Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

கம்பம் நகருக்கு புதிய குடிநீர் திட்டப்பணிகள் துவக்கம்

Print PDF

தினகரன் 28.07.2010ச்

கம்பம் நகருக்கு புதிய குடிநீர் திட்டப்பணிகள் துவக்கம்

கம்பம், ஜூலை 28: கம்பம் நகரில் அடுத்த 30 ஆண்டு மக்கள் தொகைக்கு தேவை யான 12.80 எம்எல்டி குடிநீருக்காக புதிய குடிநீர் திட்டத்தை துவக்கி உள்ளதாக நகராட்சித் தலைவர் அம்பிகாபாண்டியன் கூறினார்.

கடந்த 1960ம் ஆண்டு கம்பம் நகராட்சி மக்கள் தொகை 35 ஆயிரம் பேருக்கு 1.5 எம்எல்டி குடிநீர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் விநியோகம் செய்யப்பட்டது. 1990ம் ஆண்டு மக்கள் தொகை 48 ஆயிரம் பேருக்கு கூடுதலாக 3 எம்எல்டி தண்ணீர் விநியோகிக்கப்பட்டது. தற் போதைய மக்கள் தொகை 85 ஆயிரம் பேருக்கு 6.10 எம்எல்டி குடிநீர் வழங்கப்படுகிறது.

தற்போது வழங்கப்படும் தண்ணீர் கம்பம் நகர் மக்களுக்கு போதுமானதாக இல்லை. எனவே நகரின் பல பகுதிகளில் குடிநீர் பிரச்னை நிலவுகிறது. நகரின் குடிநீர் பிரச்னையை போக்க கம்பம் நகராட்சிக்கு புதிய குடிநீர் மேம்பாட்டு திட்டம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ரூ.4 கோடியில் துவங்கப்பட்டது. தொடர்ந்து செயல்படும் இத்திட்டத்தை ரூ.16.21 கோடியில் மேலும் விரிவுபடுத்த நகராட்சி நிர்வாக தலைமைப் பொறியாளர், மண்டல செயற்பொறியாளர் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் பொறியாளர்களுக்கு திட்ட மதிப்பீடு அனுப்பட்டது.

இந்த புதிய குடிநீர் திட்டத்திற்கு உத்தேச மதிப்பீடு தயார் செய்வது தொடர்பாக சிறப்பு கூட்டம் நடந்தது. கம்பம் நகராட்சித் தலைவர் அம்பிகாபாண்டியன் தலைமை வகித்தார். ஆணையாளர் அய்யப்பன், இன்ஜினியர் மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தனி குடிநீர் திட்டமாக செயல்படுத்த, நகராட்சி நிர்வாகமே பராமரிக்கும் வகையில் திட்ட மதிப்பீடு தயாரிக்கவும், தேவையானநிதியை அரசிடம் இருந்து மானியம் அல்லது கடன் பெறுவதும், தற்போதுள்ள பழைய கூட்டு குடிநீர் திட்டத்தை ஏதாவது ஒரு ஊராட்சிக்கு சென்னை நகராட்சி நிர்வாக இயக்குநர் பரித்துரையின் பேரில் மாற்றி கொடுக்கவும் கவுன்சிலர்கள் அனுமதி அளித்தனர்.

நகராட்சித் தலைவர் அம்பிகாபாண்டியன் கூறுகையில், 1397969521 கம்பம் நகரில் 2040 ஆண்டு மக்கள் தொகைக்கு தேவையான 12.80 எம்எல்டி குடிநீருக்காக நகராட்சி நிர்வாகம் தனியாக நிர்வாகிக்கும் புதிய குடிநீர் திட்ட பணியை துவக்கியுள்ளது. இத்தனி குடிநீர் திட்டத்திற்கு தமிழக அரசு விரைவில் அனுமதி அளித்து கம்பம் நகர் மக்களின் குடிநீர் பிரச்சனையை போக்கும்என்றார். .

