Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

வெள்ளகோவிலுக்கு ரூ.25 கோடியில் காவிரி குடிநீர்

Print PDF

தினமலர் 20.08.2010

வெள்ளகோவிலுக்கு ரூ.25 கோடியில் காவிரி குடிநீர்

வெள்ளகோவில்: ""காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் மூலனூர், வெள்ளகோவிலில் விடுபட்ட பகுதிக்கு 26 கோடி ரூபாய் செலவில் குடிநீர் விஸ்தரிப்பு பணி நடக்கிறது,'' என, மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் இல பத்மநாபன் கூறினார்.

அவர் கூறியதாவது:மாவட்ட பஞ்சாயத்து நிதி மூலம் 2006-07ல் பெரமியம் பஞ்சாயத்து அக்கறைபாளையம், அத்திமரத்தூர் மற்றும் நொச்சிகாட்டு வலசு வரை நான்கு லட்சம் ரூபாய் செலவில் மெட்டல் சாலை அமைக்கப்பட்டுள்ளது.கிளாங்குண்டல் பஞ்சாயத்தில் புத்தூர் - அனுப்பப்பட்டி வரை புதிய மெட்டல் சாலை மூன்று லட்சம் ரூபாய், கருப்பன்வலசு பஞ்சாயத்தில் நல்லசெல்லிபாளையம் முதல் பட்டத்திபாளையம் வரை மண் சாலை 1.75 லட்சம் ரூபாய், வேளாம்பூண்டியில் கான்கிரீட் சாலை 60 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது. தூரம்பாடி பஞ்சாயத்தில் ஒரு லட்சம் ரூபாய் செலவில் குடிநீர் பணி, பொன்னிவாடியில் 60 ஆயிரம் ரூபாய் செலவில் ஆழ்குழாய் அமைக்கப்பட்டது.

பெரமியத்தில் 2007-08ல் 1.20 லட்சம் ரூபாய் செலவில் எருக்கலங்காட்டு புதூரில் ஆழ்குழாய் அமைத்து நீர்மூழ்கி மோட்டார் வைத்து குழாய் அமைக்கப்பட்டது. 3.22 லட்சம் ரூபாய் செலவில் கருப்பன்வலசில் தார் சாலை அமைக்கப்பட்டது.குமாரபாளையத்தில் 3.15 லட்சம் ரூபாய் செலவில் மாவட்ட எல்லை சாலை முதல் கந்தசாமிபுதூர் வரை தார் சாலை அமைக்கப்பட்டது. தூரம்பாடி பஞ்சாயத்தில் 26 ஆயிரம் ரூபாய், நைனாகவுண்டர்வலசில் 30 ஆயிரம் ரூபாய், ஆதிதிராவிடர் காலனியில் 19 ஆயிரம் ரூபாய், புஞ்சைத்தலையூரில் 20 ஆயிரம் ரூபாய், நைனாக்கவுண்டன்வலசில் 33 ஆயிரம் ரூபாய் செலவில் குழாய் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.புஞ்சைத்தலையூர் பஞ்சாயத்து சேனாபதிபாளையம் குடியிருப்பு மற்றும் பெருமாள்பாளையத்தில் ஆழ்குழாய் அமைத்து கைப்பம்பு பொறுத்த 65 ஆயிரம் ரூபாய், கிளாங்குண்டல் பஞ்சாயத்து பெருமாள்பாளையம் குடியிருப்பில் புதிய ஆழ்குழாய் கிணறு அமைத்து கைப்பம்பு பொருத்த 65 ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

ஆனப்பாளி முதல் மார்க்கம்பட்டி வரை கப்பி சாலை 1.96 லட்சம் ரூபாய் செலவிலும், பெருமாள் பாளையத்தில் சிமென்ட் சாலை ஒரு லட்சம் ரூபாய் செலவிலும், பொன்னிவாடி பஞ்சாயத்து எழுக்காம்வலசில் சிமென்ட் சாலை ஒரு லட்சம் ரூபாய் செலவிலும், தூரம்பாடி பஞ்சாயத்து நத்தப்பாளையத்தில் இருந்து புளியம்பட்டி தட்டாங்காடு வழியாக வத்தக்காளிவலசு வரை மெட்டல் சாலை 1.31 லட்சம் ரூபாய் செலவிலும் சீரமைக்கப்பட்டுள்ளது.

காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் மூலனூர், வெள்ளகோவிலில் விடுபட்ட பகுதிக்கு 26 கோடி ரூபாய் செலவில் குடிநீர் விஸ்தரிப்பு பணி நடக்கிறது. வடுகபட்டி, கன்னிவாடி, எழுகாவலசு பள்ளிகள் மேல்நிலையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. மாவட்ட பஞ்சாயத்து நிதியில் ராமபட்டிணத்தில் மயானம், நஞ்சத்தலையூர் பள்ளியில் சத்துணவு மையம், திருப்பூர் - திண்டுக்கல்லுக்கு மூலக்கடை, பொன்னிவாடி, பள்ளபாளையம் வழியாக புதிய பஸ் வழித்தடம் உள்பட அனைத்து திட்டங்களுக்கும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.இத்தகவலை மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவரும் மூலனூர் ஒன்றிய தி.மு.., ஒன்றிய செயலாளருமான இல.பத்மநாபன் தெரிவித்தார்.

 

தேனியில் குடிநீர் இணைப்பு பெற புதிய கட்டுப்பாடு

Print PDF

தினமலர் 20.08.2010

தேனியில் குடிநீர் இணைப்பு பெற புதிய கட்டுப்பாடு

தேனி : தேனியில் குடிநீர் இணைப்பு பெறுபவர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நகராட்சி கமிஷனர் மோனி கூறியதாவது: தேனியில் சொத்துவரி செலுத்துபவர்கள், குடிநீர் இணைப்பு பெற உள்ளவர்கள், பெயர் மாற்றம் செய்பவர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட் டுள்ளது. இதற்காக விண்ணப்பம் செய்பவர்கள் பாதாள சாக் கடை பங்கீட்டு தொகை செலுத்தியிருக்கவேண் டும். பாகப்பிரிவினை, உயில், பத்திரம் என்றால் வில்லங்கசான்று இணைத்திருக்கவேண் டும். இறந்தவர் சொத்து பெயர் மாற்றம் என்றால் வாரிசு சான்று இணைத்திருக்க வேண் டும்.

குடிநீர் இணைப்புகள் இருந்தால் தவறாமல் கட்டணம் செலுத்தியிருக்க வேண்டும். குடிநீர் இணைப்பு டெபாஸிட் கூடுதல் தொகையினையும் செலுத்திருக்க வேண்டும். இந்த விதிகளை பூர்த்தி செய்பவர்களிடம் மட்டுமே சொத்துவரி வசூலிக்கப்பட்டு, குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும். பெயர் மாற்றம் செய்யப்படும் என்றார்.

 

குடிநீர் தேக்க தொட்டி திறப்பு

Print PDF

தினமலர் 20.08.2010

குடிநீர் தேக்க தொட்டி திறப்பு

சோழவந்தான்:சோழவந்தான் பேரூராட்சி 11 வது வார்டில், மின்இணைப்பு குடிநீர் தேக்கதொட்டி திறப்புவிழா நடந்தது. பேரூராட்சி நிர்வாக அதிகாரி ரா.ராஜா தலைமை வகித்தார். துணைதலைவர் அ.அண்ணாத்துரை, முன்னிலை வகித்தார். பேரூராட்சி பணியாளர்கள் சங்க மாநிலத்தலைவர் ரா.பிச்சைமுத்து வரவேற் றார். கவுன்சிலர் ராஜசேகரன் துவக்கினார். தலைவர் ரா.கலாவதி மின்குடிநீர் இணைப்பை துவக்கிவைத்தார். கவுன்சிலர்கள் கே.ஜெயராம், எஸ்.வீரமாரிபாண்டி, பா.பாலமுருகன் மற்றும் பலர் பங்கேற்றனர். முன்னாள் தலைவர் வெ. அய்யப்பன் நன்றி கூறினார்.

 


Page 180 of 390