Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

6 மாவட்டங்களில் 1712 கோடியில் கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள்: முதல்வர் உத்தரவு

Print PDF

தினமணி 11.08.2010

6 மாவட்டங்களில் 1712 கோடியில் கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள்: முதல்வர் உத்தரவு

சென்னை, ஆக.11: மதுரை, கோவை, நாகை, விருதுநகர், சிவகங்கை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் குடிநீர் வசதிகளை மேம்படுத்துவதற்காக 5 கூட்டுக் குடிநீர்த் திட்டங்களையும் ஒரு குடிநீர் மேம்பாட்டுத் திட்டத்தையும் நிறைவேற்ற முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

105 கோடியே 70 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி, கொள்ளிடம், செம்பனார் கோயில், மயிலாடுதுறை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 295 குடியிருப்புகள் மற்றும் 315 வழியோரக் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம், 173 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விருதுநகர் மாவட்டத்திலுள்ள 7 பேரூராட்சிகள் மற்றும் இராசபாளையம், திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, சிவகாசி ஆகிய ஒன்றியங்களைச் சார்ந்த 395 ஊரகக் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம், 190 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, காரியாப்பட்டி, திருச்சுழி, நரிக்குடி, விருதுநகர் ஆகிய ஒன்றியங்களைச் சார்ந்த 637 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம்,

234 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விருதுநகர் மாவட்டம், சாத்தூர், வெம்பக் கோட்டை, சிவகாசி, விருதுநகர், வத்திராயிருப்பு, திருவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை ஆகிய ஒன்றியங்களைச் சார்ந்த 755 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம், 784 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதுரை மாவட்டம், மேலூர், அவனியாபுரம், திருமங்கலம் நகராட்சிகள், அ.வெள்ளாளப்பட்டி, விளாங்குடி, பரவை, திருநகர், அலங்காநல்லூர், பாலமேடு பேரூராட்சிகள் மற்றும் 8 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 1430 குடியிருப்புகள் மற்றும் சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிங்கம்புணரி பேரூராட்சிக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம், 224 கோடியே 92 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டம், பல்லடம் நகராட்சி, 23 பேரூராட்சிகள் மற்றும் 8 ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 965 ஊரகக் குடியிருப்புகளுக்கான குடிநீர் மேம்பாட்டுத் திட்டம் என 5 கூட்டுக் குடிநீர்த் திட்டங்களையும், ஒரு குடிநீர் மேம்பாட்டுத் திட்டத்தையும், மொத்தம் 1711 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்ற முதல்வர் நிர்வாக ஒப்புதல் அளித்துள்ளார். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

குடிநீர் திட்டத்தை ஜெனரேட்டர் மூலம் செயல்படுத்த முடிவு

Print PDF

தினமலர் 11.08.2010

குடிநீர் திட்டத்தை ஜெனரேட்டர் மூலம் செயல்படுத்த முடிவு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சி குடிநீர் திட்டத்தில் பம்பிங் ஹவுசில் 95 லட்சம் ரூபாயிலும், பூஸ்டர் ஹவுசில் ரூ.40 லட்சம் ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்த தீவிர முயற்சி நடக்கிறது.

பொள்ளாச்சி நகராட்சிக்கு அம்பராம்பாளையத்தில் ஆழியாறு ஆற்றில் இருந்து இரண்டு குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. முதல் குடிநீர் திட்டத்தில் தினமும் 12 லட்சம் லிட்டர் குடிநீரும், இரண்டாவது குடிநீர் திட்டத்தில் விநாடிக்கு ஆறாயிரம் லிட்டர் குடிநீரும் பம்பிங் செய்யப்படுகின்றன. பம்பிங் ஹவுசில் நான்கு மணி நேரம் ஓய்வு கொடுக்கப்பட்டு தினமும் 20 மணி நேரம் குடிநீர் வெளியேற்றப்படுகிறது.அம்பராம்பாளையத்தில் இருந்து பொள்ளாச்சிக்கு கொண்டு வரப்படும் தண்ணீர் மார்க்கெட் ரோட்டில் உள்ள பூஸ்டர் ஹவுசில் இருந்து மேல்நிலைத்தொட்டிகளுக்கு பம்பிங் செய்ய படுகிறது. முதல் குடிநீர் திட்டத்தில் நீரேற்று நிலையத்தில் இருந்து பிரத்யேக குடிநீர் குழாய் மூலம் வெங்கடேசா காலனியில் உள்ள தலா மூன்று லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட இரண்டு தரைமட்ட தொட்டிகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.

