Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

தூத்துக்குடியில் ரூ. 50 லட்சத்தில் புதிய நீர்த்தேக்கத் தொட்டி திறப்பு

Print PDF

தினமணி 22.07.2010

தூத்துக்குடியில் ரூ. 50 லட்சத்தில் புதிய நீர்த்தேக்கத் தொட்டி திறப்பு

தூத்துக்குடி, ஜூலை 21: தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்த ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியை அமைச்சர் பெ. கீதாஜீவன் (படம்) புதன்கிழமை திறந்து வைத்தார்.

வல்லநாடு மலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த நீர்தேக்கத் தொட்டியைத் திறந்து வைத்து அமைச்சர் பேசியதாவது:

தூத்துக்குடி மாநகருக்கு, தூத்துக்குடியிலிருந்து சுமார் 42 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப்படுகையிலிருந்து குடிநீர் கொண்டு வரப்படுகிறது.

இம் மாநகருக்கு, இதுவரை 3 குடிநீர்த் திட்டங்கள் முறையே 1932, 1979, 2001 ஆகிய ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டுள்ளன. வல்லநாடு தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த மலைப்பகுதி, தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து சுமார் 37.43 மீட்டர் உயரத்தில் உள்ளது.

எனவே, இந்த 7 கி.மீ. தொலைவுக்கு பிரதான குழாய்கள் இணைக்கப்பட்டுள்ளன. இம் மலைப்பகுதியிலிருந்து, தூத்துக்குடி ராஜாஜி பூங்கா நீர்த்தேக்க நிலையம் 34.18 மீட்டர் தாழ்வில் இருப்பதால், இந்த 28.62 கி.மீ. தொலைவுக்கு தன்னோட்ட குழாய்கள் அமைக்கப்பட்டு, தற்சமயம் நாளொன்றுக்கு 240 லட்சம் லிட்டர் குடிநீர் கொண்டுவரப்பட்டு நகரின் குடிநீர் விநியோகம் நடைபெற்று வருகிறது.

முதல் மற்றும் இரண்டாவது செயல்படுத்தப்பட்ட திட்டங்களில், இம் மலைப்பகுதியில் நீர்தேக்கத் தொட்டியில் குடிநீர் சேகரிக்கப்பட்டு, பின்பு அவை தன்னோட்ட குழாய் வழியாக நகருக்கு கொண்டுவரப்பட்டது. தலைமை நீரேற்று நிலையத்தில் ஏற்படும் மின்தடை காரணமாக அதிக அளவு குடிநீர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படவில்லை.

அதன்பின், மூன்றாவது செயல்படுத்தப்பட்ட திட்டத்தில் பிரதான குழாய் எந்த நீர்தேக்கத் தொட்டியிலும் இணைப்பு ஏற்படுத்தாமல் நேரடியாக தன்னோட்ட குழாயுடன் இணைப்பு ஏற்படுத்தப்பட்டு குடிநீர் கொண்டுவரப்படுகிறது. இதன் காரணமாக சிறிய மின்தடை ஏற்பட்டாலும் நகருக்கு வரும் குடிநீரின் அளவு வெகுவாகப் பாதிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அரசால் ஒருமுறை வழங்கப்படும் மானியத் திட்டத்தின் கீழ் வல்லநாடு மலைப்பகுதியில் ரூ. 50 லட்சம் செலவில், 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்படுகிறது என்றார் அமைச்சர். நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயர் இரா. கஸ்தூரி தங்கம், துறைமுக பொறுப்புக் கழக உறுப்பினர் என். பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் பெ. குபேந்திரன், பொறியாளர் ராஜகோபாலன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ப. காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

குடிநீர் சப்ளை இல்லாவிட்டால் "விழிப்பு ஒலி' நெல்லை மாநகராட்சியில் விரைவில் அமல்

Print PDF

தினமலர் 22.07.2010

குடிநீர் சப்ளை இல்லாவிட்டால் "விழிப்பு ஒலி' நெல்லை மாநகராட்சியில் விரைவில் அமல்

திருநெல்வேலி : நெல்லை மாநகராட்சியில் தெருக்களுக்கு குடிநீர் சப்ளை இல்லாவிட்டால் "விழிப்பு ஒலி' எழுப்பும் எந்திரம் பயன்படுத்தப்படுகிறது.

நெல்லை மாநகராட்சி பகுதியில் குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகளுக்கும், குடிநீர் இணைப்பு இருந்தும் மெயின் குழாய் உடைப்பு ஏற்பட்டால் குடிநீர் வழங்க முடியாத இடங்களுக்கும் லாரி மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. தற்போது வயர்லெஸ் மூலம் லாரிகள் வாயிலாக குடிநீர் சப்ளை, வினியோகத்தின் சீரான தன்மை, திட்டமிட்ட கால அளவின்படி வினியோகம், ஒதுக்கீட்டின்படியான வினியோகம், தேவைக்கேற்ப மாறுதல் வினியோகம் ஆகியவை கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இப்பணியில் தேவைக்கேற்ப மாற்றம் செய்து கொள்ள சம்பந்தப்பட்ட உதவி செயற்பொறியாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது இக்கண்காணிப்பு பணியை நவீன தொழில் நுட்ப உதவியுடன் நெறிமுறைப்படுத்தும் கருவிகள் மூலம் குடிநீர் சப்ளையை முறைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குடிநீர் சப்ளை தெருக்களுக்கு செல்லவில்லை எனில் "விழிப்பு ஒலி' எழுப்பும் எந்திரத்தை பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வசதி விரைவில் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

