Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

ரூ.1.5 லட்சத்தில் குடிநீர் தொட்டி

Print PDF

தினகரன் 15.06.2010

ரூ.1.5 லட்சத்தில் குடிநீர் தொட்டி

பள்ளிபாளையம், ஜூன் 15: ஆலாம்பாளையம் பேரூராட்சி பகுதியில் உள்ள கரட்டாங்காடு பகுதியில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தில் புதிய குடிநீர் தொட்டி கட்டப்படுகிறது. இதற்கான கால்கோள் விழா நடந்தது. இதற்கு பேரூராட்சி மன்ற தலைவர் யுவராஜ் தலைமை தாங்கினார். இப்பணியை துவக்கி வைத்து மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் காந்திசெல்வன் பேசுகையில், ``60 ஆயிரம் லிட்டர் கொள் ளவு கொண்ட இந்த குடிநீர் தொட்டி ரூ.1.50 லட்சத்தில் கட்டப்படுகிறது. இன்னும் 3 மாதங்களுக்குள் தொட்டி கட்டி முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்`` என்றார். இந்நிகழ்ச்சியில், ஆலாம்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் கோவிந்தராஜ், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் நாகமணி சரவணன், கணேசன், செல்லதுரை, சாமிநாதன், தொலைபேசி ஆலோசனை குழு உறுப்பினர் நடனசபாபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

பேரூராட்சி பணியாளர்கள் சங்க துவக்க விழா

Print PDF

தினகரன் 15.06.2010

பேரூராட்சி பணியாளர்கள் சங்க துவக்க விழா

உளுந்தூர்பேட்டை, ஜூன் 15: தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர்கள் சங்கம் துவக்க விழா உளுந்தூர்பேட்டையில் நடைபெற்றது. தங்கவேல் தலைமை தாங்கினார். பாலமுருகன் வரவேற்றார். இக்கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டத் தலைவராக தங்கவேல், செயலாளர் பாலமுருகன், பொருளாளர் மயில்வாகணன், துணைத் தலைவர்கள் ராஜேந்திரன், ராஜேஷ், கலியமூர்த்தி, லட்சுமணன், சந்திரசேகர், லத்தீப், இணை செயலாளர்கள் விழிசெல்வன், மருதுபாண்டியன், பிரபு, ராஜீ, சரவணன், ஜாபர்கான் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சங்கர், தேவநேசன், வைத்தியலிங்கம், மல்லிகா, உஷா, ரவி, சுகுமாறன், பாலசுப்ரமணியன், சட்ட ஆலோசகர் அன்பழகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் 20 சதவிகித பதவி உயர்வினை அமுலாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் ஆனந்த், ஜேம்ஸ், தமிழரசி, புவனேஸ்வரி, சாந்தி, செந்தில், ரங்கன், ராஜேந்திரன், சுகுமாறன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

பில்லூர் 2&வது குடிநீர் திட்டம் நவீன கண்காணிப்புக்கு ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு

Print PDF

தினகரன் 15.06.2010

பில்லூர் 2&வது குடிநீர் திட்டம் நவீன கண்காணிப்புக்கு ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு

கோவை, ஜூன் 15: கோவை மாநகராட்சி சார்பில், பில்லூர் 2வது குடிநீர் திட்டம் ரூ.128.5 கோடி செலவில் செயல்படுத்தப்படுகிறது. மோட்டார் மூலம் குடிநீர் எடுத்தல், தண்ணீர் சுத்திகரிப்பு, பிர தான குழாய்க்கு வினி யோகம், மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் சேமிப்பு என பல்வேறு பணிகள் இடம்பெற்றுள்ளன. பணி கள் சில இடங்களில் முடியும் நிலை யில் உள்ளது.

பகுதி 2வது திட்டத்தின் கீழ் இத்திட்டத்துக்கு தமிழக அரசு ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில், ‘கண்காணிப்பு கட்டுப்பாட்டு, மற்றும் தகவல் சேகரிப்பு திட்டம்’(ஸ்கேடா) செயல்படுத்தப்படும். அணையில் தினமும் எடுக்கப்படும் குடி நீர் அளவு, குடிநீரில் தாதுப்பொருட்களின் அளவு, மாசு, கழிவாக வெளியேறும் குடிநீர், குடிநீர் பிரதான குழாயில் பாயும் வேகம், குழாயின் தன்மை, நீர் அழுத்தம், நீர் கசிவு, உடைப்பு, நீர் வெளியேற்றம் போன்றவற்றை துல்லியமாக அறியமுடியும். இதற்காக கணபதி நீர் தேக்க தொட்டி வளாகத்தில் கட்டுப்பாட்டு அறை அமையும். திட்டத்தில் உள்ள, 46 கி.மீ தூர பகிர் மான குழாய், கட்டன் மலை, கோம்பை மலையில் உள்ள குகை பாதை போன்றவற் றின் முழு தொகுப்புகளும் இந்த அறையுடன் இணைக்கப்படும்.

அதிக அழுத்தம் காரணமாக குழாய் உடைப்பு ஏற்படுவதை தடுப்பது போன்றவற்றை கட்டுபாட்டு அறையிலுள்ள கம்ப்யூட்டர் மூலம் கட்டுப்படுத்த முடி யும். இதற்காக டெலி மெட்ரி கருவி பொருத்தப்படும். ஏற்கனவே கோவையில் பில்லூர் முதல் குடிநீர் திட்டத்தில் ஸ்கேடா திட்டம் பயன்படுத்தப்படுகிறது.

கோவை மாநகராட்சி மேற்பார்வை பொறியாளர் பூபதி கூறுகையில், " ஸ்கேடா திட்டத்தை அமைக்க விரைவில் டெண்டர் விடப்படும், " என்றார்.

 


Page 213 of 390