Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

தனி குடிநீர் திட்டம் தொடங்கியது

Print PDF

தினமணி 12.08.2010

தனி குடிநீர் திட்டம் தொடங்கியது

மேட்டூர், ஆக. 11: சேலம் மாநகராட்சி மக்களுக்கான தனி குடிநீர் திட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.

÷சேலம் மாநகராட்சி மக்களுக்கென்று மேட்டூரில் இருந்து தண்ணீர் விநியோகம் செய்யும் தனி குடிநீர் திட்டம் ரூ.283 கோடி செலவில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த நிலையில் இந்தத் திட்டத்தின் தொடக்க விழா மேட்டூர் அருகேயுள்ள தொட்டில்பட்டியில் நடைபெற்றது.

÷வேளாண்மைத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கலந்து கொண்டு தனி குடிநீர் திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியர் சந்திரகுமார், முன்னாள் எம்.எல்.ஏ. கோபால், பி.என்.பட்டி பேரூராட்சித் தலைவர் மயில்சாமி, மேட்டூர் நகராட்சித் தலைவர் சாந்தி, துணைத் தலைவர் காசி விஸ்வநாதன், கோட்டாட்சியர் வேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

கோவை உள்பட 6 மாவட்டங்களில் ஸீ 1711 கோடி செலவில் கூட்டு குடிநீர் திட்டங்கள்

Print PDF

தினகரன் 12.08.2010

கோவை உள்பட 6 மாவட்டங்களில் ஸீ 1711 கோடி செலவில் கூட்டு குடிநீர் திட்டங்கள்

சென்னை, ஆக.12: கோவை, மதுரை உள்பட 6 மாவட்டங்களில் ஸீ1711 கோடியே 62 லட்சம் செலவில் கூட்டு குடிநீர் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு முதல்வர் கருணாநிதி ஒப்புதல் அளித்துள்ளார்.

மதுரை, கோவை, நாகை, விருதுநகர், சிவகங்கை, திருப்பூர் ஆகிய 6 மாவட்டங்களில் குடிநீர் வசதிகளை மேம்படுத்த 5 கூட்டு குடிநீர் திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது. இத்திட்டங்களுக்கு முதல்வர் கருணாநிதி, நேற்று நிர்வாக ஒப்புதல் அளித்தார்.

இதன்படி, நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம், செம்பனார்கோயில், மயிலாடுதுறை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 295 குடியிருப்புகள், 315 வழியோர குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம் ஸீ105.70

கோடியில் நிறைவேற்றப்படும். விருதுநகர் மாவட்டத்தின் 7 பேரூராட்சிகள், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, சிவகாசி ஆகிய ஒன்றியங்களில் உள்ள 395 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம்

ஸீ173 கோடியில் நிறைவேற்றப்படும். அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி, விருதுநகர் ஒன்றியங்களின் 637 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம்

ஸீ190 கோடியில் நிறைவேற்றப்படும். சாத்தூர், வெம்பக்கோட்டை, சிவகாசி, விருதுநகர், வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை ஒன்றியங்களைச் சேர்ந்த 755 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம்

ஸீ234 கோடியில் நிறைவேற்றப்படும். மதுரை மாவட்டம் மேலூர், அவனியாபுரம், திருமங்கலம் நகராட்சிகள், .வெள்ளாளபட்டி, விளாங்குடி, பரவை, திருநகர், அலங்காநல்லூர், பாலமேடு பேரூராட்சிகள் மற்றும் 8 ஊராட்சி ஒன்றியங் களைச் சேர்ந்த 1430 குடியிருப்புகள், சிவங்கை மாவட்டம் சிங்கம்புணரி பேரூராட்சிக்கான கூட்டு குடிநீர் திட்டம் ஸீ784 கோடியில் நிறைவேற்றப்படும்.

கோவை, திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சி, 23 பேரூராட்சிகள், 8 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 965 ஊரக குடியிருப்புகளுக்கான குடிநீர் மேம்பாட்டு திட்டம் ஸீ224 கோடியே 92 லட்சத்தில் நிறைவேற்றப்படும். இந்த தகவல், தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ரூ.1,711 கோடி செலவில் கூட்டுக் குடிநீர் திட்டங்கள்: முதல்வர் ஒப்புதல்

Print PDF

தினமலர் 12.08.2010

ரூ.1,711 கோடி செலவில் கூட்டுக் குடிநீர் திட்டங்கள்: முதல்வர் ஒப்புதல்

சென்னை : மதுரை, கோவை, நாகை, விருதுநகர், சிவகங்கை, திருப்பூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் 1,711 கோடியே 62 லட்சம் ரூபாய் செலவிலான கூட்டுக் குடிநீர் திட்டங்களை நிறைவேற்ற முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசின் செய்திக்குறிப்பு: நாகை மாவட்டம், சீர்காழி, கொள்ளிடம், செம்பனார் கோவில், மயிலாடுதுறை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள, 295 குடியிருப்புகள் மற்றும், 315 வழியோரக் குடியிருப்புகளுக்கான 105 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கும், விருதுநகர் மாவட்டத்தில் ஏழு பேரூராட்சிகள், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, சிவகாசி ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த, 395 ஊரகக் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டங்களை, 173 கோடி ரூபாய் மதிப்பில் நிறறைவேற்றவும் முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார். மொத்தம் ஐந்து கூட்டுக் குடிநீர் திட்டங்கள், ஒரு குடிநீர் மேம்பாட்டுத் திட்டத்திற்கு, 1,711 கோடியே 62 லட்சம் ரூபாய் செலவில் நிறைவேற்ற, இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

 


Page 187 of 390