Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

குடிநீர் திட்ட பணிக்கு ரூ. 1 கோடி ஒதுக்கீடு மாவட்ட ஆட்சியர் தகவல்

Print PDF

தினகரன் 21.06.2010

குடிநீர் திட்ட பணிக்கு ரூ. 1 கோடி ஒதுக்கீடு மாவட்ட ஆட்சியர் தகவல்

கடலூர், ஜூன் 21: கடலூர் மாவட்ட ஆட்சியர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

கடலூர் மாவட்டத்தில் குடிநீர் பணிகளை மேற்கொள்வதற்கு ரூ.1 கோடி தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள மருதாடு, திருவந்திபுரம், ஆலப்பாக்கம் அம்பேத்கார் நகர், ராஜம் நகர், திருச்சோபுரம், ஆயிபுரம், கீழ்அனுவம்பட்டு, பின்னத்தூர், பாளையங்கோட்டை மேல், மேல்மூங்கிலடி, சி. தண்டேஸ்வரநல்லூர், கூடுவேலி, கொழை, வீராணந்தபுரம், சேப்பளாநத்தம் (தெற்கு), வெண்கரும்பூர்(காலணி), மங்களூர், ஒரங்கூர், கோ.பழவங்குடி ஆகிய 19 ஊராட்சிகளுக்கும் ரூ.50 லட்சமும், சிதம்பரம் நகராட்சிக்கு ரூ.18 லட்சமும் ,ஸ்ரீ முஷ்ணம், காட்டுமன்னார்கோயில், மேல்புவனகிரி, கிள்ளை, குறிஞ்சிப் பாடி, கெங்கை கொண்டான் ஆகிய 6 பேரூராட்சிகளுக்கு ரூ.32 லட்சமும் ஆக மொத் தம் ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட கிராம ஊராட்சிகள், பேரூராட்சி கள் மற்றும் நகராட்சிகளில் குடிநீர் திட்ட பணிகளை போர்க்கால அடிப்படையில் உடனடியாக மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பணி களை 45 நாட்களுக்குள் செய்து முடித்து குடிநீர் வழங்க வேண்டும் என உத்தரவிடப்படுகிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சிவகாசியில் தினமும் குடிநீர் சப்ளைக்கு ஏற்பாடு

Print PDF

தினமலர் 21.06.2010

சிவகாசியில் தினமும் குடிநீர் சப்ளைக்கு ஏற்பாடு

சிவகாசி : சிவகாசியில் தினமும் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சிவகாசி நகராட்சி துணைத்தலைவர் அசோகன், கமிஷனர் (பொறுப்பு) முருகன் மற்றும் கவுன்சிலர்கள் வெம்பக்கோட்டை அணை பகுதியில் உள்ள குடிநீர் வழங்கும் நீர் ஆதாரங்களை ஆய்வு செய்தனர். மழை காலம் துவங்கும் வரை சிவகாசியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் முன் ஏற்பாடு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம். இதனால் நான்கு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மேலும் சிவகாசி, விருதுநகர் நகராட்சிகளுக்காக புதிதாக தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு மதிப்பீடு செய்து அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இத் திட்டமும் நடைமுறைக்கு வந்தால் சிவகாசியில் தினமும் குடிநீர் வினியோகம் இருக்கும் என நகராட்சி துணை தலைவர் தெரிவித்தார்.

 

பாளை கேடிசி நகரில் குடிநீர் இணைப்புகளை முறைப்படுத்த நடவடிக்கை

Print PDF

தினகரன் 18.06.2010

பாளை கேடிசி நகரில் குடிநீர் இணைப்புகளை முறைப்படுத்த நடவடிக்கை

பாளை வி.எம்.சத்திரம், கே.டி.சி நகர் பகுதி வீடுகளில் குடிநீர் இணைப்பை முறைப்படுத்த கோரி மாநகராட்சி அதிகாரிகள் வீடு, வீடாக நோட்டீஸ் வழங்கினர்.

நெல்லை, ஜூன் 18: பாளை கேடிசி நகரில் அனுமதியற்ற குடிநீர் இணைப்புகளை முறைப்படுத்த அதிகாரிகள் நேற்று நடவடிக்கை மேற்கொண்டனர்.

நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட கேடிசி நகர் மற் றும் வி.எம்.சத்திரம் பகுதிகளில் நூற்றுக்கணக்கான அனுமதியற்ற குடிநீர் இணைப்புகள் இருந்தன. கடந்த ஓராண்டுக்கு முன்பு மாநகராட்சியால் இவை கண்டறியப்பட்டு இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. மீண்டும் தங்களுக்கு குடிநீர் இணைப்பு முறைப்படி வழங்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதன் அடிப்படையில் மாநகராட்சி, நகராட்சி மற் றும் பேரூராட்சிகளில் அனுமதியற்ற வீட்டு குடிநீர் இணைப்புகளுக்கு இருமடங்கு வைப்புத்தொகை வசூலித்து அவற்றை முறைப்படுத்த அரசு உத்தரவிட்டது. இதன் பேரில், நெல்லை மாநகராட்சியில் குடிநீர் விநி யோகம் துண்டிக்கப்பட்ட நபர்கள் கூடுதல் வைப்புத் தொகை செலுத்தி மீண்டும் இணைப்புகளை பெற வழி வகை செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கேடிசி நகர், வி.எம்.சத்திரம் ஆகிய பகுதிகளில் இரு நாட்கள் நடந்த சிறப்பு முகாம்களில் 68 பேர் உரிய தொகையை செலுத்தி இணைப்பு பெற்ற னர். மீதமுள்ள 166 பேர் முறையான இணைப்பு பெறக்கோரி நேற்று மாநகராட்சி அதிகாரிகள் 10 குழுக்களாக பிரிந்து, வீடு,வீடாக கட்ட வேண்டிய தொகை குறித்த நோட்டீஸ்களை அளித்தனர்.

உதவி செயற்பொறியாளர்கள் சாந்தி, சாமுவேல் செல்வராஜ், கருப்பசாமி, .ஆர்.. வெங்கட்ராமன், இளநிலை பொறியாளர் பைஜூ ஆகியோர் தலைமை யில் இக்குழுக்கள் ரகுமத்நகர், கேடிசி நகர், அப்துல்ரகுமான் நகர், வி.எம்.சத்திரம் ஆகிய இடங்களில் குடிநீர் இணைப்புகளை முறைப்படுத்த கேட்டு கொண்டது.

பொதுமக்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி குடிநீர் இணைப்புகளை முறைப்படுத்தி கொள்ள லாம். இதை தவறவிடும் பட்சத்தில், அனுமதியில்லாத இணைப்பு பெற்றவர்கள் சட்ட நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

10 குழுக்கள் அமைப்பு

 


Page 209 of 390