Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

வந்தவாசி நகருக்கு குடிநீர் வழங்க ரூ.10 லட்சத்தில் புதிய கிணறு அமைக்கும் பணி

Print PDF

தினமணி 28.06.2010

வந்தவாசி நகருக்கு குடிநீர் வழங்க ரூ.10 லட்சத்தில் புதிய கிணறு அமைக்கும் பணி

வந்தவாசி, ஜூன் 28: வந்தவாசி நகருக்கு குடிநீர் வழங்க ரூ.10 லட்சத்தில் புதிய கிணறு அமைக்கும்பணி செய்யாறு ஆற்றில் நடந்து வருகிறது. இதனை ஆணையாளார் (பொறுப்பு) .மகாதேவன் நேரில் ஆய்வு செய்தார்.

வந்தவாசி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. இதில் 3,500 க்கும் அதிகமான குடிநீர்குழாய் இணைப்புகள் உள்ளன. மூன்று நாட்களுக்கு ஒரு முறை நகர மக்களுக்கு குடிநீர்விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

வந்தவாசி நகருக்கு 18 கிலோ மீட்டர்தூரமுள்ள செய்யாற்றில் இருந்து பைப் லைன் மூலம் குடிநீ£¢ கொண்டு வரப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் வரை குடிநீர் சீரானமுறையில் விநியோகித்து வந்தனார்ஆனால் செய்யாறு ஆற்றில் இருக்கும் தலைமை நீரேற்று நிலையத்தில் உள்ள நான்கு கிணறுகளிலும் குடிநீர் ஆதாரம் குறைந்ததால் மூன்று நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்பட்ட குடிநீர், தற்போது 6 நாட்களுக்கு ஒருமுறை அதுவும் குறைந்த நேரம் மட்டுமே வழங்கப்படுகிறது.

குடிநீர்தட்டுப்பாட்டை போக்க வறட்சி நிவாரண திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சத்தில் 5வதாக புதிய கிணறு அமைக்கும் பணி செய்யாறு ஆற்றில் நடந்து வருகிறது. இப்பணியை ஆணையாளார்(பொறுப்பு) .மகாதேவன் நேற்று பார்வையிட்டு பணியை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டார்.

 

முக்கடல் அணை குடிநீர் குழாயில் உடைப்பா? அதிகாரிகள் ஆய்வு

Print PDF

தினகரன் 22.06.2010

முக்கடல் அணை குடிநீர் குழாயில் உடைப்பா? அதிகாரிகள் ஆய்வு

நாகர்கோவில், ஜூன் 22: முக்கடலில் இருந்து நாகர்கோவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு வரும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதா என அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

நாகர்கோவில் நகருக்கு முக்கடல் அணை மற்றும் அனந்தனாறு சானலில் இருந்து குடிநீர் பெறப்பட்டு கிருஷ்ணன்கோவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு வருகிறது. பின்னர் இங்கிருந்து தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.

முக்கடல் அணையிலிருந்து கிருஷ்ணன்கோவில் இடையே உள்ள குழாய்களில் அவ்வப்போது உடைப்பு ஏற்பட்டு வருகிறது. ஒரு சில நாட்களில் இந்த உடைப்பு சரிசெய்யப்பட்டு விடும். இந்நிலையில் கடந்த பல நாட்களாக கிருஷ்ணன் கோயில் எதிரே சன்னதி தெருவில் உள்ள கழிவு நீரோடையில் அதிகளவில் தண்ணீர் தெளிந்த நிலையில் செல்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிருஷ்ணன்கோயில் முன்பு உள்ள சந்திப்பில் முக்கடலில் இருந்து குடிநீர் வரும் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு பின்னர் சரி செய்யப்பட்டது. எனவே தற்போதும் குழாய் உடைந்து அதிகளவில் குடிநீர் வெளியேறுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். குடிநீருக்காக நாகர்கோவில் தவித்து வரும் நிலையில் இவ்வாறு அதிகளவில் நீர் வெளியேறுவதை தடுக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் கூறியதாவது: கிருஷ்ணன்கோயில் பகுதியில் குழாய் உடைந்ததாக இதுவரை புகார் வரவில்லை. கிருஷ்ணன்கோவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து தினமும் காலை, மதியம் மற்றும் மாலையில் தொட்டிகளை சுத்தம் செய்து அதன் கழிவு நீரை வெளியேற்றுவார்கள். ஒருவேளை அந்த தண்ணீராக இருக்கலாம். எனினும் உடனடியாக இதுபற்றி அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

 

குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க உடனடி நடவடிக்கை

Print PDF

தினமணி 22.06.2010

குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க உடனடி நடவடிக்கை

திருநெல்வேலி, ஜூன் 21: திருநெல்வேலி மாநகர் பகுதியில் நிலவிவரும் குடிநீர்த் தட்டுப்பாட்டை தீர்க்க மாநகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

திருநெல்வேலி மாநகராட்சியின் சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் மேயர் அ.லெ. சுப்பிரமணியன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

துணை மேயர் கா. முத்துராமலிங்கம், ஆணையர் டாக்டர் சுப்பையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், உறுப்பினர்கள் பேசியது:

சைபுன்னிசா (திமுக): எனது 37-வது வார்டில் முறையான குடிநீர் விநியோகம் இல்லை. இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குடிநீர்ப்க் தட்டுப்பாட்டை கண்டித்து அடிக்கடி மறியல் போராட்டமும் நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து நான் அதிகாரிகளிடம் பலமுறை பேசியும் இதுவரை நடவடிக்கை இல்லை.

உறுப்பினர் ஆ. துரை (திமுக): எனது வார்டில் நீண்ட காலமாக குடிநீர் பிரச்னை இருந்து வருகிறது.

திம்மராஜபுரம் பகுதியில் இரண்டு தெருக்களுக்கு முறையாக குடிநீர் விநியோகம் செய்ய ஒரு வால்வை அமைத்தால் போதும். அதைக்கூட செய்ய காலதாமதம் செய்கின்றனர்.

தாமிரபரணி ஆற்றங்கரையில் இருந்துகொண்டு குடிநீருக்காக வாடுவது வருத்தம் அளிக்கிறது.

கோடை காலத்தில் தண்ணீர்த் தட்டுப்பாட்டை போக்க ஒரு வார்டுக்கு 2 சிறிய குடிநீர்த் தொட்டிகளை அமைக்கவும், ஆழ்குழாய் கிணறுகளை அமைக்கவும் திட்டமிடப்பட்டது.

ஆனால், அந்தப் பணிகளை குத்தகை எடுக்க ஒப்பந்தக்காரர்கள் எவரும் முன்வரவில்லை. ஒவ்வொரு தொட்டிக்கும் ரூ. 75 ஆயிரம் மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அந்த தொகை போதாது என ஒப்பந்தக்காரர்கள் கூறுகின்றனர். எனவே, சரியான மதிப்பீடு தயாரிக்கப்பட்டு தொகை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

அனுமதி இல்லாத குடிநீர் இணைப்புகள் அகற்றப்பட வேண்டும். அதைக் கண்காணிக்க ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு குழு அமைத்து கண்காணிக்க வேண்டும்.

அனுமதி இல்லாத இணைப்புகளை கொடுப்பதற்கு சில அதிகாரிகளும், மாமன்ற உறுப்பினர்களும் துணை போவதை தவிர்க்க வேண்டும்.

சிறிய மேல்நிலை குடிநீர்த் தொட்டி அமைக்க குறைவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என உறுப்பினர்

அப்துல் வகாப்பும் வலியுறுத்தினார்.

உறுப்பினர் பேபி கோபால்: கோடை காலத்தில் தண்ணீர் பிரச்னையை தீர்க்க வார்டுகளில் சிறிய மேல்நிலை குடிநீர்த் தொட்டியை அமைக்கும் பணியை குத்தகை எடுக்க எவரும் முன்வராததால் ஒவ்வொரு வார்டுக்கும் பிரித்து அந்தப் பணிக்கு ஒப்பந்தப்புள்ளி கோர வேண்டும்.

..சி. மைதானத்தில் நடைபாதை அமைக்கும் திட்டத்திற்கு மாநகராட்சி ஒப்புதல் அளிக்க வேண்டும்.

மேயர்: ..சி. மைதானத்தில் நடைபாதை அமைக்கும் திட்டத்திற்கு ஆட்சேபம் எதுவும் இல்லை. அந்த திட்டத்திற்கு முறையான அனுமதி கோரி இதுவரை பொதுப் பணித் துறையில் இருந்து கடிதம் வரவில்லை. கடிதம் வந்தால் அதை பரிசீலனை செய்து அனுமதி அளிக்கப்படும் என்றார்.

உறுப்பினர் சுப. சீதாராமன்: அந்த திட்டத்திற்கு அனுமதி கோரி பொதுப் பணித் துறையில் இருந்து வரைபடத்துடன் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதை பரிசீலித்து அனுமதி அளிக்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில், புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆணையர் சுப்பையனுக்கு மேயர், மண்டலத் தலைவர்கள் சுப. சீதாராமன், விஸ்வநாதன், எஸ்.எஸ். மைதீன். பூ. சுப்பிரமணியன் மற்றும் உறுப்பினர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.

 


Page 208 of 390