Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

குடிநீர் பற்றாக்குறை தீர்க்க நடவடிக்கை கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

Print PDF

தினகரன் 29.07.2010

குடிநீர் பற்றாக்குறை தீர்க்க நடவடிக்கை கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

திருத்துறைப்பூண்டி, ஜூலை 29: திருத்துறைப்பூண்டி நகராட்சி கூட்டம் தலைவர் ராஜேஸ்வரி செல்வராஜன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

துணை தலைவர் பாண் டியன், ஆணையர் திருமலைவாசன், மேலாளர் கிளமன்ட் அந்தோணிராஜ், பணி மேற்பார்வையாளர் பாஸ்கர், துப்புரவு ஆய்வா ளர் ராமச்சந்திரன், கணக்கர் மீரா மன்சூர் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் 22 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

கவுன்சிலர் எழிலரசன் பேசுகையில், நகராட்சிக்கு 9வது வார்டிலிருந்துதான் அதிகமாக வரி செலுத்தப்படுகிறது. ஆனால் பொதுநிதிலிருந்து பணிகள் செய்து கொடுப்பதில்லை என்றார்.

கவுன்சிலர் செல்வகுமார் பேசுகையில், கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குடிநீர் 1 மணிநேரம் கூட வருவதில்லை என்றார்.

ஆணையர் திருமலைவாசன் பேசுகையில், நகரில் உள்ள 24 வார்டுகளுக்கும் தினமும் 15 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. எந்த வார்டுக்கும் தண்ணீர் பற்றாக்குறை இல்லாத அளவுக்கு தண் ணீர் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.

கவுன்சிலர் ஜிம்மாபானு பேசுகையில், கோட்டகம் பகுதிக்கு குடிநீர் வருவதில்லை. கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

கவுன்சிலர் ரேவதி பேசுகையில், கச்சவராயன்திடல் பகுதிக்கு கொள்ளிடம் தண்ணீர் சரியாக வருவதில்லை என்றார்.

சண்முகசுந்தர் பேசுகை யில், 24வது வார்டில் கொள்ளிடம் குடிநீர் 24 மணி நேரமும் வந்துகொண்டிருக்கிறது. அங்கு வால்வு அமைக்கவேண்டும். 20வது வார்டில் குடிநீர் பற்றாக்குறையாக உள்ளது என்றார்.

கவுன்சிலர் வக்கீல் பாஸ்கர் பேசுகையில், அனுமதியில்லாமல் நகரில் போடப்படும் பிளாட்டுகளுக்கு நகராட்சி சார்பில் எந்த வசதியும் செய்துகொடுக்கக்கூடாது என்றார்.

கவுன்சிலர் வெங்கடசுப்பிரமணியன் பேசுகையில், எனது வார்டில் குடியிருப்பு பகுதியில் கழிவுநீரை இரவு நேரத்தில் மோட்டார் போட்டு சாலையில் இறைத்துவிடுகிறார். இதற்கு நகராட்சி ஊழியர்கள் உடந்தையாக உள்ளதாக தெரிகிறது என்றார்.

ஆணையர் திருமலைவாசன் பேசுகையில், கழிவுநீரை வெளியேற்றுவதில் ஈடுபட்ட நகராட்சி ஊழியர்கள் யார் என்று தெரிவித்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 

பகிர்மானக் குழாயில் உடைப்பு குடிநீர் விநியோகம் பாதிப்பு

Print PDF

தினமணி 29.07.2010

பகிர்மானக் குழாயில் உடைப்பு குடிநீர் விநியோகம் பாதிப்பு

கடலூர், ஜூலை 28: பகிர்மானக் குழாய் உடைந்ததால் கடலூரில் சில பகுதிகளில் குடிநீர் விநியோகம் புதன்கிழமை பாதிக்கப்பட்டது.

கடலூர் செம்மண்டலம் பகுதியில் உள்ள தீபன் நகரில் அமைந்துள்ள குடிநீர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் இருந்து தீபன் நகர், வரதராஜன் நகர், எஸ்.பி.. நகர், சேர்மன் சுந்தரம் நகர், சுப்பையா நகர் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு நகராட்சி குடிநீர் விநியோகிக்கப் படுகிறது. புதன்கிழமை இந்த குடிநீர் தொட்டிக்கு கேப்பர் மலையில் இருந்து, குடிநீர் விநியோகிக்கும் பகிர்மானக் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணானது.

மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் இருந்த சிறிதளவு நீர் மட்டுமே வீடுகளுக்கு வழங்கப் பட்டது. தகவல் அறிந்ததும் நகராட்சித் தலைவர் து.தங்கராசு விரைந்து சென்று பார்வையிட்டார். கெடிலம் ஆற்றைக் கடந்து செல்லும் பகிர்மானக் குழாயில் ஏற்பட்டு இருந்த உடைப்பு கண்டுபிடிக்கப்பட்டது. உடைப்பைச் சீரமைக்கும் பணி நடந்து கொண்டு இருக்கிறது என்றும், வியாழக்கிழமை குடிநீர் விநியோகம் சீரடையும் என்றும் தங்கராசு தெரிவித்தார்.

 

ஏரிகளில் நீர்மட்டம் உயர்வு புனேயில் குடிநீர் வெட்டு பாதியாக குறைப்பு

Print PDF

தினகரன் 28.07.2010ச்

ஏரிகளில் நீர்மட்டம் உயர்வு புனேயில் குடிநீர் வெட்டு பாதியாக குறைப்பு

புனே,ஜூலை 28: புனேயில் குடிநீர் வெட்டு பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. புனேயில் பருவமழை சரியாக பெய்யாத காரணத் தால் குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் மட் டம் மிகவும் குறைவாக இருந்தது. இதனால் நிலைமையை சமாளிக்க 40 சதவீத குடிநீர் வெட்டை மாநகராட்சி நிர்வாகம் அமல்படுத்தி வந்தது.

இதனால் நகரில் ஒருநாள் விட்டு ஒரு நாள் மட்டுமே நான்கு மணி நேரம் மட்டுமே குடிநீர் வழங்கபட்டு வந்தது. இதனால் பொதுமக்கள் குடிநீர் பிரச்னைப் பற்றி தொடர்ந்து புகார் தெரி வித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்தது. இதனால் குடிநீர் வழங்கும் அணைகளில் தண்ணீர் மட்டம் ஓரளவு அதிகரித்துள்ளது. இதையடுத்து மாநில நீர்ப் பாசனத்துறை, புனே குடிநீர் தேவைக்கு வழங்கும் தண்ணீரின் அளவை அதி கரித்துள்ளது.

இதையடுத்து குடிநீர் வெட்டையும் மாநகராட்சி நிர்வாகம் குறைத்துள்ளது. இதன் படி தினமும் நான்கு மணி நேரம் குடிநீர் வழங்கப்படும். அதாவது தற்போது ஒருநாள் விட்டு ஒருநாள் நான்கு மணி நேரம் குடிநீர் வழங்கப்படுகிறது. இது இனி தினமும் நான்கு மணி நேரமாக அதி கரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 40 சதவீத குடிநீர் வெட்டு 20 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சரும் புனே மாவட்ட பொறுப்பு அமைச்சருமான அஜித் பவாரின் உத்தரவின்பேரி லேயே குடிநீர் வெட்டு குறைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். அதேசமயம் குடிநீர் வழங்கும் ஏரிகளில் போதிய அளவு குடிநீர் இல்லாத பட்சத்தில் மீண்டும் குடிநீர் வெட்டு அதிகரிக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 


Page 196 of 390