Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

கிணத்துக்கடவு பேரூராட்சியில் 3 இடங்களில் குடிநீர் வசதிக்காக சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி

Print PDF

மாலை மலர் 25.08.2010

கிணத்துக்கடவு பேரூராட்சியில் 3 இடங்களில் குடிநீர் வசதிக்காக சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி

கிணத்துக்கடவு, ஆக. 25- கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் பகவதிபாளையம் பகுதியில் பொதுமக்களுக்கு போதுமான அளவு குடிநீரை பேரூராட்சி நிர்வாகம் வழங்கி வருகிறது. ஆனால் அத்தியாவசிய தேவைக்காக போர்வெல் தண்ணீர் இல்லை. இதனால் இந்த பகுதி மக்கள் பேரூராட்சி தலைவர் கே.விஜயாகதிர்வேலிடம் தங்கள் பகுதிக்கு போர்வெல் தண்ணீர் அத்தியாவசிய பணிகளுக்காக தேவை என கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து பேரூராட்சி நிர்வாகம் கிணத்துக்கடவு பேரூராட்சிக்குட்பட்ட பகவதிபாளையம் பகுதியில் 12-வது வார்டில் 2 சின்டெக்ஸ் டேங்குகளும், 7-வது வார்டு பகுதியில் ஒரு சின்டெக்ஸ் டேங்கும் அமைத்து போர்வெல் மூலம் ரூ.75 ஆயிரம் செலவில் பகவதிபாளையம் பகுதி மக்களுக்கு தண்ணீர் வசதி செய்யப்பட்டுள்ளது.

இதன் தொடக்க விழா பகவதிபாளையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் சுந்தர்ராஜ் முன்னிலை வகித்தார். பேரூராட்சி மன்ற துணை தலைவர் வே.கனகராஜ் முன்னிலை வகித்தார். வார்டு கவுன் சிலர் டி.கதிரராட்சி மன்ற தலைவர் கே.விஜயாகதிர்வேல் கலந்து கொண்டு குடிநீர் குழாயை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் வார்டு கவுன்சிலர் ஜெயக்குமார், ஆறுச்சாமி, அன்னரத்தினம், கே.எம்.கிருஷ்ணன், தேவராஜ், தினேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

சென்னை புறநகரில் மழை புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு 1084 கனஅடி வருகிறது

Print PDF

மாலை மலர் 25.08.2010

சென்னை புறநகரில் மழை புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு 1084 கனஅடி வருகிறது

சென்னை, ஆக.25- வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழை நீடித்துள்ளது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மழை பெய்து வருகிறது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரி பகுதியில் 6 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. சோழவரத்தில் 7 மி.மீ., செங்குன்றத்தில் 10 மி.மீ., செம்பரம் பாக்கத்தில் 12 மி.மீ., வீராணத்தில் 3 மி.மீ. மழை பெய்துள்ளது.

மழை காரணமாக அனைத்து குடிநீர் ஏரிகளுக்கும், நீர்வரத்து அதிகரித்துள்ளது. புழல் ஏரிக்கு தண்ணீர்வரத்து 1084 கனஅடியாக அதிகரித்துள்ளது. பூண்டி ஏரிக்கு 285 கனஅடியும், சோழவரம் ஏரிக்கு 116 கனஅடியும் தண்ணீர் வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு 191 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. வீராணம் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி 900 கனஅடி தண்ணீர் வருகிறது.

பூண்டி ஏரியில் தண்ணீர் இருப்பு நேற்று முன்தினம் 1153 மில்லியன் கனஅடியாக இருந்தது. இன்று 1202 மில்லியன் கனஅடியாக அதிகரித்துள்ளது. புழல் ஏரியில் நீர்பிடிப்பு 1282 மில்லியன் கனஅடியில் இருந்து 1419 மில்லியன் கனஅடியாகி இருக்கிறது. சோழவரம் ஏரியில் 230 மில்லியன் கனஅடி 285 மில்லியன் கனஅடியாகவும், செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் இருப்பு 1702 மில்லியன் கனஅடியில் இருந்து 1759 மில்லியன் கனஅடியாகவும் அதிகரித்துள்ளது. வீராணம் ஏரி நீர்இருப்பு 474 மில்லியன் கனஅடியில் இருந்து 556 மில்லியன் கனஅடியாகி இருக்கிறது.

