Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

ஆக.7ல் துணை முதல்வர் அறிவிப்பார் சங்கரன்கோவில் குடிநீர் பிரச்னை தீர்க்க புதிய திட்டம்

Print PDF

தினகரன் 02.08.2010.

ஆக.7ல் துணை முதல்வர் அறிவிப்பார் சங்கரன்கோவில் குடிநீர் பிரச்னை தீர்க்க புதிய திட்டம்

சங்கரன்கோவில், ஆக. 2: சங் கரன்கோவில் குடிநீர் பிரச் னையை தீர்க்க வரும் 7ம் தேதி நடைபெறும் விழாவில் துணை முதல்வர் மு..ஸ்டா லின் அறிவிப்பு வெளியிடுவார் என கருப்பசாமிபாண்டியன் எம்எல்ஏ தெரிவித்தார்.

நெல்லை மாவட்டத்தில் வரும் 6, 7ம் தேதிகளில் துணை முதல்வர் மு..ஸ்டா லின் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார். சங்கரன்கோவிலில் 7ம் தேதி நடைபெறும் விழாவில் புதிய தாலுகா அலுவலக கட்டிடத்தை திறந்து வைக் கிறார். இதற்காக அங்கு பிர மாண்ட பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை மாவட்ட திமுக செயலாளர் கருப்பசாமிபாண்டியன் நேற்று பார்வையிட்டு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் வருகிற 7ம் தேதி சங்கரன்கோவில் யூனியன் அரிநாயகிபுரம் பஞ்சாயத் தில் ரூ.2.5 கோடியில் கட்டப்பட்டுள்ள சமத்துவபுரத்தையும், அங்கு அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை யையும் திறந்து வைக்கிறார். பின்னர் சங்கரன்கோவிலில் நடைபெறும் அரசு விழா வில் ரூ.1.68 கோடியில் புதி தாக கட்டப்பட்ட தாலுகா அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்து 2 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி களை வழங்குகிறார்.

நெல்லை மாவட்டத்தில் அம்பை, கடையநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய இடங்களில் 2 நாள் நடை பெறும் விழாவில் துணை முதல்வர் பங்கேற்கிறார். அம்பையில் புதிய தாலுகா அலுவலக கட்டிடம், குலவணிகர்புரத்தில் மாநில அரசு, மத்திய ரயில்வேதுறை இணைந்து ரூ.25.5 கோடியில் அமைய இருக்கும் மேம்பா லம், ரூ. 4 கோடியில் உருவாக இருக்கும் மணிமுத்தாறு, வி.கே.புரம் கூட்டு குடிநீர் திட்டம், ரூ.28.30 லட்சத்தில் கடையநல்லூர் கூட்டு குடி நீர் திட்டம், செங்கோட்டை யில் வாஞ்சிநாதன் நினைவு மணிமண்டபம், கல்லிடைக்குறிச்சியில் ரூ.8 லட்சத்தில் சமுதாய நலக்கூடம் ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். கல்லிடைகுறிச்சி யில் ரூ.27 லட்சத்தில் புதி தாக கட்டப்பட்ட பஸ் நிலைய கட்டிடங்கள் மற்றும் வண்ணார்பேட்டையில் கட்டப்பட்ட மேம்பாலங் களை திறந்து வைக்கிறார்.

சங்கரன்கோவில் நக ராட்சி பகுதியில் நிலவும் குடி நீர் பிரச்சினை குறித்து சேர் மன், உள்ளாட்சி பிரதிநிதி கள், எம்.பி, நான் அனை வரும் துணை முதல்வரிடம் தெரிவித்து இருக்கிறோம். இங்கு நடைபெறும் விழா வில் துணை முதல்வர் மகிழ்ச்சியான செய்தியை மக்களுக்கு அறிவிப்பார்.இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் ராசாத்தலைவர், யூனியன் சேர்மன் அன்புமணி கணேசன், துணைச் சேர்மன்கள் லாலா சங்கரபாண்டியன், சங்கரன், நகரச் செயலாளர் பரமபால்பாண்டியன், ஒன்றியச் செயலாளர்கள் துரைராஜ், கடற் கரை, பஞ்சாயத்து தலைவர் முத்துப்பாண்டியன், பொரு ளாளர் மாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

ஈரோட்டில் குடிநீர் திட்டப் பணிகள் மந்தம்

Print PDF

தினமணி 30.07.2010

ஈரோட்டில் குடிநீர் திட்டப் பணிகள் மந்தம்

ஈரோடு, ஜூலை 29: ஈரோடு மாவட்டத்தில் அரசு குடிநீர் திட்டப் பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று வருகிறது என, சட்டப்பேரவை உறுதிமொழிக்குழு தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார்.

பீட்டர் அல்போன்ஸ் தலைமையிலான பேரவை உறுதிமொழிக் குழு ஈரோடு மாவட்டத்தில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டது. ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகில் நடைபெறும் மேம்பாலப் பணி, காளிங்கராயன் வாய்க்கால், அரசு மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் இக்குழு ஆய்வு மேற்கொண்டது(படம்).

