Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

குறைகிறது செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம்

Print PDF

தினமலர் 05.08.2010

குறைகிறது செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம்

செம்பரம்பாக்கம் : பூண்டி ஏரியில் இருந்து திறந்து விடப்படும் கிருஷ்ணா நீர் நிறுத்தப்பட்டதால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் குறைகிறது. இருப்பினும், அடுத்து வருவது மழைக்காலம் என்பதால், குடிநீர் வினியோகத் தில் சிக்கல் ஏற்படாது என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுள் ஒன்று செம்பரம்பாக்கம். ஏரி, 3,645 மில்லியன் கனஅடி கொள்ளளவும், 24 அடி நீர்மட்டமும் கொண்டது. கடந்த கோடையில் 7 அடி என்ற அளவில் ஏரியின் நீர்மட்டம் கடுமையாக குறைந்தது. பின், கிருஷ்ணா நீர், பூண்டி ஏரியில் இருந்து கால்வாய் வழியாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு திறந்து விடப்பட்டது.

கிருஷ்ணா நீர் வருகை மற்றும் கோடை மழையால், செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம், ஜூன் மாதம் கிடுகிடுவென உயர்ந்தது. தற்போது கிருஷ்ணா நீர் நிறுத்தப்பட்டுள்ளதாலும், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கும், விவசாயத்திற்கும் முழு அளவில் தண்ணீர் எடுக்கப்படுவதாலும், தற்போது ஏரியின் நீர்மட்டம் கணிசமாக குறைந்து வருகிறது. நேற்று மாலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 15.47 அடியும், கொள்ளளவு 1,619 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. பொதுப்பணித் துறை அதிகாரி களை கேட்டபோது, "ஆந்திரா வில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்துவிடப்பட்ட கிருஷ்ணா நீர் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கும் நீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது செம்பரம்பாக்கம் ஏரி நீர் இருப்பு திருப்திகரமாக உள்ளது. அடுத்து வருவது மழைக்காலம் என்பதால், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, சென்னை நகருக்கு குடிநீர் வினியோகம் செய்வதில் எந்த சிக்கலும் இருக்காது' என்றனர்.

 

தமிழகத்தில் 972 இடங்களில் ரசாயனம் கலந்த குடிநீர்

Print PDF

தினமணி 04.08.2010

தமிழகத்தில் 972 இடங்களில் ரசாயனம் கலந்த குடிநீர்

புது தில்லி, ஆக.3: தமிழகத்தில் 972 இடங்கள் உள்பட நாடு முழுவதும் 1.44 லட்சம் இடங்களில் குடிநீரில் ரசாயன கலப்பு இருப்பதாக மாநிலங்களவையில் மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் அகதா சங்மா கூறினார்.

மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை அவர் கூறியதாவது:

நாடு முழுவதும் நிலத்தடி நீர் மூலம் குடிநீர் பெறும் இடங்கசச்ல் 1.44 லட்சம் இடங்களில் ஆர்சனிக், புளோரைடு, இரும்பு, நைட்ரேட் மற்றும் உப்புத்தன்மையால் நீர் மாசுபட்டுள்ளது.

தமிழகத்தில் புளோரைடு கலந்துள்ளதால் 20 இடங்களும், இரும்புத்தன்மையால் 669 இடங்களும், உப்புத்தன்மையால் 278 இடங்களும், நைட்ரேட் கலப்பால் 5 இடங்களும் என மொத்தம் 972 இடங்களில் குடிநீரில் ரசாயன கலப்பு உள்ளது என்றார் அவர்.

 

வால்பாறையின் நீராதாரமான அக்காமலை தடுப்பணை நிரம்பி வழிகிறது குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை

Print PDF

தினகரன் 04.08.2010

வால்பாறையின் நீராதாரமான அக்காமலை தடுப்பணை நிரம்பி வழிகிறது குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை

வால்பாறை,ஆக.4:வால்பாறையின் குடிநீர் ஆதாரமான அக்காமலை தடுப்பு அணை நிரம்பி வழிகிறது. இதனால் புதிய குடிநீர் இணைப்பு வழங்க நகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

வால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. பிஏபி திட்டத்தின் முக்கிய அணையான சோலை யார் அணையின் நீர்மட்டம் 120 அடியை தாண்டியது. மற்ற அணைகளிலும் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. வால்பாறை நகருக்கு அக்காமலையில் உள்ள தடுப்பணை முக்கிய நீராதாரமாக விளங்குகிறது. இந்த புல்மலை பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக இருப்பதாலும், நிலத்தடி நீர் வற்றாத பூமியாக இருப்பதாலும் வால்பாறைக்கு 365 நாளும் குடிநீர் கிடைப்பதில் சிக்கல் இருந்ததில்லை.வால்பாறைக்கு தற்போது இரண்டாம் குடிநீர் திட்டம் சுமார் ரூ.2.34 கோடியில் நிறைவேற்றப் பட்டுள்ளது. அக்காமலை தடுப்பணையில் இருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய இரும்பு குழாய் பதிக்கப்பட்டு புவிஈர்ப்பு சக்தி முலம் வால்பாறைக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. போதிய நீராதாரம் இருப்பதால் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய குடிநீர் இணைப்பு கொடுக்க நகரா ட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து நகரா ட்சி அதிகாரிகள் கூறுகையில், ரூ.10 செலுத்தி விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன், சொத்துவரி ரசீது உள்ளிட்ட உரிய ஆவணங் களை வை த்து ரூ 100 செலுத்தி பதிவு செய்து கொ ள்ள வேண்டும். பதிவு செய்த தேதியில் இருந்து பதிவு மூப்பு எடுத்துக்கொள்ளப்படும். வீட்டு இணைப்புகளுக்கு ரூ.5 ஆயி ரம், பிற இணைப்புகளுக்கு ரூ.10 ஆயிரம் டெபாசிட் தொகை செலுத்த வேண்டும். பொருத்துதல் மற்றும் இதர கட்டணங்கள் தனியாக வசூலிக்கப்படும். ஏற்கனவே பதிவு செய்தவர்கள் 42 பேருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றனர்.

 


Page 193 of 390