Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

சிங்கம்புணரிக்கு காவிரி குடிநீர்த் திட்டம்: முதல்வருக்கு அமைச்சர் நன்றி

Print PDF

தினமணி 18.08.2010

சிங்கம்புணரிக்கு காவிரி குடிநீர்த் திட்டம்: முதல்வருக்கு அமைச்சர் நன்றி

திருப்பத்தூர்,ஆக. 17: சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பேரூராட்சிக்கு காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கு, முதல்வர் அனுமதித்து உத்தரவிட்டுள்ளதற்கு அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் நன்றி தெரிவித்துள்ளார்.

சிங்கம்புணரியிலும் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை ஏற்படுத்துமாறு முதல்வரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கையை பரிசீலித்த முதல்வர், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 5 கூட்டுக் குடிநீர்த் திட்டங்களில், சிங்கம்புணரி பேரூராட்சிக்கான குடிநீர்த் திட்டத்துக்கும் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.

எனவே, | 784 கோடி மதிப்பிலான இத்திட்டத்தில், தற்போது சிங்கம்புணரியும் பலனடையும். இதன்மூலம், இப்பகுதியின் நீண்ட காலக் குடிநீர் பற்றாக்குறை முழுமையாக தீரும். மேலும், திருப்பத்தூர் தொகுதியில், நெற்குப்பை திருப்பத்தூர் பேரூராட்சிக்களுக்கு கடந்த ஆண்டிலேயே காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது, சிங்கம்புணரிக்கு இத்திட்டத்துக்கு அனுமதியளித்த முதல்வருக்கு பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார் அமைச்சர்.

 

சிங்கம்புணரிக்கு காவிரி குடிநீர்

Print PDF

தினமலர் 18.08.2010

சிங்கம்புணரிக்கு காவிரி குடிநீர்

திருப்புத்தூர்:சிங்கம்புணரி பேரூராட்சியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப் படும்,'' என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: நெற்குப்பை, திருப்புத் தூர் பேரூராட்சிகளுக்கு கடந்த ஆண்டிலேயே காவிரி குடிநீர் திட்டம் செயல் படுத்தப்பட்டது. சிங்கம்புணரிக்கும் காவிரி குடிநீர் வழங்குமாறு, மக்கள் கோரிக்கை விடுத்தனர். தற்போது, முதல்வர் அறிவித்துள்ள ஐந்து கூட்டு குடிநீர் திட்டங்களில், சிங்கம்புணரி பேரூராட்சியும் சேர்க்கப்பட்டுள் ளது. 784 கோடி ரூபாயில், இத்திட்டம் செயல்படுத்தப்படும்.இதன் மூலம் நீண்ட கால பிரச்னை நீங்கும். இத்திட்டத்திற்குஅனுமதி அளித்த முதல்வருக்கு, நன்றி என்றார்.

 

நிர்ணயிக்கப்பட்ட குடிநீர் வழங்க வலியுறுத்தல்

Print PDF

தினமலர் 18.08.2010

நிர்ணயிக்கப்பட்ட குடிநீர் வழங்க வலியுறுத்தல்

விருதுநகர்:நகராட்சி கவுன்சிலர் எஸ். பாலகிருஷ்ணசாமி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக இயக்குனரிடம் கொடுத்த மனு:தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் தொடங்கியதிலிருந்து விருதுநகருக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட 42.57 லட்சம் லிட்டர் தண்ணீர் ஒரு முறை கூட இதுவரை வழங்கவில்லை. விருதுநகருக்கு குடிநீர் வழங்கி வந்த ஆனைக் குட்டம் நீர் தேக்கத்திலிருந்து மிக குறைந்த அளவு தண்ணீரே தற்போது கிடைத்து வருகிறது.

மழையில்லாமல் விருதுநகர் நகர் பகுதியில் பல இடங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால் குடிநீர் அல்லாத தேவைக்கு பயன்படும் தண்ணீரும் பற்றாக்குறையாக உள்ளது.எனவே விருதுநகருக்கு தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் நிர்ணயிக்கப் பட்ட குடிநீரை வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் பத்து ஆண்டுகள் கழித்து வழங்க நிர்ணயிக்கப்பட்ட 49.50 லட்சம் லிட்டர் குடிநீர் இப்போது கிடைப்பதற்குண்டான வழிவகை செய்யவேண்டும். வல்லநாடு நீர் படுகையில் கூடுதல் கிணறுகள் அமைத்து கூடுதல் தண்ணீர் பம்பிங் செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கோரியுள்ளார்.

 


Page 183 of 390