 

மார்த்தாண்டத்தில் குடிநீர்த் தொட்டி திறப்பு

Print PDF

தினமணி 28.07.2010

மார்த்தாண்டத்தில் குடிநீர்த் தொட்டி திறப்பு

மார்த்தாண்டம், ஜூலை 27: மார்த்தாண்டத்தில் குழித்துறை நகராட்சி சார்பில் சிறுமின்விசை குடிநீர்த் தொட்டி திறப்புவிழா நடைபெற்றது.

குழித்துறை நகராட்சியின் 21-வது வார்டு சந்தை சாலையில் உள்ள கிணற்றில் ரூ. 75 ஆயிரம் மதிப்பில் சிறுமின் விசை குடிநீர்த் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந் நிகழ்ச்சிக்கு நகர்மன்றத் தலைவர் பொன்.ஆசைத்தம்பி தலைமை வகித்து குடிநீர்த் தொட்டியை திறந்து வைத்தார். வார்டு உறுப்பினர் பொன்.சகாதேவன், ஜயன், பிரபின்ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

ரூ.169 கோடி குடிநீர் திட்டம் செப்.,ல் முதல்வர் துவக்கம்: அமைச்சர் நேரு

Print PDF

தினமலர் 28.07.2010

ரூ.169 கோடி குடிநீர் திட்டம் செப்.,ல் முதல்வர் துவக்கம்: அமைச்சர் நேரு

திருச்சி: திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் வசிக்கும் மக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்யும் பொருட்டு தமிழ்நாடு நகர்புற உள்கட்டமைப்பு நிதி சேவை நிறுவனம் மூலம் ஜப்பான் நிதி நிறுவனத்தின் நிதியுதவி, மாநில அரசின் மான்யத் தொகை மற்றும் மாநகராட்சியின் பங்களிப்பையும் சேர்த்து 169 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எட்டு தொகுப்புகளாக பிரித்து குடிநீர் அபிவிருத்தித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக ஸ்ரீரங்கம், மேலூர் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் மூன்று இடங்களில் பிரதான நீர்சேகரிக்கும் கிணறு, இரண்டு தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி, 35 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, 88.59 கி.மீ., தூரத்துக்கு பிரதான மற்றும் கிளை குடிநீர் உந்து குழாய், 262.08 கி.மீ., தூரத்துக்கு குடிநீர் விநியோகக் குழாய் மற்றும் 446 கி.மீ., தூரத்துக்கு ஏற்கனவே பதிக்கப்பட்டு பழுதடைந்த குடிநீர் குழாய் மாற்றியமைக்க திட்டமிடப்பட்டு பணி நடந்து வருகிறது.ஸ்ரீரங்கம், மேலூர் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் அமைக்கப்பட்ட பிரதான நீர்சேகரிக்கும் கிணறு எண்.3ன் பணி முழுவதும் முடிக்கப்பட்டு குடிநீர் விநியோகப் பணி மேற்கொள்ள தயார் நிலையில் உள்ளது.இப்பணியியை அமைச்சர் நேரு பார்வையிட்ட பின் கூறியதாவது:திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிக்கும் சீரான குடிநீர் வழங்கும் வகையில் அடுத்த 40 ஆண்டுக்கான குடிநீர் தேவை அடிப்படையில் திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு, முதல்வர் கருணாநிதியால் 169 கோடி ரூபாய் மதிப்பில் பணி மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு, பணி நடந்து வருகிறது. இப்பணி விரைவில் முடிக்கப்பட்டும்.ஒருங்கிணைந்த கலெக்டர் அலுவலகம், வெள்ளத் தடுப்பு பணி, தகவல் தொழில்நுட்ப பூங்கா மற்றும் பல்வேறு அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழா செப்டம்பர் முதல் வாரம் நடக்கிறது. முதல்வர் கருணாநிதி பங்கேற்று குடிநீர் பணியையும் துவக்கி வைக்க உள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.ஆய்வின்போது, மேயர் சுஜாதா, கமிஷனர் பால்சாமி, நகரப் பொறியாளர் ராஜாமுகமது, நிர்வாகப் பொறியாளர் சந்திரன், அருணாச்சலம், உதவி நிர்வாகப் பொறியாளர் நாகேஷ் உள்பட பலர் உடனிருந்தனர்.

 


Page 197 of 390