நகராட்சி இரண்டாவது குடிநீர் திட்டத்தில் வெங்கடேசாகாலனி, மகாலிங்கபுரம், சுதர்சன் நகர், கந்தசாமிபூங்கா, ஜோதிநகர் ஆகிய ஐந்து பகுதியிலுள்ள மேல்நிலைத்தொட்டிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து 36 வார்டுகளுக்கும் சப்ளை செய்யப்படுகிறது. நகரப்பகுதிகளின் லே-அவுட்கள் மற்றும் குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய மூன்றாவது குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில், வி.கே.வி., லே-அவுட், டி.கோட்டாம்பட்டி கே.ஆர்.ஜி.பி., நகர், சோமசுந்தராபுரம் ஆகிய இடங்களில் மேல்நிலைத்தொட்டி கட்டப்பட்டு அதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

கரப்பகுதி மக்களுக்கு தேவையான அளவுக்கு ஆழியாறு ஆற்றில் இருந்து குடிநீர் பம்பிங் செய்யப்பட்டாலும், மின்தடை மற்றும் இயற்கை காரணங்களால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுகிறது. அம்பராம்பாளையம் பம்பிங் ஹவுசில் அடிக்கடி மின் தடை ஏற்படும் போது, குடிநீர் உறிஞ்சுதல், சுத்திகரிப்பு செய்தல் போன்ற பணிகள் பாதிக்கப்படுகின்றன.பொள்ளாச்சி மார்க்கெட் ரோடு பூஸ்டர் ஹவுசில் மின்தடை ஏற்படும்போது, மேல்நிலைத்தொட்டிகளுக்கு குடிநீர் பகிர்ந்தளிப்பதும் தடைபடுகிறது. இந்த இரண்டு பகுதிகளில் எந்த இடத்தில் மின்தடை ஏற்பட்டாலும் நகராட்சியின் ஒட்டுமொத்த குடிநீர் சப்ளையும் பாதிக்கிறது. இந்த பிரச்னையை சமாளிக்க நகராட்சி பம்பிங்ஹவுஸ் மற்றும் பூஸ்டர் ஹவுசில் ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.அம்பராம்பாளையம் பம்பிங் ஹவுசில் 95 லட்சம் ரூபாய் செலவில் 725 கே.வி.., ஜெனரேட்டர் பொருத்துவதற்கு, மார்க்கெட் ரோடு பூஸ்டர் ஹவுசிலுள்ள 180 கே.வி.., ஜெனரேட்டரை 400 கே.வி.., என்ற அளவுக்கு திறனை அதிகரிக்க 40 லட்சம் ரூபாயிலும் வாங்குவதற்கு நகராட்சி கவுன்சில் அனுமதி பெறப்பட்டது.

நகராட்சி கமிஷனர் வரதராஜ் கூறுகையில், ""நகராட்சி கவுன்சில் அனுமதி பெறப்பட்டு, புதிய ஜெனரேட்டர் வாங்குவதற்கு சென்னை நகராட்சி நிர்வாக ஆணையரின் ஒப்புதலுக்காக கோப்புகள் அனுப்பப் பட்டுள்ளன. அரசு அனுமதி பெறப் பட் டதும், டெண்டர் விடப்பட்டு ஜெனரேட்டர் வாங்க திட்டமிடப்பட்டுள் ளது. ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்தப் பட்டாதல், நகராட்சி குடிநீர் திட்டத் தின் மூலம் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யப்படும்'' என்றார்.

ஸ்கேடா சிஸ்டம்! பொள்ளாச்சி நகராட்சியில் குடிநீர் திட்டங்களை கண்காணிக்க முழுமையாக கம்ப்யூட் டர் மயமாக்கப்பட்ட "ஸ்கேடா சிஸ் டம்' கொண்டு வருவதற்கு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். தலைமை நீரேற்று நிலையத்திலோ, நகராட்சி அலுவலகத்திலோ இருந்து கொண்டு இந்த சிஸ்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம், மேல்நிலைத்தொட்டியிலுள்ள குடிநீரின் நிலவரம், குடிநீர் குழாயில் ஏற்படும் பழுதுகளை கண்டுபிடிக்க முடியும்.குடிநீர் வினியோகம் எளிமையாக் கப்பட்டு, குறைபாடுகளை நிவர்த்தி செய்ய "ஸ்கேடா சிஸ்டத்தை' அமல்படுத்த அதிகாரிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மதிப்பீடு அரசின் அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

 

உளுந்தூர்பேட்டையில் இன்று குடிநீர் தொட்டி திறப்பு

Print PDF

தினமணி 10.08.2010

உளுந்தூர்பேட்டையில் இன்று குடிநீர் தொட்டி திறப்பு

உளுந்தூர்பேட்டை, ஆக. 9: உளுந்தூர்பேட்டை பேரூராட்சியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கிறார்.

உளுந்தூர்பேட்டையில் பேரூராட்சி மன்ற வளாகம் மற்றும் அன்னை தெரசா நகரில் ரூ.2.23 கோடி மதிப்பீட்டில் தலா ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

÷இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை அமைச்சர் க.பொன்முடி திறந்துவைத்து சிறப்புரையாற்றுகிறார்.

÷விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் இரா.பழனிச்சாமி தலைமை வகிக்கிறார். விழா ஏற்பாடுகளை பேரூராட்சி மன்றத் தலைவர் வெ.இராதாகிருஷ்ணன், செயல் அலுவலர் இந்திரா மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

 


Page 189 of 390