Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

சிறுவாணி சப்ளை அதிகரிப்பு ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் வினியோகம்

Print PDF

தினகரன் 18.06.2010

சிறுவாணி சப்ளை அதிகரிப்பு ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் வினியோகம்

கோவை, ஜூன் 18: சிறுவாணி குடிநீர் அளவு மேலும் 50 லட்சம் லிட்டர் அதிகரிக்கப்பட்டது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வழங்கப்படும் என மாநகராட்சி அறிவித்தது.

கோவை சிறுவாணி அணையில் தொடர் மழை நீடிக்கிறது. கடந்த 12ம் தேதியிலிருந்து தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக, நீர் மட்டம் 869. 15 மீட்டராக உயர்ந்தது.

அதாவது 6 நாளில், நீர் மட்டம் 3 மீட்டர் வரை உயர் ந்து. மழை தொடர்ந்து பெய்து கொண்டிருப்பதால் நீர் மட் டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறுவாணி நீர் மட்டம் உயர்ந்து வருவதால் குடிநீர் அளவு அதிகரிக்கப்பட்டது. இதுவரை தினமும் 5.6 கோடி லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. நேற்று முன் தினம் வரை 7 கோடி லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டது. நேற்று மேலும் கூடுதலாக 50 லட்சம் லிட்டர் குடிநீர் அதிகரிக்கப்பட்டது. மேலும் குடி நீர் விநியோகத்தை அதிகரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அணையிலிருந்து தினமும் 9 கோடி லிட்டர் குடிநீர் எடுக்கப்படுகிறது. வழியோர கிராமங்களுக்கு 1.5 கோடி லிட்டர் குடிநீர் தினமும் வழங்கப்படுகிறது.

கோவை மாநகர் பகுதிக ளுக்கு 4 நாளுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வழங்க மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா உத்தரவிட்டார்.

இதன்படி வழக்கமான குடிநீர் திட்டம் நடைமுறை க்கு வந்தது. குடிநீர் அளவு இனி எந்த பகுதியிலும் குறைக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பில்லூர் குடிநீர் விநியோகத்திற்குட்பட்ட சில பகுதியில் சிறுவாணி குடிநீரை மாற்றி விநியோகித்து வந்தனர். பில்லூர், சிறுவாணி அணை நீர் வரத்து சீராக இருப்பதால், குடிநீரை மாற்றி விநியோகிப்பது நிறுத்தப்பட்டது. முறையான குடிநீர் விநியோகம் நடக்கிறது.

இதுவரை தனி நபர் குடி நீர் அளவு 70 லிட்டர் ஆக இருந்தது. தற்போது தனிநபர் குடிநீர் அளவு 130 லிட்டராக அதிகரிக்கப்பட்டது.

 

கோவையில் இன்று முதல் குடிநீர் விநியோகம் மாற்றம்

Print PDF

தினமணி 18.06.2010

கோவையில் இன்று முதல் குடிநீர் விநியோகம் மாற்றம்

கோவை, ஜூன் 17: கோவை மாநகராட்சியில் சிறுவாணி குடிநீர் விநியோக பகுதிகளில் வெள்ளிக்கிழமை முதல் 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:

சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த வாரம் போதுமான அளவு மழை பெய்துள்ளதால் அணையின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால், அணையில் இருந்து கூடுதலாக குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது.

எனவே, கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட சிறுவாணி குடிநீர் விநியோகம் செய்யப்படும் மேற்கு, தெற்கு மண்டலங்களில் வெள்ளிக்கிழமை முதல் 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

சிறுவாணி அணையில் நீர்மட்டம் குறைந்ததால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு முதல் 4 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

 

கீழக்கரையில் வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பு ரூ166.63 லட்சம் மதீப்பீட்டில் காவிரி நீர் திட்டம் ஆணையர்

Print PDF

தினமலர் 18.06.2010

கீழக்கரையில் வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பு ரூ166.63 லட்சம் மதீப்பீட்டில் காவிரி நீர் திட்டம் ஆணையர்

கீழக்கரை: ""கீழக்கரை நகராட்சியில் குடிநீர் தட்டுப் பாட்டிற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் 166.63 லட்சம் மதிப்பீட்டில் குழாய்கள் பதிக்கும் பணி அடுத்த மாதம் (ஜூலை) துவங்கப்படுவதாகவும்,அதன் பின் வீடுகள் தோறும் குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும்,'' என, நகராட்சி ஆணையாளர் சுந்தரம் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது: கீழக்கரை நகராட்சியில் நான்கு மற்றும் ஐந்து லட்சம் லிட்டர் கொண்ட குடிநீர் தொட்டிகள் உள்ளன. தற்போது கூடுதலாக 10 லட்சம் லிட்டர் நீரை சேமிக்கும் வகையில் புதிய தொட்டி கட்டப்படுகிறது.பழைய குடிநீர் குழாய்கள் முற்றிலும் அகற்றப்பட்டு, புதிய குழாய்கள் பதிக்கும் பணியும் அடுத்த மாதம் துவங்கப்பட உள்ளது. 732 குடிநீர் இணைப்புகள் உள்ள நிலையில் அனைத்து வீடுகளுக்கும் இணைப்புகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள் ளது.வீடுகளுக்கு ஐந்து ஆயிரம்,கடைகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் முன்பணம் செலுத்த வேண்டும். தற்போது நகராட்சி அலுவலகத்தில் பெயர்கள் பதிவு நடைபெறுவதால் கட்டணத்தை செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம், என்றார்.நகராட்சி தலைவர் பஷீர் அகமது உடன் இருந்தார்.

 


Page 210 of 390