குடிநீர் பிரச்னையை சமாளிக்க அடுக்குமாடி குடியிருப்புக்கு புதிய இணைப்பு நிறுத்தம்

Print PDF

தினமலர் 21.07.2010

குடிநீர் பிரச்னையை சமாளிக்க அடுக்குமாடி குடியிருப்புக்கு புதிய இணைப்பு நிறுத்தம்

பெங்களூர், ஜூலை 21: பெங¢களூரில் குடிநீர் பிரச்னை தீரும்வரை புதிதாக அமைக்கப்படும் அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்களுக்கு குடிநீர் இணை ப்பு தரமுடியாது என்று நகர குடிநீர் வினியோகம் மற்றும் கழிவுநீர் வடிகால் வாரியத்திற்கான அமைச்சர் கட்டா சுப்பிரமணியநாயுடு தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் நேற்று கூறியதாவது:

நகர மற்றும் புறநகர் பகுதிகளில் 2000 கிலோமீட்டர் தூரத்திற்கு பழைய கழிவுநீர் குழாய்களை மாற்றி புதிய குழாய்களை அமைக்கும் பணிகள் அடுத்தவாரம் முதல் துவங்க உள்ளது. 2011ம் ஆண்டில் இப்பணிகள் முடிவடையும்.

கழிவுநீர் குழாயில் திடக்கழிவுகளை வீசக்கூடாது என்ற பொறுப்புணர்வு நகர மக்களிடம் இல்லை. இதனால்தான் பெரும்பாலும் சாக்கடைகளில் அடைப்பு ஏற்படுகிறது.

பெருமாநகராட்சி சார்பில் நகரின் 17 பகுதிகளில் கழிவு நீரை சுத்திகரிக்கும் மையங்கள் அமைத்து அதிலிருந்து 600 மில்லியன் லிட்டர் தண்ணீரை சுத்திகரித்து தொழிற்சாலைகளுக்கு அளிக்க திட்டமிட்டுள்ளோம்.

நகரில் குடிநீர் கசிவு, பாதாளசாக்கடை திறந¢து கிடப்பது, சரியாக வேலை செய்யாத அதிகாரிகளுக்கு எதிராக புகார் அளிப்பது உள்ளிட்டவை குறித்து தகவல் அளிக்க 24 மணிநேரம் செயல்படும் கால்சென்டர் ஒன்றை ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் அமைக்க திட்டமிட்டுள்ளோம்.

போனில் வரும் புகார்களுக்கு 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும். பெங்களூரில் தற்போது 104 குடிநீர் சர்வீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன.

இனிமேல் வார்டுக்கு ஒன்று என்ற கணக்குப்படி 198 சர்வீஸ் ஸ்டேஷன் அமைக்கப்படும். ஒவ்வொரு பேரவை தொகுதிக்கும் 1 பறக்கும் படை அமைக்கப்பட்டு குடிநீர் தொடர்பான பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுத்துவருகிறோம்.

பெங்களூர் நகரபகுதிகளில் தற்போது குடிநீர் பிரச்னை நிலவுவதை ஒத்துக் கொள்கிறேன். இதற்கு தீர்வாக காவிரி 4வது ஸ்டேஜ், 2வது கட்ட குடிநீர் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

அப்பணிகளில¢ 35 சதவீதம் முடிவடைந்துவிட்டது. அடுத்தாண்டு நவம்பர் மாதத்திற்குள் முழுப் பணிகளும் முடிவிற்கு வரும். 2011 அல்லது 2012ம் ஆண்டுக்குள் குடிநீர் பிரச்னை பெங்களூரில் தீர்க்கப்பட்டுவிடும்.

குடிநீர் தேவை அதிகமாக உள்ளதால் நகரில் புதிதாக அமைக்கப்படும் வர்த்தக வளாகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு தற்போது குடிநீர் இணைப்பு தருவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இத்தடை அடுத்த ஆண்டும் நீட்டிக்கும். 2011ம் ஆண்டு குடிநீர் சப்ளை மற்றும் தேவையை கணக்கிட்டு சாதாரண மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்வதற்கு போதிய நீர் இருப்பு உள்ளது கண்டறியப்பட்டால் மட்டுமே வணிக வளாகங¢கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு குடிநீர் சப்ளை அளிக்க முடியும்.

நகரில் புதிதாக 2000 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டன. அதில் 90 சதவீதம் கிணறுகளில் தண்ணீர் வந்துள்ளது. ஒவ்வொரு வார்டுக்கும் 4 போர்வெல¢களையாவது அமைக்க வேண்டும் என்பதே அரசின் குறிக்கோளாகும். இவ்வாறு அமைச் சர் தெரிவித்தார்.

 


Page 202 of 390