Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

குறிச்சி&குனியமுத்தூர் திட்டத்தில் உடைந்த குழாயை சீரமைக்க குடிநீர் வெளியேற்றம்

Print PDF

தினகரன் 04.08.2010

குறிச்சி&குனியமுத்தூர் திட்டத்தில் உடைந்த குழாயை சீரமைக்க குடிநீர் வெளியேற்றம்

கிணத்துக்கடவு, ஆக.4: குறிச்சி&குனியமுத்தூர் குடிநீர் திட்டத்தில் கிணத்துக்கடவு அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. அதை சீர்படுத்த குடிநீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது.

ஆழியார்& குறிச்சி& குனியமுத்தூர் கூட்டு குடிநீர் திட்டம் ரூ.79.16 கோடியில் நிறைவேற்றப்பட்டது. உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த துணை முதல்வர் ஸ்டாலின் இத்திட்டத்தை துவக்கி வைத்தார். இத்திட்டத்தின்படி ஆத்துப்பொள்ளாச்சியில் இருந்து ஆழியார் ஆற்றுத்தண்ணீர் எடுக்கப்பட்டு ராட்சத குழாய்கள் மூலம் கோவை குனியமுத்தூர் வரை கொண்டு வரப்படுகிறது. இதற்காக ஆச்சிப்பட்டி, கிணத்துக்கடவு, குறிச்சி ஆகிய இடங்களில் நீரேற்று நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன. இத்திட்டத்தால் கிணத்துக்கடவுக்கு நாள் ஒன்றுக்கு 4.40லட்சம் லிட்டர் குடிநீரும், குறிச்சிக்கு 43.30லட்சம் லிட்டர் குடிநீரும், குனியமுத்தூருக்கு 32.70லட்சம் லிட்டர் குடிநீரும் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கிணத்துக்கடவில் இருந்து குறிச்சி செல்லும் குடிநீர் குழாய் பாதையில் கிணத்துக்கடவு செக்போஸ்ட் அருகே நேற்று திடீர் உடைப்பு ஏற்பட்டது. அதை சீர்படுத்தும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். குழாய் முழுக்க முழு வேகத்தில் குடிநீர் செல்வதால் சீரமைப்பு பணியில் சிக்கல் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து கிணத்துக்கடவு கிருஷ்ணவேணி தியேட்டர் அருகே உள்ள ஏர்வால்வு திறக்கப்பட்டது. அதன் வழியாக தண்ணீர் பெருக்கெடுத்து ரோட்டில் பாய்ந்தது. குழாயில் தண்ணீர் வெளியேற்றப்பட்டதையடுத்து குழாய்உடைப்பை சரிபார்க்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

 

குடிசை, சால் வீடுகளில் வசிக்கும் ஏழைகளுக்கு இலவசமாக குடிநீர் விநியோகம்

Print PDF

தினகரன் 03.08.2010

குடிசை, சால் வீடுகளில் வசிக்கும் ஏழைகளுக்கு இலவசமாக குடிநீர் விநியோகம்

மும்பை, ஆக. 3: குடிசைப் பகுதி மற்றும் சால் வீடுகளில் வசிக்கும் ஏழை மக்களுக்கு இலவசமாக குடிநீர் விநியோகம் செய்ய மும்பை மாநகராட்சி முடிவு செய் துள்ளது. இது தொடர்பான தீர்மானத்துக்கு மேயர் ஸ்ரத்தா ஜாதவ் ஒப்புதல் அளித்துள்ளார்.

தற்போது மும்பையில், அடுக்குமாடி குடியிருப்பு களுக்கு வசூலிக்கப்படும் கட்டணத்தை விட, குடிசைப் பகுதிகளுக்கு விநியோகிக்கும் குடிநீருக்கு மாநகராட்சி குறைந்த கட்டணம் வசூலித்து வருகிறது.

இது தொடர்பாக காங் கிரஸ் உறுப்பினர் வினோத் சேகர் மாநகராட்சி பொதுக் குழுவில் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். அவர் பேசுகையில், "ஏழை மக்கள் வசிக்கும் குடிசைப் பகுதிக ளுக்கு மாநகராட்சி நிர் வாகம் குறைந்த கட்ட ணத்தில் குடிநீர் விநியோகம் செய்து வருகிறது. ஆனால், குடிசைப் பகுதியை சேர்ந்த ரவுடி கும்பல்கள், குடிநீர் இணைப்புகளை பெற்று, பொதுமக்களுக்கு அதிக கட்டணத்தில் குடிநீர் சப்ளை செய்கின்றன.

வேறு சிலர் குடிசைப் பகுதிகளில் விநியோகிக்கப் படும் குடிநீரை சட்டவிரோத மாக டேங்கர் லாரிகளில் நிரப்பி, நகரில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிடங்களிலும், கட்டு மானப்பணிகள் நடக்கும் இடங்களிலும் பல மடங்கு கூடுதல் விலைக்கு விற்பதை தொழிலாக செய்து வருகின் றனர். இதனால் குடிசைகள் மற்றும் சால் வீடுகளில் வசிக்கும் ஏழைகளுக்கு குடிநீர் போதிய அளவில் கிடைப்பதில்லை. குடிசை பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்கள் பலனடைய அவர்களுக்கு இலவசமாக குடிநீர் சப்ளை செய்ய வேண்டும்" என்றார்.

இதற்கு பல கட்சி உறுப் பினர்கள் ஆதரவு தெரிவித் தனர். இந்த தீர்மானத்துக்கு கூட்டத்தில் ஒப்புதல் அளித்த மேயர் ஸ்ரத்தா ஜாதவ், இத்திட்டத்தை அமல்படுத்துவது தொடர் பாக முடிவு செய்ய தீர்மா னத்தை மாநகராட்சி கமி ஷனர் சுவாதின் ஷத்திரியா வுக்கு அனுப்பி வைத் துள்ளார்.

 

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் உயர்வு

Print PDF

தினமணி 02.08.2010

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் உயர்வு

சென்னை, ஆக. 1: சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்துள்ளதால் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து, இந்த அணைகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

முக்கிய ஏரிகளில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி முறையே நீர்மட்டம், நீர் இருப்பு, நீர்வரத்து உள்ளிட்ட விவரங்கள்:

பூண்டி 131.70 அடி, 1,095 மி..அடி, வினாடிக்கு 257 .அடி. சோழவரம் 50.07 அடி, 145 மி..அடி, வினாடிக்கு 58 .அடி. புழல் (செங்குன்றம்) 39.79 அடி, 1,374 மி..அடி, வினாடிக்கு 239 .அடி. செம்பரம்பாக்கம் 77.12 அடி, 1,666 மி.. அடி, வினாடிக்கு 105 .அடி.

இந்த ஏரிகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பதிவான அதிகபட்ச மழையளவு (மில்லி மீட்டரில்): பூண்டி- 23, சோழவரம் 80, புழல் 49, செம்பரம்பாக்கம் 13.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஞாயிற்றுக்கிழமை மொத்த நீர் இருப்பு 4,280 மி.. அடி. கடந்த ஆண்டு இதே நாளில் இந்த ஏரிகளில் மொத்த நீர் இருப்பு 3,685 மி..அடியாக இருந்தது

 


Page 194 of 390