Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

சிறுவாணி நீர் மட்டம் சரிவு 10 நாள் வரை சமாளிக்கலாம்

Print PDF

தினகரன் 04.06.2010

சிறுவாணி நீர் மட்டம் சரிவு 10 நாள் வரை சமாளிக்கலாம்

கோவை, ஜூன் 4:சிறுவாணி அணையின் நீர் மட்டம், கடைசி கட்டத்தை எட்டி விட்டது. இன்னம் 4 மீட்டர் மட்டுமே குடிநீர் பெறமுடியும். நீரேற்று நிலையத்திற்கு, அணையின் இதர பகுதியிலிருந்து சிறு வாய்க் கால் அளவிற்கு மட்டுமே நீர் வந்து கொண்டிருக்கிறது. இன்னும் 2 மீட்டர் உயரத்திற்கு மட்டுமே தடையின்றி குடிநீர் பெறமுடியும். நீரேற்று நிலையத்தின் வால்வு பகுதியில் நீரை திருப்பி விட்டால் தான், கூடுதலாக ஒரு வாரத்திற்கு குடிநீர் பெற முடியும். 20ம் தேதி வரை சமாளிக்க முடியும். கூடுதலாக குடிநீர் எடுத்தால், அதாவது தினமும் 8 கோடி லிட்டர் அளவிற்கு குடிநீர் எடுத்தால், 15ம் தேதி வரை மட்டுமே குடிநீர் பெற முடியும்.

குடிநீர் வாரியத்தினர் கூறுகையில், "வரும் 10ம் தேதி பருவ மழை துவங்கி விடும். அணை வறண்டு போக வாய்ப்பில்லை. கடந்த ஆண்டும் இதே நிலை தான் இருந்தது. விரைவில் மழை பெய்து அணை நிரம்பும் என எதிர்பார்க்கிறோம்," என தெரிவித்தனர்.

 

குடிநீர் வினியோகம் நிறுத்தம்

Print PDF

தினமலர் 04.06.2010

குடிநீர் வினியோகம் நிறுத்தம்

கோவை : சிறுவாணி அணைக்குட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் ஜூன் 5 ம் தேதி மாநகராட்சியின் மூன்று மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் வினியோகம் இருக்காது.

 

கம்பம் புதிய குடிநீர் மேம்பாட்டு திட்டம்: அதிகாரிகள் ஆய்வு

Print PDF
தினமலர் 04.06.2010

கம்பம் புதிய குடிநீர் மேம்பாட்டு திட்டம்: அதிகாரிகள் ஆய்வு

கம்பம்: கம்பம் நகர் குடிநீர் மேம்பாட்டு திட்டம் குறித்து இறுதி முடிவு எடுக்க, நகராட்சிகளின் தலைமை பொறியாளர் ரகுநாதன் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டார். கம்பம் நகராட்சயில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க 2004 ல் புதிய திட்டம் ஒன்று ரூ. 4 கோடி மதிப்பில் தயாரிக்கப் பட்டது. இத்திட்டம் பல்வேறு கார ணங்களால் நிறைவேற்ற முடியாமல் போனது. ரூ.4 கோடிக்கு தயாரிக்கப்பட்ட திட்டத்தின் மதிப்பீடு தற்போது 16 கோடியாக உயர்ந்துள்ளது.

திட்டம் நிறைவேற்ற ஏற்ற வாய்ப்புகள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய நகராட்சிகளின் தலைமை பொறியாளர் ரகுநாதன், தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிறுவனத்தின் மேலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் கம்பம் வந்தனர். லோயர்கேம்பில் உள்ள குடிநீர் வாரியத்தின் பம்பிங் ஸ்டேஷன், பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்படும் வாய்க்கால், போர்பை டேம், ராட்சத பைப்புகள், இரைச்சல் பாலம் உள்ளிட்ட பல பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

இவர்களுடன் குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் முருகேசன், முத்தையா, உதவி செயற்பொறியாளர் தெய்வேந்திரன், நகராட்சி தலைவர் அம்பிகா, கமிஷனர் அய்யப்பன், ஓவர்சீயர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் சென்றனர்.

 


Page 220 of 390