Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

இரவில் கண் விழித்து காத்திருக்க வேண்டாம் குடிநீர் வினியோக நேரம் இணையதளத்தில் வெளியீடு

Print PDF

தினமலர் 21.07.2010

இரவில் கண் விழித்து காத்திருக்க வேண்டாம் குடிநீர் வினியோக நேரம் இணையதளத்தில் வெளியீடு

கோபி, ஜூலை 21: கோபி நகராட்சி குடிநீர் வினியோகம் குறித்த தகவலை இணையதளத்தில் இனி பார்த்துக் கொள்ளலாம்.

எந்தெந்த பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது என்ற தகவலையும் பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம்.

தமிழகத்தில் உள்ள அனைத்து நகராட்சிகளில் வரியினங்கள், தொழிற்சாலைகள், நகராட்சி செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு தகவல்களையும்

ஷ்ஷ்ஷ்.tஸீ ரீஷீஸ்.வீஸீ.@நீனீணீ என்ற இணையதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாக ஆணையாளர் என்ற இணையதளத்தில் ஒவ்வொரு நகராட்சி குறித்தும் தனித்தனியாக விபரம் வெளியிடப்பட்டு வருகிறது.

கோபி நகராட்சி சம்பந்தப்பட்ட தகவல்களையும் பெறலாம். கடந்த 2 ஆண்டாக கோபி நகராட்சி யில் ரூ.4.65 கோடி மதிப்பில் நடந்து வந்த புதிய குடிநீர் திட்டப்பணி காரணமாக 30 வார்டுகளுக்கும் முறையாக குடிநீர் வினியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டு இருந்தது. இதனால் நகரில் அவ்வப்போது பொதுமக்க்ள சாலைமறியல், நகராட்சி அலுவலகம் முற்றுகை போன்ற போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். ஒருசில வார்டுகளுக்கு மட்டுமே சீரான குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது என்ற புகாரும் எழுந்தது.

ஷ்ஷ்ஷ்.னீuஸீவீநீவீஜீணீறீவீtஹ்.tஸீ.ரீஷீஸ்.வீஸீ.@ரீஷீதீவீ என்ற இணைய தளத்தில் கோபி நகரில் வினியோகிக்கப்படும் குடிநீர் குறித்த தகவலை வெளியிட நகராட்சி அதிகாரிகள் முடிவு செய்து, 2 நாட்களுக்கு முன் வெளியிட்டனர்.

இந்த இணைய தளத்தில் முதல் பக்கத்திலேயே வலது புற மூலையில் நியூ வாட்டர் சப்ளை என்ற பகுதி உள்ளது அதை தேர்வு செய்யும்போது அதனுள்ளே கடந்த 3 மாதமாக நகரில் உள்ள பார்வதி நகர், அவுசிங்யூனிட், ஜோதிநகர், பார்க், சக்தி ரோடு ஆகிய 5 மேல்நிலைத் தொட்டிகளில் இருந்து வினியோகிக்கப்பட்ட குடிநீர் விபரம் கிடைக்கும்.

மேலும் அன்றைய தினமும் மறுநாளும் எந்தெந்த பகுதிக்கு குடிநீர் வினியோகிக்கப்படும் என்ற விபரமும் பகுதி வாரியாக தெரிந்து கொள்ளலாம். குடிநீர் வினியோகத்தை பொதுமக்களே கண்காணித்து கமிஷனரிடம் புகார் தெரிவிக்கவும் வசதியாக இந்த இணையதளம் இருக்கும். புதிய குடிநீர் திட்டம் முழுவிபரம். குடிநீரில் குளோரின் கலக்கும் விதம், அதன் அளவு போன்ற தகவல்களையும் அறிந்து கொள்ள முடிகிறது. சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் அந்த நாட்களில் எந்தெந்தப் பகுதிக்கு குடிநீர் வினியோகிக்கப்படும் என்ற தகவல் வெள்ளிக்கிழமையே இணைய தளத்தில் வெளியிடப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

இணைய தளத்தை பொதுமக்கள் பார்ப்பதன் மூலம் குடிநீர் வினியோக நேரத்தை தெரிந்து கொள்வதோடு மின்வெட்டு போன்ற காரணத்தால் வினியோகம் பாதிக்கப்பட்டு இருந்தால் அதையும் அறிந்து கொள்ளலாம். இதனால் குடிநீர் தொடர்பாக பிரச்னை ஏற்படுவது தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கிறோம்.

தற்போது பவானி ஆற்றில் இருந்து நாள் ஒன்றுக்கு 80 லட்சம் லிட்டர் தண்ணீர் பெறப்பட்டு அதில் 5 லட்சம் லிட்டர் இலக்கம்பட்டிக்கு கொடுத்துவிட்டு மீதமுள்ளதை கோபி நகர் பகுதியில் தடையின்றி வினியோகிக்கப்படுகிறது.

இது தவிர 9900 குடிநீர் இணைப்புகளில் புதியதாக வழங்கிய 3 ஆயிரம் இணைப்புக்கு வாட்டர் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. மீதி இணைப்புகளுக்கு மீட்டர் பொருத்தும் பணி தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அனைத்து இணைப்புக்கும் மீட்டர் பொருத்திய பின்னர் பொதுமக்கள் அளவாக குடிநீரைப் பயன்படுத்தும் போது குடிநீரை சேமிக்க முடியும்என்றனர்.

