Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

மார்ச் 2011 இறுதிக்குள் பில்லூர் திட்டம் முடிவுக்கு வரும் மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு

Print PDF

தினகரன் 27.08.2010

மார்ச் 2011 இறுதிக்குள் பில்லூர் திட்டம் முடிவுக்கு வரும் மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு

கோவை, ஆக. 27: பில்லூர் 2வது குடிநீர் திட்டம் மார்ச் 2011க்குள் நிறைவு பெற்றுவிடும் என மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா தெரிவித்தார். கோவை மாநகராட்சி கூட்டம் மேயர் வெங்கடாசலம் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் கவுன்சிலர் ராஜ்குமார் பேசுகை யில், ‘பில்லூர் 2வது திட்டப் பணி எந்த நிலையில் உள் ளது. எப்போது மாநகரத்திற்கு 2வது திட்ட குடிநீர் விநியோகிக்கப்படும்என்றார்.

கமிஷனர் அன்சுல் மிஸ் ரா பதிலளிக்கையில், முதல் பிரிவு (பேக்கேஜ்) பணியில் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டுள்ளது. மின்வாரியத்துறை மூலம் செயல்படுத்த வேண் டும். 3,4வது பணிகள் முடிந்துவிட்டது.

5வது பிரிவு பணியில் 3 கி.மீ தூரத்திற்கு மட்டுமே பணி நடக்க வேண்டியுள் ளது. தேசிய நெடுஞ்சாலைத் துறையிடம் இருந்து அனு மதி வந்த ஒரு மாதத்தில் பணி முடிக்கப்படும். முழு பணியும் அடுத்தா ண்டு மார்ச் மாதத்திற்குள் நிறைவு செய்யப்படும்.

24 மணி நேர குடிநீர் விநியோகம் தொடர்பான விரிவான திட்ட அறிக்கை இறுதிக் கட்டத்தில் உள்ளது. அடுத்த அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் செயல்படுத்தக்கூடிய நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அன்சுல் மிஸ்ரா தெரிவித்தார்.

 

செப்டம்பர் இறுதி வரை குடிநீர் வெட்டு தொடர்ந்து நீடிக்கும்

Print PDF
தினகரன் 26.08.2010

செப்டம்பர் இறுதி வரை குடிநீர் வெட்டு தொடர்ந்து நீடிக்கும்

மும்பை,ஆக.26:மும்பை யில் தற்போதுள்ள குடிநீர் வெட்டு செப்டம்பர் இறுதி வரை நீடிக்கும் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மும்பையில் இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிக அளவு மழை பெய்துள்ளது. இதனால் மும்பைக்கு குடிநீர் வழங்கும் நான்கு ஏரிகள் ஏற்கனவே நிரம்பி விட்டன. ஆனால் அதிகப்படியான தண்ணீர் வழங்கும் பாட்சா மற்றும் அப்பர்வைதர்ணா ஏரிகள் இன்னும் நிரம்பவில்லை.

ஆறு ஏரிகளிலும் தற்போது 10.92 லட்சம் மில்லியன் லிட்டர் அளவுக்கு தண்ணீர் இருக்கிறது. ஆனால் ஆண்டு முழுவதுக்கும் மும்பையில் குடிநீர் விநியோகம் செய்ய 13.5 லட்சம் மில்லியன் லிட்டர் அளவுக்கு தண்ணீர் தேவையாகும்.

தற்போது தினமும் மும்பையில் 3100 மில்லியன் லிட்டர் அளவுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் போதிய அளவுக்கு தண்ணீர் இருப்பதால் குடிநீர் வெட்டை ரத்து செய்யவேண்டும் என்று கவுன்சிலர்கள் கோரி வந்தனர்.ஏற்கனவே 15 சதவீதமாக இருந்த குடிநீர் வெட்டு 7 சதவீதமாக குறைக்கப் பட்டுள்ளது. அதையும் அடியோடு நீக்கவேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரி வந்தனர். இந்நிலையில் இக் கோரிக்கை குறித்து மாந கராட்சி துணை கமிஷனர் தினேஷ் கோண்டாலியா அளித்த பேட்டியில்,‘ கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஏரிகளில் திருப்தியளிக்கும் வகையில் தண்ணீர் இருக்கிறது.

ஆனாலும் அடுத்த மழைகாலம் வரை தண்ணீர் விநியோகம் செய்ய வேண்டியதிருப்பதால் தற்போதுள்ள குடிநீர் வெட்டு செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். தற்போதுள்ள குடிநீர் வெட்டை ரத்து செய்வது குறித்து அக்டோபர் ஒன்றாம் தேதி ஆய்வு செய்யப்படும். ஆனால் அதற்குள் பாட்சா மற்றும் அப்பர்வைதர் ணா ஏரிகள் நிரம்பி விட்டால் முன்கூட்டியே குடிநீர் வெட்டு குறைக்கப்படும் அல்லது ரத்து செய்யப் படும்.

பாட்சா மற்றும் அப்பர்வைதர்ணா ஏரிகள் நிரம்பினால் மட்டுமே நிலைமையை சமாளிக்க முடியும். பாட்சா ஏரி நிரம்ப இன்னும் 6.5 மீட்டரும் அப்பர்வைதர்ணா ஏரி நிரம்ப 2.75 மீட்டரும் பாக்கி இருக்கிறதுஎன்று தெரிவித்தார்.

 

 

பழநிக்கு ரூ.20 கோடியில் குடிநீர் திட்டம்

Print PDF

தினமலர் 26.08.2010

பழநிக்கு ரூ.20 கோடியில் குடிநீர் திட்டம்

பழநி:புதிய குடிநீர் திட்டத் திற்காக ரூ.20 கோடியில் பழநி நகராட்சியால் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.பாலாறு-பொருந்தலாறு அணை, கோடைகால நீர்த் தேக்கம் பழநிக்கு குடிநீர் ஆதாரங்களாக விளங்குகின்றன. பாலாறு-பொருந்தலாறு அணைப்பகுதியில் இருந்து வரும் பைப் லைனில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுவதால் ஏற்கனவே உள்ள குழாயை ஒட்டி ரூ.3.3 கோடி மதிப்பீட்டில் புதிய இரும்பு குழாய் அமைத்தல்.

கோடைகால நீர்த்தேக் கம், பாலாறு -பொருந்தலாறு அணையில் இருந்து வரும் குடிநீரை இணைக்க தரை மட்ட தேக்கத் தொட்டி கட்டுதல், சுத்திகரிப்பு பணிகளை மேம்படுத்துதல், கோடைகால நீர்த் தேக்கத்தை ஆழப்படுத்தி,அகலப்படுத்துதல், ஒரு நாளைக்கு ஒருவருக்கு 135 லிட்டர் தண்ணீர் கொடுக்க வகை செய்தல், காமராஜர் நகரில் 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள மேல்நிலைத்தொட்டி கட்டுதல் போன்ற பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தேச திட்ட மதிப்பீடு ரூ.20 கோடியே 3 லட்சத்திற்கு பழநி நகராட்சியினரால் தயாரிக்கப்பட்டுள்ளது.

 


Page 176 of 390