Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

சிறுவாணியில் இருந்து கூடுதல் குடிநீர் கேட்கிறது மாநகராட்சி

Print PDF

தினகரன் 09.06.2010

சிறுவாணியில் இருந்து கூடுதல் குடிநீர் கேட்கிறது மாநகராட்சி

கோவை, ஜூன் 9: சிறுவாணியிலிருந்து கூடுதலாக 60 லட்சம் லிட்டர் குடிநீர் கே ட்டு காத்திருக்கிறது மாநகராட்சி நிர்வாகம்.

கோவையின் குடிநீராதாரமாக உள்ள சிறுவாணி அணையின் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகி றது. இன்னும் 3.5 மீட்டர் அளவிற்கு மட்டுமே நீர் தேங்கியுள்ளது.

தற்போது அணையிலிருந்து தினமும் 7 கோடி லிட்டர் குடிநீர் பெறப்படுகிறது. மாநகராட்சிக்கு தின மும் 5.6 கோடி லிட்டர் குடி நீரும், வழியோர கிராமங்களுக்கு 1.4 கோடி லிட்டர் குடிநீரும் வழங்கப்படுகிறது.

இப்போது வழங்கப்படும் அளவின் படி தினமும் குடிநீர் எடுத்தால் 10 முதல் 15 நாளுக்கு குடிநீர் விநியோகிக்க முடியும்.

ஆனால், மாநகராட்சி நிர்வாகம் இப்போது வழங்கப்படும் குடிநீர், 50 சதவீத பகுதிக்கு கூட குடிநீர் திரு ப்தி கரமாக வழங்கமுடியவில்லை. கூடுதலாக 60 லட்சம் லிட்டர் குடிநீர் தினமும் வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்தது.

அணையில் நீர் தேக்கம் அதிகமாக உள்ள காலங்க ளில் மாநகராட்சிக்கு 8.7 கோடி லிட்டர் குடிநீர் வழங் கப்பட்டு வந்தது.

அணை வறட்சியால் தினமும் 3.1 கோடி லிட்டர் அளவுக்கு குடிநீர் குறைக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவ மழை இன்னும் துவங்காமல் இருப்பதால் குடிநீர் வாரியத்தினர் கூடு தல் குடிநீருக்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

மாநகராட்சி கமிஷனர் தலைமையில் கூடுதல் குடி நீர் வழங்க 3 முறை ஆலோ சனை கூட்டம் நடத்தப்பட் டது. விரைவில் வழங்குவ தாக குடிநீர் வாரியத்தினர் சம்மதித்தனர்.

ஆனால் இப்போது கூடு தல் குடிநீர் வழங்கினால், செம்மொழி மாநாடு நடக் கும் நேரத்தில் பற்றாக்குறை ஏற்படும். பருவ மழை துவங் காவிட்டால் பாதிப்பு அதிக மாகி விடும். எனவே கூடு தல் குடிநீர் வழங்க முடி யாது என குடிநீர் வாரியத்தினர் மறுத்து வருகின்ற னர். கோவை நகரில் பகல் நேர வெப்ப நிலை அதிகமாகவே இருக்கிறது. வெயில் காரணமாக குடிநீர் பயன் பாடு அதிகமாக இருக்கிறது. குடிநீர் குறைப்பு நீடித்தால் மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். கணபதி உள்ளிட்ட பகுதி யில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். எனவே சிக் கலை சமாளிக்க கூடுதல் குடிநீர் வழங்க மாநகரா ட்சி நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது. ஒரு வாரத் தில் அணை முழு வறட்சி நிலையை எட்டி விடும் வாய்ப் புள்ளது. பருவ மழை தாமத மாகி வருவதால் குடிநீர் வாரியத்தினர் தவிப்படைந்துள்ளனர்.

 

விருந்தினர்களுக்கு அரை டம்ளர் தண்ணீர் கொடுங்கமும்பை பெண் மேயர் சொல்கிறார்

Print PDF

தினகரன் 09.06.2010

விருந்தினர்களுக்கு அரை டம்ளர் தண்ணீர் கொடுங்கமும்பை பெண் மேயர் சொல்கிறார்

மும்பை, ஜூன் 9: ‘வரும் விருந்தினர்களுக்கு ஒரு டம்ளருக்கு பதில் அரை டம்ளர் தண்ணீர் கொடுங்க போதும்

உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி, இப்படி ஒரு அருமையான யோசனை கூறியிருப்பவர் மும்பை பெண் மேயர்.

சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி, ஞாயிறன்று, மேயர் ஷ்ரதா யாதவ், தண்ணீர் சேமிப்புக்கு பிரசாரத்தை ஆரம்பித்து வைத்தார். பள்ளி, கல்லூரிகளில், தண்ணீரை சேமிக்கும் விளம்பர கட்அவுட்கள் வைக்க உத்தரவிட்டார்.

தன்னை பார்க்க வரும் விருந்தினர்களுக்கு முழு டம்ளர் தண்ணீர் வைப்பதை தவிர்த்து, அரை டம்ளர் தண்ணீர் வைக்கும்படி உத்தரவிட்டார். விருந்துகள் நடத்தும் ஓட்டல்களுக்கும் இப்படி ஒரு நூதன ஆர்டரை அவர் போட்டார். அதை பிரபல ஓட்டல்களும் கடைபிடிக்க ஆரம்பித்து விட்டன.பொது மக்களையும் இப்படி கடைபிடிக்க கேட்டுக்கொண்டார். இப்படி புதுமையான முறையில் குடிநீர் சேமிப்பு திட்டங்களை அமல்படுத்தும் மேயர், சமீபத்தில் ஒரு சர்ச்சையிலும் சிக்கிக்கொண்டார்.

மண்டல வாரியாக ஒரு வாரம் முழுக்க தண்ணீர் சப்ளை நிறுத்தம் செய்யலாம் என்று யோசனை தெரிவித்து அமல்படுத்த ஆரம்பித்தார். மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததும் வேறு வழியில்லாமல் அதை வாபஸ் பெற்றார்.

 

பராமரிப்பு பணி திருவாரூர் மாவட்டத்தில் 3 நாள் குடிநீர் நிறுத்தம்

Print PDF

தினகரன் 09.06.2010

பராமரிப்பு பணி திருவாரூர் மாவட்டத்தில் 3 நாள் குடிநீர் நிறுத்தம்

திருவாரூர், ஜூன் 9: பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்படும் திருவாரூர் மாவட்ட பகுதிகளுக்கு 3 நாட்களுக்கு குடிநீர் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

இதுபற்றி கலெக்டர் சந்திரசேகரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்படும் பகுதிகளில் வரும் 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே திருவாரூர் நகராட்சி, திருத்துறைப்பூண்டி நகராட்சி, முத்துப்பேட்டை பேரூராட்சி, நீடாமங்கலம், வலங்கைமான், மன்னார்குடி, கோட்டூர், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி ஆகிய ஒன்றிய பகுதிகளுக்குட்பட்ட பகுதிகளுக்கு வரும் 10ம் தேதி முதல் 3 நாள் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும்.

இந்த நாட்களில் சம்மந்தப்பட்ட நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் மாற்று ஏற்பாடு செய்து பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க வேண்டும் என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் திருவாரூர் பராமரிப்பு கோட்டத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே சம்மந்தப்பட்ட நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் பராமரிப்பு பணி நடைபெறும் பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்க ஒத்துழைக்கவும். முன்னதாக வரும் குடிநீரை சேமித்து வைத்து பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இவ்வாறு கலெக்டர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

 


Page 217 of 390