Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

சங்கராபுரத்தில் குடிநீர் தொட்டி எம்எல்ஏ திறந்து வைத்தார்

Print PDF

தினகரன் 16.08.2010

சங்கராபுரத்தில் குடிநீர் தொட்டி எம்எல்ஏ திறந்து வைத்தார்

சங்கராபுரம், ஆக. 16: சங்கராபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 8 வார்டுகளில் தலா ரூ.ஒரு லட்சம் வீதம் 8 மினி தொட்டி அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடந்தது.

பேரூராட்சி மன்ற தலைவர் முனுசாமி தலைமை தாங்கினார். திமுக நகர அவைத் தலைவர் குமார் வரவேற்றார்.

செயல் அலுவலர் பழனி, திமுக ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், வீராசாமி, நெடுஞ்செழியன், முனுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அங்கையற்கண்ணி எம்எல்ஏ கலந்து கொண்டு குடிநீர் தொட்டிகளை திறந்து வைத்தார். சாகுல் அமீது, வார்டு கவுன்சிலர்கள் ஜான்சன், உமா மகேஸ்வரி, ராஜம், தஸ்கீர், தமிழ்ச்செல்வி, சுப்பிரமணி, நாராயணன், சேகர் மற்றும் தயாளன், கோவிந்தன், ஜல்லிமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

சிதம்பரம் மேற்கு பகுதிக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆட்சியரிடம் நகராட்சி துணை தலைவர் மனு

Print PDF

தினகரன் 16.08.2010

சிதம்பரம் மேற்கு பகுதிக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆட்சியரிடம் நகராட்சி துணை தலைவர் மனு

அண்ணாமலைநகர், ஆக. 16: சிதம்பரம் நகருக்கு நேற்று வந்த மாவட்ட ஆட்சியரை, நகராட்சி துணைத் தலைவர் மங்கையர்க்கரசி சந்தித்து அளித்த மனு:

சிதம்பரத்தை அழகு படுத்த தாங்கள் எடுத்துவரும் அனைத்து முயற்சிகளுக்கும், நகரின் குடிநீர் பற்றாக்குறை போக்குகிற வகையில் வக்காரமாரியில் இரண்டு புதிய போர்கள் அமைத்திட ரூ.18 லட்சத்தை ஒதுக்கீடு செய்தமைக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சிதம்பரம் கிழக்கு பகுதியில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு இருவேளையும் மக்களுக்கு வழங்கப்படுகிறது. மேற்கு பகுதியில் வக்காரமாரியில் இருந்து மேலவீதி நீர்தேக்க தொட்டிக்கு தண்ணீர் பெறப்பட்டு ஒரு வேளை மட்டும் அதுவும் குறைந்த நேர அளவில் குடிநீர் வழங்கப்படுகிறது.

இதனால் 20 வார்டு மக்கள் பெரிதும் பாதிக்கின்றார்கள். இதை கருத்தில் கொண்டு, கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட தண்ணீரை மேலவீதி குடிநீர் தேக்க தொட்டியில் சேருகிற வகையில் போல்நாராயணன் தெரு, மாலைக்கட்டி தெரு, வெல்லபிறந்தான் தெரு வழியாக வீரபத்திர சாமி கோயில் தெரு குடிநீர் வால்வில் இணைக்கிற புதிய பைப் லைன் அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதற்கு உத்தேச மதிப்பீடு ரூ.20 லட்சம் ஆகும் என தெரியவருகிறது.

இதனை அமைத்து கொடுத்தால் சிதம்பரம் மேற்கு பகுதியை சேர்ந்த 20 வார்டு பொதுமக்கள் பயன்அடைவார்கள். இதற்கு நிதி ஒதுக்கீடு அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

 

கிருஷ்ணகிரி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் எம்.எல்.ஏ. ஆய்வு

Print PDF

தினகரன் 13.08.2010

கிருஷ்ணகிரி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் எம்.எல்.. ஆய்வு

கிருஷ்ணகிரி, ஆக.13: கிருஷ்ணகிரி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள மின்மோட்டார்கள் பழுதடைந்தால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து எம்.எல்.. மற்றும் நகர்மன்ற தலைவர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

கிருஷ்ணகிரி நகருக்கு தென்பெண்ணை ஆற்றுப்படுகையில் சுண்டேகுப்பம் என்னுமிடத்தில் இருந்து தண்ணீர் நீரேற்றம் செய்யப்படுகிறது. இங்கிருந்து ராட்சத குழாய்கள் மூலம் கிருஷ்ணகிரி பவர்ஹவுஸ் காலனி பகுதியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு வரப்படுகிறது. பின்னர் அங்க அந்த நீரை நவீன முறையில் சுத்திகரித்து நகராட்சி பகுதியில் பழையபேட்டை, சந்தைப்பேட்டை, லண்டன்பேட்டை, வருவாய் கோட்டாட்சியர் வளாகம் ஆகிய இடங்களில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு மின்மோட்டார் மூலம் பம்ப் செய்யப்பட்டு அனுப்பப்படுகிறது.

பின்னர் அங்கிருந்து நகராட்சியில் உள்ள 33 வார்டுகளுக்கு குடிநீர் குழாய் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த வாரம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள மின் மோட்டார்கள் மற்றும் பேனல் போர்டுகள் திடீரென பழுதடைந்தது. இதனால் நகராட்சி பகுதியில் உள்ள சில வார்டுகளில் வழக்கம் போல் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. அதற்கு மாற்று ஏற்பாடாக நகராட்சி நிர்வாகம் அந்த பகுதிகளுக்கு லாரி மற்றும் டிராக்டர்கள் மூலம் குடிநீரை விநியோகம் செய்தனர்.

இதையடுத்து கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் செங்குட்டுவன், நகர்மன்ற தலைவர் பரிதாநவாப் ஆகியோர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ராஜேந்திரனிடம் மின்மோட்டார் மற்றும் பேனல் போர்டு பழுதடைந்ததற்கான காரணத்தை கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர் உயர் மின் அழுத்தத்தால் தான் இந்த பழுது ஏற்பட்டதாக விளக்கமளித்தார். இதையடுத்து பழுதடைந்த மின்மோட்டாரை சரிசெய்யும் வரை ஜெனரேட்டர் கொண்டு குடிநீரை சுத்திகரிப்பு செய்து சீராக குடிநீரை விநியோகம் செய்யும்படி அறிவுரை வழங்கினார். அத்துடன் பொதுமக்களின் அவசிய தேவையினை கருத்தில் கொண்டு குடிநீர் விநியோகம் செய்ய மாற்று ஏற்பாடுகளை உடனடியாக செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வின் போது நகர தி.மு.. செயலாளர் நவாப், நகர்மன்ற உறுப்பினர்கள் கடலரசு மூர்த்தி, அரங்கண்ணல், ஜாவீத் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

 


Page 185 of 390