Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

தட்டுப்பாட்டால் குடிநீர் வினியோக முறை மாற்றம்

Print PDF

தினகரன் 06.08.2010

தட்டுப்பாட்டால் குடிநீர் வினியோக முறை மாற்றம்

குன்னூர், ஆக.6: குன்னூர் நகரில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான முக்கிய குடிநீர் ஆதாரமாக இருப்பது ரேலியா அணையாகும். இதன் உயரம் 43.6 அடி. தற்போது இதில் 35.10 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. ரேலியா அணைக்கு முழுமையாக நீர் வராததே இதற்கு காரணமாகும்.

நீர் ஊற்று பகுதிகளில் சேறும், சகதியும் அதிகளவில் இருப்பதால் தண்ணீர் ஆங்காங்கே தேங்கி நிற்பது, மாற்று பாதையில் செல்வது போன்றவற்றால் நீர் வீணாகி வருகிறது. நீண்ட நாட்களாகவே தூர் வராப்படாமல் இருப்பதால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், தென் மேற்கு பருவ மழை போதிய அளவு பெய்யாததாலும், சூறாவளியாலும் அணைகளில் நீர் வற்ற துவங்கியுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன் இந்த அணையின் நீர்மட்டம் முழுமையாக காணப்பட்டது. ஆனால், இந்த மாத துவக்கத்திலேயே அணையின் நீர்மட்டம் குறைய துவங்கி இருப்பதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து குன்னூர் நகராட்சி தலைவர் ராமசாமி கூறும் போது, மழை குறைவு காரணமாக ரேலியா அணையின் நீர்வரத்து குறைந்து வருகிறது. ஏற்கனவே குன்னூர் நகரில் 2 அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகிக்கப்பட்டது. ஆனால் தற்போது 4 அல்லது 5 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மழையின்மை நீடித்தால் குடிநீர் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் என்றார்.

 

அரசு மணல் குவாரியால் பாதிக்கப்படும் குடிநீர்த் திட்டங்கள்

Print PDF

தினமணி 05.08.2010

அரசு மணல் குவாரியால் பாதிக்கப்படும் குடிநீர்த் திட்டங்கள்


வைகை ஆற்றில் மணல் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள தேனி குடிநீர்த் திட்ட பிரதானக் குழாய்.

தேனி: தேனி மாவட்டத்தில் அரசு மணல் குவாரியில் வைகை ஆற்றில் நீர்வரத்து இருக்கும் இடங்களில், அத்துமீறி மணல் அள்ளப்படுவதால், குடிநீர்த் திட்டங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

விதிமுறைகளை மீறி ஜேசிபி இயந்திரம் மூலம், ஆற்றில் ஆழமாகச் சுரண்டப்படும் மணல், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பதுக்கப்பட்டு கேரளத்துக்கு கடத்தப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் பகுதி வைகை ஆற்று படுகையில் அமைக்கப்பட்டிருந்த அரசு மணல் குவாரியை தடை செய்து, நீதிமன்றம் ஏற்கெனவே ஆணை பிறப்பித்துள்ளது. இந்நிலையில், வைகை அணையை ஓட்டியுள்ள வடவீரநாயக்கன்பட்டி பகுதியில் தற்போது மணல் குவாரி அமைக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி மாவட்ட கனிம வளத்துறை மூலம் உரிமம் பெற்று பின்னத்தேவன்பட்டி, சொக்கத்தேவன்பட்டி பகுதியில் ஆற்றில் மணல் அள்ளப்பட்டு வருகிறது.

அரசு மணல் குவாரி செயல்பட்டுவரும் பகுதிக்கு அருகே ஒரு கி.மீ., தூரத்தில் குன்னூர், அரப்படித்தேவன்பட்டி பகுதி வைகை ஆற்றில் தேனி நகராட்சி, ஆண்டிபட்டி ஆகிய பகுதிகளுக்கான குடிநீர்த் திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த குடிநீர்த் திட்டங்களுக்காக ஆற்றில் உறைகிணறுகள் மற்றும் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள குடிநீர் திட்ட பிரதான குழாய்கள் உறுதியான அடித்தள கட்டமைப்பு இல்லாமல், மணல் படுகைக்கு மேல்புறம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் போதும், மணல் அரிப்பினாலும் பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்கு, தாற்காலிக நடவடிக்கையாக நகராட்சி நிர்வாகம் சார்பில் குழாய்களை ஒட்டி மணல் மூடைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. தற்போது ஆற்றில் இருந்து அணைக்கு நீர் வரத்து உள்ள நிலையில், குவாரிகளில், விதிமுறைகளை மீறி ஜேசிபி இயந்திரத்தைப் பயன்படுத்தி, ஆற்றில் மணல் அள்ளி கரையில் குவிக்கப்படுகிறது. நீர்வரத்து உள்ள இடங்கள் பல மீட்டர் ஆழத்திற்கு பள்ளமாக்கப்படுவதால், இதன் மேல்புறம் குடிநீர்த் திட்டங்கள் அமைந்துள்ள பகுதியில் பெருமளவில் மணல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் உறைகிணறுகள் சரிந்து விழும் நிலையில் உள்ளன.