சென்னை நகரின் குடிநீர் சப்ளைக்கு ஏரிகளில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் 580 மில்லியன் லிட்டர், மீஞ்சூர் கடல் நீரில் இருந்து தயாரிக்கப்படும் குடிநீர் தற்போது 80 மில்லியன் லிட்டர் வருகிறது.

சென்னை புறநகரில் மழை
 
 புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு
 
 
 
 1084 கனஅடி வருகிறது

சென்னை நகருக்கு தினம் 580 மில்லியன் லிட்டர் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. தொழிற்சாலைகளுக்கும் சேர்த்து மொத்தம் 660 மில்லியன் லிட்டர் தண்ணீர் வினியோகம் ஆகிறது.

Last Updated on Wednesday, 25 August 2010 11:38
 

ஸ்ரீவி.,யில் தண்ணீருக்கு மக்கள் தவிப்பு : கண்டு கொள்ளாத நகராட்சி நிர்வாகம்

Print PDF

தினமலர் 25.08.2010

ஸ்ரீவி.,யில் தண்ணீருக்கு மக்கள் தவிப்பு : கண்டு கொள்ளாத நகராட்சி நிர்வாகம்

ஸ்ரீவில்லிபுத்தூர் : குடிநீர் பிரச்சனையை பற்றி கண்டு கொள்ளாத ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி நிர்வாகத்தால் மக்கள் தண்ணீருக்கு தவியாய் தவித்து வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் கடந்த இரண்டு ஆண்டாக சரி வர மழை பெய்யாததால் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து போர்வெல்களில் தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளில் புழங்குவதற்கு கூட ஒரு குடம் தண்ணீர் மூன்று ரூபாய் கொடுத்து வாங்கும் நிலை வந்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிக்கு செண்பக தோப்பு பேயனாற்று படுகையில் கிணறு, போர்வெல்கள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.தற்போது செண்பகதோப்பு பேயனாறு வறண்டு காணப்படுவதால் இப்பகுதி போர்வெல், கிணறுகளில் ஒரு சிலவற்றில் மட்டுமே தண்ணீர் இருந்து வருகிறது.

இதன் மூலம் 24 லட்சம் லிட்டர் தண்ணீரே கிடைத்து வருவதால் கடந்த இரண்டு மாதமாக நகராட்சி நிர்வாகம் பத்து நாளுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கி வந்தது. தற்போது நேற்று முன் தினம் வரவேண்டிய பகுதிகளுக்கு நேற்று குடிநீர் சப்ளை செய்யப்பட்டது. இதன் மூலம் குடிநீர் வழங்கும் நாள்களின் எண்ணிக்கை பதினொன்றாக அதிகரித்துள்ளது. ஏற்கனவே நகராட்சி சார்பில் குடிநீர் கிணறுகளில் மின்சப்ளை இல்லாத நேரத்தில் மோட்டார்கள் ஓடுவதற்கு வசதியாக பல லட்சம் செலவில் பொருத்தப்பட்ட ஜெனரேட்டர்கள் இன்று வரை ஓட வில்லை. இதனால் அரசு பணம் வீணாவதோடு மக்களும் தண்ணீரின்றி தவித்து வருகின்றனர். மேலும் மக்களின் தண்ணீர் பிரச்சனையை போக்க லாரிகள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யாமல் அதற்கு மாவட்ட கலெக்டர் அனுமதிக்கவில்லை என்று கூறி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி தண்ணீர் பிரச்சனையில் தலையிட்டு லாரி மூலம் குடிநீர் சப்ளை செய்யவும், மழை வரும் வரை காத்திருக்காமல் உடனடியாக தேவையான போர்வெல்களை போட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 


Page 177 of 390