இதன்பிறகு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு பேரவை உறுதிமொழிக்குழு தலைவர் பீட்டர் அல்போன்ஸ், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

ஈரோடு மாவட்டத்தில் 135 திட்டங்களை செயல்படுத்த அரசு உறுதியளித்திருந்தது. இதில், கடந்த 4 ஆண்டுகளில் ரூ.217 கோடி மதிப்பிலான 31 பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நிதி சாராத 14 பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ரூ.42.51 கோடி மதிப்பில் 19 பணிகள் நடைபெற்று வருகின்றன. அரசு பரிசீலனையில் 60 பணிகள் உள்ளன. 11 பணிகளை நிறைவேற்ற இயலாது என்று அரசு அறிவித்துள்ளது.மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டப் பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று வருகின்றன.

இப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்றுவரும் பணிகளை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் முடிப்பதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். ஈரோடு பெரியமாரியம்மன் கோயில் அருகில் மேம்பாலம் கட்டுவதற்கு சில அமைப்புகள் தெரிவித்துள்ள எதிர்ப்பு, சிப்காட் பகுதியில் ஆலைக்கழிவுகளை கொட்டுவதால் ஏற்படும் பாதிப்புகள், ஒருங்கிணைந்த மஞ்சள் வணிக வளாகத்தின் தேவை, ஆவின் தீவன தயாரிப்பு நிறுவனத்தில் உள்ள நிர்வாக ரீதியான பிரச்னைகள் குறித்து குழு நேரில் ஆய்வு செய்துள்ளது.

இந்த மாவட்டத்தைப் பொறுத்தவரை, இப்பிரச்னைகள் அனைத்தும் மிகவும் முக்கியமானவை. இப் பிரச்னைகள் குறித்த பரிந்துரைகளை அரசிடம் குழு அளிக்கும் என்றார். மாவட்ட ஆட்சியர் ஆர்.சுடலைக்கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் பி.குமாரவேல் பாண்டியன், எஸ்பி டி.ஜெயச்சந்திரன் மற்றும் குழு உறுப்பினர்கள் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

 

செப்டம்பர் மாதம் சென்னைக்கு கிருஷ்ணா தண்ணீர்

Print PDF

மாலை மலர் 29.07.2010

செப்டம்பர் மாதம் சென்னைக்கு கிருஷ்ணா தண்ணீர்

செப்டம்பர் மாதம் சென்னைக்கு
 
 கிருஷ்ணா தண்ணீர்

சென்னை, ஜூலை.29- சென்னை குடிநீர் பிரச்சினையை சமாளிக்க ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னைக்கு கிருஷ்ணா தண்ணீர் வழங்கும் ஒப்பந்தம் 1983-ம் ஆண்டு போடப்பட்டது. இதன்படி ஆந்திர அரசு சென்னைக்கு வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீர் தர வேண்டும்.

கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் டிசம்பர் வரையும், இந்த ஆண்டு பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையும் மொத்தம் 7.016 டி.எம்.சி. கிருஷ்ணா தண்ணீர் தமிழ் நாட்டுக்கு வந்துள்ளது. ஒப்பந்தப்படி ஜீலை மாதம் தண்ணீர் திறக்கப்பட வேண்டும்.

ஆனால் தாமதம் ஏற்பட்டது. எனவே தமிழக அதிகாரிகள் ஆந்திரா சென்று, கிருஷ்ணா தண்ணீரை திறந்து விட வற்புறுத்தினார்கள். ஆகஸ்டு மாதத்திலாவது திறக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

அதற்கு ஆந்திர அதிகாரிகள், "கிருஷ்ணா கால்வாய் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. எனவே செப்டம்பரில் தண்ணீர் திறக்கப்படும்" என்று தெரிவித்தனர். தற்போது கண்டலேறு அணையில் 18.35 டி.எம்.சி. தண்ணீர் இருக்கிறது. எனவே கிருஷ்ணா கால்வாய் சீரமைப்பு பணி முடிந்ததும் கிருஷ்ணா தண்ணீர் திறப்பு தேதி வெளியிடப்படும் என்று தெரிகிறது.

இன்றைய நிலவரப்படி, பூண்டி ஏரியில் 1077 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. புழல் ஏரியில் 1367 மில்லியன் கன அடியும், செம்பரம்பாக்கத்தில் 1666 மில்லியன் கன அடியும், சோழவரத்தில் 140 மில்லியன் கன அடியும் தண்ணீர் உள் ளது. வீராணம் ஏரியில் 343 மில்லியன் கன அடி இருக்கிறது.

சென்னைக்கு தற்போது தினமும் 660 மில்லியன் லிட்டர் குடிநீர் "சப்ளை" செய்யப்படுகிறது. தொடர்ந்து இதே அளவு தண்ணீர் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 


Page 195 of 390