குன்னூர் வைகை ஆற்றின் குறுக்கே தேனி நகராட்சி பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்லப்படும் பிரதான குழாயில் தண்ணீர் பம்பிங் செய்யப்படும்போது, மணல் அரிப்பால் அடித்தள பிடிமானமின்றி நீர் அழுத்தம் தாங்காமல் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், பிரதானக் குழாய் முழுமையாக மண்ணில் மூழ்கி பராமரிக்க முடியாமல் வீணாகும் நிலை உள்ளது. அரசு மணல் குவாரியில் அத்துமீறல்: பலவித நிபந்தனைகளின் அடிப்படையில் மணல் குவாரி அமைக்க அரசு அனுமதி வழங்குகிறது. குவாரியில் மணல் அள்ளும் உரிமம் பெற்றோர், ஜே.சி.பி. இயந்திரத்தைப் பயன்படுத்தி, ஆற்றில் நீர்வரத்து இருக்கும் பகுதியில் மணலை அள்ளி கரையில் மலைபோலக் குவிக்கின்றனர்.

கனிம வளம் மற்றும் வருவாய்த் துறையினர், இந்த மணல் குவியலை அளவீடு செய்து முறையாகப் பதிவு செய்வதில்லையாம். இதுபற்றி பொதுப்பணித்துறை பெரியாறு நீர்வடிக் கோட்ட நிர்வாகப் பொறியாளர் விஜயகுமார் கூறுகையில், அரசு மணல் குவாரியில் விதிமீறல்கள் நடந்துவருவது குறித்து நேரில் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மணல் குவாரியால் குடிநீர்த் திட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படுவது குறித்து, மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குநர் ரமேஷிடம் கேட்டதற்கு, குவாரியை நேரில் பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பதாக அதே பதிலை தெரிவிக்கிறார். இந்நிலையில், மாவட்டத்தின் கனிம வளம், நிலத்தடி நீர்மட்டம், குடிநீர் ஆதாரங்களைப் பாதுகாக்க அனுமதியில்லாத இடங்களில் ஆற்றில் மணல் திருட்டு நடப்பதைத் தடுக்கவும், அரசு மணல் குவாரி முறைகேடுகளைத் தடுக்கவும் மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

தொடர் கன மழையால் மேலும் ஒரு ஏரி நிரம்பியது

Print PDF

தினகரன் 05.08.2010

தொடர் கன மழையால் மேலும் ஒரு ஏரி நிரம்பியது

மும்பை, ஆக. 5: கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையால் மும்பைக்கு குடிநீர் சப்ளை செய்யும் மேலும் ஒரு ஏரி நேற்று நிரம்பி வழிந்தது. மற்ற ஏரிகளில் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. ஜூலை 21ம் தேதி 6 ஏரிகளில் மொத்தம் 2,91,183 மில்லியன் லிட்டர் நீர் இருந்தது. இது தற்போது 9,00,718 மில்லியன் லிட்ட ராக அதிகரித்துள்ளது. 13 நாட்களில் 6,09,535 மில்லியன் லிட்டர் நீர் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 6 ஏரிகளி லும் மொத்தம் 7,22,781 மில்லியன் லிட்டர் நீர் இருந்தது.

மும்பை மாநகராட்சி யிடம் உள்ள தகவலின்படி, மொடக் சாகர் ஏரியில் 90.40 மி.மீ அளவு மழை பெய்துள்ளது. தான்சாவில் 42.40, விஹார் ஏரியில் 37.80, துள்சியில் 57, அப்பர் வைதர்னாவில் 91 மற்றும் பாட்சாவில் 62 மி.மீ அளவு மழை பெய்துள்ளது. கடந்த மாதம் 27ம் தேதி முதல், துள்சி மற்றும் மொடக் சாகர் ஏரிகள் நிரம்பி வழிகின்றன. தான்சா ஏரி நேற்று நிரம்பி வழிந்தது. விஹார் நிரம்பி வழிய இன் னும் 1.5 மீட்டரே பாக்கி உள்ளது. அப்பர் வைதர்னா வில் 3.5 மீட்ட ரும் பாட்சா வில் 10 மீட்ட ரும் பாக்கி இருக்கின்றன.

 


Page 192 of 390