத்திலேயே அதிகளவாக 1128 கான்கிரீட் வீடுகள் மேலூர் பகுதியில் தான் கட்டப்பட உள்ளன. 299 கோடி ரூபாயாக தொடங்கி 784 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் தற்போது காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மாவட்ட அளவிற்கு தயாராகி உள்ளது.இதற்கான அடிக்கல் நாட்டு விழா ஒன்றிரண்டு மாதங்களில் மேலூரில் நடைபெறும். மேலூரில் துவக்கப் பட்டுள்ள பாலிடெக்னிக்கில் இந்த ஆண்டு சேர்ந்துள்ள 284 மாணவர்களில் மேலூரை சேர்ந்தவர்கள் 100 பேர் என பேசினார். நகர் செயலாளர் இப்ராஹிம் சேட், ஒன்றிய செயலாளர் ரகுபதி, நகராட்சி தலைவர் தமிழரசி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 


Page 175 of 390