Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

தி.மலை 7-வது வார்டில் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு நிரந்தர தீர்வு

Print PDF

தினமணி 14.06.2010

தி.மலை 7-வது வார்டில் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு நிரந்தர தீர்வு

திருவண்ணாமலை, ஜூன் 13: திருவண்ணாமலை நகராட்சி 7-வது வார்டு பே கோபுரத் தெரு பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட்டுள்ளது.

4-வது தெரு பகுதியில் நீண்ட நாள்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வந்தது. குடிநீர் பிரச்சினையை தீர்க்குமாறு அப்பகுதி மக்கள் நகர்மன்றத் தலைவரிடம் கோரிக்கை வைத்தனர். அதன்படி பெரியதெருவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் இருந்து பே கோபுரம் 4-வது தெருவுக்கு ரூ.2 லட்சம் செலவில் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் பணியை நகர்மன்றத் தலைவர் இரா.ஸ்ரீதரன் தொடங்கி வைத்தார் (படம்). துணைத் தலைவர் ஆர்.செல்வம், ஆணையர் ஆர்.சேகர், கவுன்சிலர் கார்த்திவேல்மாறன், சேட்டு முருகேசன், விஜயரங்கன், நாராயணன் கலந்து கொண்டனர்.

 

சேலத்தில் ஒரு வாரமாக வீணாகும் குடிநீர்: சரிசெய்ய மேலும் இரண்டு நாள்கள் ஆகும்

Print PDF

தினமணி 11.06.2010

சேலத்தில் ஒரு வாரமாக வீணாகும் குடிநீர்: சரிசெய்ய மேலும் இரண்டு நாள்கள் ஆகும்

சேலம், ஜூன் 10: சேலம் ஐந்து ரோடு, சாரதா கல்லூரி சாலை பகுதியில் சாலையில் பெருக்கெடுக்கும் குடிநீரை சரி செய்ய மேலும் இரண்டு நாள்கள் ஆகும் என்று, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேட்டூரில் இருந்து ஆத்தூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.

இந்த பிரதான குடிநீர் குழாயில் இருந்துதான் சேலம் மாநகருக்கும் தினசரி சுமார் 6 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது. இந்த பிரதான குழாய் சேலம் 5 ரோடு, சாரதா கல்லூரி சாலை வழியாகச் செல்கிறது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சென்னீஸ் கேட்வே ஹோட்டல் எதிரில் பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இது நாளடைவில் பெரிதாகிக் கொண்டே வந்து இதில் இருந்து அதிகளவில் குடிநீர் வெளியேறி சாலையில் பெருக்கெடுத்தது.

பிரதான குழாய் என்பதால் அதிக அழுத்தத்துடன் ஏராளமான அளவு தண்ணீர் வெளியேறி வீணாக சாக்கடையில் கலந்து வந்தது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சிக்குத் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே வியாழக்கிழமை குடிநீர் அதிகளவில் வெளியேறுவதைத் தடுக்காமல், மாநகராட்சி அதிகாரிகள் தண்ணீர் வெளியேறுவதை யாரும் அறிந்திராமல் மறைக்கும் விதமாக தனியாக குழாய் அமைத்து சாக்கடையில் வெளியேற்றியதாக கூறப்படுகிறது.

சேலம் மாநகரில் அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி மண்டலங்களில் ஏற்கெனவே 15 நாள்களுக்கு ஒரு முறையே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். மேலும் குடிநீரில் சாக்கடை கழிவுகள் கலப்பதால் காலரா, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்கள் பரவி அவற்றுக்காக அரசு சிறப்பு முகாம்கள் அமைத்து சிகிச்சை அளித்து வருகிறது.

இந்த நிலையில் குடிநீர் வெளியேற்றத்தைத் தடுக்காமல் வேடிக்கை பார்க்கும் மாநகராட்சி நிர்வாகத்துக்கு அப்பகுதி மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, தண்ணீர் வெளியேறுவது குறித்து பொதுமக்கள் ஏற்கெனவே தகவல் தெரிவித்தனர். ஆனால் அது பிரதான குழாய் என்பதால் அதில் பழுதுபார்க்கும் பணியைத் தொடங்கினால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்படும். மேலும் பணி முடிவடையவும் ஓரிரு நாள்கள் ஆகும். அத்துடன் மின் இணைப்பையும் துண்டிக்க வேண்டியது வரும். அடுத்த இரண்டு நாள்களில் மாதாந்திர மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

அந்த நாளில் பழுதுபார்க்கும் பணியை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்றனர். பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரை அப்பகுதி மக்கள் பிடித்துச் சென்று பயன்படுத்தி வருகின்றனர்.

 

மாநகராட்சி நடவடிக்கை 12 சிறப்பு குழுக்கள் மூலம் குடிநீர் தரம் தொடர் ஆய்வு

Print PDF

தினகரன் 10.06.2010

மாநகராட்சி நடவடிக்கை 12 சிறப்பு குழுக்கள் மூலம் குடிநீர் தரம் தொடர் ஆய்வு

சென்னை, ஜூன் 10: மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கை:

மேயர் மா. சுப்பிரமணியன் தலைமையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் நிரஞ்சன் மார்டி முன்னிலையில் ஒருங்கிணைப்புக் கூட்டம் மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது.

சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் சிவ்தாஸ் மீனா, மாநகராட்சி ஆணையர் ராஜேஷ்லக்கானி, துணை மேயர் ஆர். சத்தியபாமா. மன்ற ஆளுங்கட்சித் தலைவர் நா. ராமலிங்கம், எதிர்கட்சி தலைவர் சைதை ரவி, நிலைக்குழுத் தலைவர்கள், மண்டல குழு தலைவர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் பின்வரும் கருத்துகள் எடுத்துரைக்கப்பட்டது.

சென்னையில் கழிவு நீர் குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்குவதற்காக 11 அடைப்பு நீக்கும் இயந்திரங்கள் (ஜெட் ரோடிங் மெஷின்), 21 து£ர்வாரும் இயந்திரங்கள் (டீசில்டிங் மிஷின்) வாங்கப்பட்டுள்ளன. 25 கழிவு நீர் அடைப்பு நீக்கும் இயந்திரங்களும், 3 விரைவாக உறிஞ்சி து£ர்வாரும் இயந்திரங்களும், 17 து£ர்வாரும் இயந்திரங்கள் என மொத்தம் 45 இயந்திரங்கள் விரைவில் வாங்கப்படவுள்ளது. இப்பணிக்காக 21 கனரக வாகன ஓட்டுநர்கள் புதியதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையிலுள்ள 155 வார்டுகளிலும் மாநகராட்சி, குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள் இணைந்து குடிநீர் தரம் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடிநீரில் கழிவுநீர் கலப்பது தொடர்பான புகார் பெற்றவுடன், அந்த பகுதியில் பிரதான குழாயின் மூலம் வழங்கப்படும் குடிநீர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, லாரிகள் மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது.

மேலும் மேற்பார்வை பொறியாளர்கள் தலைமையில் 12 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு குடிநீர் தரம் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. 462 முட்டு தெருக்களில் குடிநீர் குழாய்களில் உள்ள கசடு நீக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

 


Page 216 of 390