Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

விழுப்புரம் நகரத்தில் தடையில்லா குடிநீர் வழங்கப்படுகிறது நகரமன்ற தலைவர் ஜனகராஜ் பேச்சு

Print PDF

தினகரன் 24.08.2010

விழுப்புரம் நகரத்தில் தடையில்லா குடிநீர் வழங்கப்படுகிறது நகரமன்ற தலைவர் ஜனகராஜ் பேச்சு

விழுப்புரம், ஆக 24: ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின்கீழ் விழுப்புரம் ஐசிடிஎஸ் சார்பில் குழந்தை பணியாளர்களுக்கான பயிலரங்கம் விழுப்புரத்தில் நடந்தது. குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பூங்குழலி வரவேற்றார். மேற்பார்வையாளர் லலிதா, அங்கன்வாடி பணியாளர் கமலா ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர்.

சிறப்பு விருந்தினராக நகரமன்ற தலைவர் ஜனகராஜ் கலந்து கொண்டு பேசும்போது, விழுப்புரம் நகரம் வளர்ச்சி அடைவதற்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பல் வேறு முயற்சி எடுத்து வருகி றார். தமிழக முதல்வரும், துணை முதல்வரும் மாநிலம் வளர்ச்சியடைய பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.

1991ல் நான் நகரமன்ற தலைவராக இருக்கும்போது, தமிழ்நாட்டில் வேறு எந்த நகராட்சியிலும் போடாத அளவுக்கு அதிக சிமெண்ட் சாலைகள் போடப்பட்டன. தற்போது பாதாள சாக்கடை திட்டம் நடந்து வருகிறது. இதனால் சாலைகள் சேத மடைந்துள்ளன. இது எனக்கு மிகவும் மனவருத்தத்தை அளிக்கும் வகையில் உள் ளது. தமிழக முதல்வர் ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். அதில் ரூ.13 கோடியை விழுப்புரம் நகராட்சி வளர்ச்சிக்கு நமது அமைச்சர் பொன்முடி பெற்று தந்துள்ளார். இன் னும் நான்கு மாதங்களில் அனைத்து சாலைகளும் சிமெண்ட் சாலையாக மாற்றப்படும். விழுப்புரம் நகராட்சியில் தடையில்லா குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. 90 சதவீத மின்வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவுக்கு இது வரை விழுப்புரம் நகராட்சி யில் வரி ஏற்றப்படவில்லை. தமிழ்நாட்டிலேயே வரி ஏற்றப்படாத நகராட்சி, விழுப்புரம் நகராட்சிதான், என் றார். நகர்மன்ற உறுப்பினர் கள் பஞ்சநாதன், ஸ்ரீவினோத், ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

தொடர் மழையால் கிடைத்த பலன் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்வரத்து அதிகரிப்பு

Print PDF

தினகரன் 24.08.2010

தொடர் மழையால் கிடைத்த பலன் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்வரத்து அதிகரிப்பு

சென்னை, ஆக. 24: தொடர் மழையால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

வெப்ப சலனம் மற்றும் குறைந்த காற்றழுத்தத்தால் காரணமாக, தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்திலும் கனமழை பெய்ததால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான பூண்டி, செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக, புழல் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது.

ஏரிகளில் நீர் இருப்பு விவரம்:

பூண்டி ஏரி: கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடி. இருப்பு 1,153 மில்லியன் கன அடி. மழைநீர் வரத்து 296 கன அடி. பேபி கால்வாய் மூலம் புழல் ஏரிக்கு 30 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம்: கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடி. இருப்பு 1,702 மி.கன அடி. மழை நீர் வரத்து 469 கன அடி. சென்னை குடிநீருக்கு 75 கன அடி வெளியேற்றப்படுகிறது.

புழல்: கொள்ளளவு 3,300 மி.கன அடி. இருப்பு 2282 மி.கன அடி. மழைநீர் வரத்து 806 கன அடி. சென்னைக்கு 158 கன அடி வெளியேற்றப்படுகிறது.

சோழவரம்: கொள்ளளவு 881 மி.கன அடி. இருப்பு 230 மி. கன அடி. மழைநீர் வரத்து 394 கன அடி.

 

மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 10 கிராம பஞ்.சிற்கு, குடிநீர் வழங்க ஆய்வு பணிகள் துவக்கம்

Print PDF

தினமலர் 24.08.2010

மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 10 கிராம பஞ்.சிற்கு, குடிநீர் வழங்க ஆய்வு பணிகள் துவக்கம்

.தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகராட்சியில் சேர்க்கப்பட்ட 10 கிராம பஞ்சாயத்துக்களுக்கு மாநகராட்சி குடிநீர் வழங்கும் திட்டத்திற்கான ஆய்வு பணி துவங்கியுள்ளது என்று மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார். தூத்துக்குடி மாநகராட்சி புதிய கட்டடத்தில் நேற்று முதல் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டார்.

கூட்டம் துவங்கும் முன்பாக அவர் பேசியதாவது; புதியதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள மாநகராட்சியில் நடக்கும் முதல் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கு கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். பக்கிள் ஓடை சீரமைப்பு என்பது அய்யாச்சாமி எம். எல்.ஏவாக இருந்த போதே வலியுறுத்தப்பட்டு வந்தது. ஆனால் அவை நடக்கவில்லை. திமுக ஆட்சியில் பக்கிள் ஓடை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்து முதல் கட்ட பணிகள் நிறைவு பெற்று, இரண்டாம் கட்ட பணிகள் துவங்கியுள்ளது. இந்த திட்டம் மூலம் நகரின் சுகாதார பிரச்னைக்கு விடிவு ஏற்பட்டுள்ளது.

இதே போல் பாதாள சாக்கடை திட்ட வேலைகளும் விரைவாக நடந்து வருகிறது. பாதாளசாக்கடை திட்ட பணிகள் நடப்பதால் நகரில் ரோடுகள் குண்டும், குழியுமாக உள்ளது. இந்த ரோடுகளை சீரமைக்க தமிழக முதல்வர் 10 கோடி ரூபாய் அனுமதியளிக்க உள்ளார். இந்த பணம் மிக விரைவில் வர உள்ளது. அதன் பிறகு ரோடு போடும் பணி துவங்கும். இதே போல் தூத்துக்குடி 1ம் கேட், 2ம் கேட்டில் போக்குவரத்து நெருக்கடி தீர்வதற்காகவும், மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இரண்டு இடத்திலும் சுரங்கப்பாதை அமைக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. விரைவில் அங்கு சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதே போல் தேர்தல் காலத்தில் நான் மக்கள் மத்தியில் வைத்த கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றப்பட்டு விட்டன.

தூத்துக்குடி மாநகராட்சியில் இணைக்கப்பட்டுள்ள 10 கிராம பஞ்சாயத்துக்களுக்கு மாநகராட்சி குடிநீர் வழங்குவதற்கான ஆய்வு பணிகள் துவக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சிக்கு தான் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் முழுமையாக நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடந்துள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

 


Page 178 of 390