 

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் அதிகரிப்பு

Print PDF

தினமணி 21.07.2010

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் அதிகரிப்பு

சென்னை, ஜூலை 20: சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 4 நாள்களாக மழை பெய்துள்ளதையடுத்து, நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், முக்கிய ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

பூண்டி- நீர்மட்டம் 131.58 அடி, நீர் வரத்து 107 மி.. அடி, மழையளவு 5 மி.மீ.; சோழவரம்- நீர்மட்டம் 49.21 அடி, நீர் வரத்து 68 மி.. அடி, மழையளவு 4 மி.மீ.; புழல்- நீர்மட்டம் 40.38 அடி, நீர் வரத்து 72 மி.. அடி, மழையளவு 4 மி.மீ.;

செம்பரம்பாக்கம்- நீர்மட்டம் 77.51 அடி, மழையளவு 3 மி.மீ. இந்த ஏரிகளில் கடந்த ஆண்டு இதே நாளில் மொத்த நீர் இருப்பு 4,072 மி.. அடியாக இருந்தது. தற்போது இந்த அணைகளின் மொத்த நீóர் இருப்பு 4,397 மி.. அடியாக உயர்ந்துள்ளது.

 

சிவகாசியில் குடிநீர் பிரச்னையை தீர்க்க நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு

Print PDF

தினகரன் 20.07.2010

சிவகாசியில் குடிநீர் பிரச்னையை தீர்க்க நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு

சிவகாசி, ஜூலை 20: சிவகாசி நகராட்சிக்குட்பட்ட பழநியாண்வர் காலனி மற்றும் காந்திநகர் பகுதிகளில் குடிநீர் பிரச்னையை தீர்க்கும்வகையில் கீழ்நிலை தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன.

சிவகாசி நகருக்கு மானு£ர் கூட்டு குடிநீர்த்திட்டம் மற்றும் வெம்பக்கோட்டை அணை திட்டம் மூலம் குடிநீர் பெறப்படுகிறது. தற்போது 4 நாட்களுக்கு ஒருமுறை வீட்டு இணைப்புகளுக்கு சுழற்சி அடிப்படையில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்காக நகரில் 5 இடங்களில் குடிநீர் மேல்நிலை தொட்டிகள் அமைக்கப்பட்டு அவற்றின் மூலம் விநியோகிக்கப்படுகிறது. சிவகாசியின் முக்கிய பெரிய மேல்நிலை தொட்டியான காமராஜர் மேல்நிலை தொட்டிக்கு குடிநீர் வந்து சேருகிறது. இது நிரம்பியவுடன் மீதமுள்ள 4 தொட்டிகளுக்கு தண்ணீர் பிரித்து அனுப்பப்படுகிறது.

இதில் நகரின் கடைகோடியிலுள்ள காந்திநகர் மேல்நிலை தொட்டி மற்றும் நகர் மையத்தில் உள்ள பழனியாண்டவர் மேல்நிலை தொட்டிக்கு குழாய் மூலம் அனுப்பப்படும் தண்ணீர் சென்றடைய சுமார் 14 மணி நேரம் பிடிக்கிறது. இதனால் நகராட்சிக்கு கூடுதலாக மின்செலவு, கசிவு மூலம் தண்ணீர் வீணாகி வந்தது. மேல்நிலை தொட்டிகள் மூலம் குடிநீர் பெறும் பகுதிகளான பழனியாண்டவர் காலனி, பழைய விருதுநகர் ரோடு, உசேன் காலனி, நேஷனல் காலனி, சோலை காலனி, காந்தி நகர், பராசக்தி காலனி, வேலாயுதம் ரோடு, ரத்தினம் நகர், பெரியகுளம் காலனி உள்ளிட்ட பகுதிகளுக்கு 6 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் கிடைத்துவந்தது.

நகரின் பிற பகுதிகளில் 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்கும்போது இப்பகுதி மக்கள் குடிநீர் பிரச்னையால் தவிக்கும் நிலை ஏற்பட்டது. இதனைதொடர்ந்து நகராட்சி நிர்வாகம் இப்பகுதி மக்களுக்கும் 3 நாள் அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கவும், தேவையற்ற மின்செலவுகளை குறைக்கவும் புதிய திட்டம் வகுத்தது.

இதன்படி பழனியாண்டவர் காலனி மற்றும் காந்தி நகர் பகுதியிலுள்ள மேல்நிலை தொட்டிகளின் அருகே தலா ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 30 ஆயிரம் கொள்ளளவு கொண்ட 2 கீழ்மட்ட தொட்டிகள் கட்டப்பட்டன. அதன்மூலம் காமராஜர் நீர்த்தேக்க தொட்டியிலிருந்து வரும் குடிநீரினை நிரப்ப முடிவு எடுக்கப்பட்டது. பின்பு கீழ்நிலை தொட்டியில் இருந்து மேல்நிலை தொட்டிக்கு நீரை ஏற்றுவது என தீர்மானிக்கப்பட்டது.

கடந்த 6 மாதம் நடந்த இப்பணிகளில் தற்போது பழனியாண்டவர் காலனி பகுதியில் மட்டும் முடிவடைந்தது. கடந்த வாரம் புதிய கீழ்நிலை தொட்டி திறக்கப்பட்டது. காந்தி நகர் தொட்டியில் பணிகள் முடிவடைந்து மின்சப்ளையும் பெறபட்டு பரிசோதனை முறையின் கீழ் தண்ணீர் ஏற்றப்பட்டு வருகிறது. இதன் மூலம் நீண்ட நாட்களாக குடிநீர் பிரச்னையில் சிக்கி தவித்த காந்திநகர் மற்றும் பழனியாண்டவர் காலனி மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

 


Page 203 of 390